ஆர்எஸ்எஸ் ஆட்சி

மோடி ஆட்சி என்பது 
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மீண்டும் பொறுப்பேற்க உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடிக்க வேண்டும் என்று கூறியிருப்பதை ஒருவேண்டுகோள் என்றோ, ஆலோசனை என்றோ கடந்து சென்று விட முடியாது.

ஆர்எஸ்எஸ் என்கிற பாசிச பாணி அமைப்பின் அரசியல் முகமாக விளங்குகிற பாஜகவிற்கு அதை நடத்துகிற நிறுவனம் இட்டுள்ள கட்டளை என்றே கருத வேண்டும்.
 அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டும் பணியை விரைவில் துவங்குவது குறித்து வெளிப்படையாக மோடி அறிவிக்க வேண்டும் என்று மோகன் பகவத் கட்டளையிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிற வாழ்வாதார பிரச்சனைகளை திசைதிருப்பும் வகையில் குறுகிய தேசிய இன வெறியைதூண்டிவிடும் வகையிலும், மக்களிடம் பகைமை தீயை மூட்டும் வகையிலும்தான் பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் அமைந்திருந்தது.

 இதன் மூலம் பெரும்பாலான வட மாநிலங்களில் அவர்களால் வெற்றி பெற முடிந்தது. இந்த நிலையில், ஒரு மிகப்பெரிய கலவரத்திற்கு கால்கோள் விழாநடத்தும் வகையில்தான் ஆர்எஸ்எஸ் மீண்டும் அயோத்தி பிரச்சனையை பற்ற வைத்துள்ளது.
அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்தது தொடர்பான வழக்கும், அந்த இடம் யாருக்கு உரியது என்பது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது.


இதனிடையே பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுமானப் பணியை துவக்கவேண்டும் என்று தூண்டிவிடுவது உச்சநீதிமன்றத்தையே துச்சமென மதிக்கும் அகம்பாவமாகும். வழக்கு முடியாத நிலையில் எப்படி கட்டுமானப் பணியை துவங்க முடியும்?
 அவர்களுடைய திட்டம் என்னவென்றால் மத்திய ஆட்சிஅதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தை புறக்கணிக்கவும், சட்டத்தை மீறவும் தயங்க மாட்டோம் என்பதுதான்.

பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்பு அத்வானிதலைமையில் ரதயாத்திரை நடத்தியும் அதன்பின்புபாபர் மசூதியை இடித்தும் இந்தியாவின் மதச்சார்பின்மை மீது மிகப்பெரிய தாக்குதலை தொடுத்தனர்.
இதன் மூலம் மக்களிடையே அடையாள அரசியலை புகுத்தினர்.
 இதே உத்தியை பாஜக தொடர்ந்துபயன்படுத்தி வருகிறது. அதை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டளை.

இன்னொரு இந்துத்துவா தலைவரான மொராரி பாபு என்பவர் ராமர் கோவில் கட்டும் பணிதாமதமானால் தடைகளை கடந்து அந்தப் பணியை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
 பகவத் கூறுவதன் உள்ளடக்கமும் இதுதான்.
நீதிமன்ற வழக்குகளை பற்றி கவலைப்படாமல் கோவில்கட்டுவது என்கிற பெயரில் மீண்டும் ஒரு கலவரத்தை நடத்துங்கள் என்று ஆர்எஸ்எஸ் கட்டளையிடுகிறது.

மோடி ஆட்சி என்பது மறைமுகஆர்எஸ்எஸ் ஆட்சிதான்.
 எனவே மதச்சார்பற்ற,ஜனநாயக சக்திகள் மிகுந்த விழிப்போடும், மிகுந்தஒற்றுமையோடும் இருக்க வேண்டிய காலமிது.
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------

மக்களாட்சி  என்பது 

வாக்கு எண்ணிக்கை மட்டுமல்ல!


இந்திய தேர்தல்கள் பற்றிய எதிர்பார்ப்புகள் முடிந்து முடிவுகள் வெளிவந்துவிட்டன.
தேர்தல்கள் பற்றிய பல அம்சங்கள் மற்றும் படிப்பினைகள் முழுமையாக வெளிவருவதற்கு நீண்ட காலம் ஆகலாம்.
எனினும் தேர்தல்கள் நடத்தப்படும் முறைகள் மற்றும் வெற்றி தோல்விகள் குறித்து சில சிந்தனைகளை உடனடியாக முன்வைப்பது தேவையாக உள்ளது.தேர்தலில் யார் வெற்றியாளர் என தீர்மானிக்கும் முறையை இந்தியா பிரிட்டனின் நடைமுறையை சுவீகரித்துக் கொண்டு அதனையே பின்பற்றுகிறது. யார் அதிகமாக வாக்குகளை பெறுகின்றனரோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
பெரும்பாலும் இவர்கள் பெரும்பான்மையான வாக்குகளை அதாவது 50ரூக்கும் அதிகமான வாக்குகளை பெறுவது இல்லை.
 தற்போதய தேர்தலில் கூட பா.ஜ.க. பெரும்பான்மை தொகுதிகளில் வென்றுள்ளது. ஆனால் 37ரூ வாக்குகளைத் தான் பெற்றுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 50ரூக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெல்வதற்கும் பலமுனை போட்டியில் 50ரூக்கும் குறைவான வாக்குகளை பெற்று வெல்வதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எதிர்கட்சிகள் முறையாக உணர்ந்திருந்தனவா?

எதிர்கட்சிகள் செய்யத் தவறியது என்ன?
ஒப்பீடு அளவில் பாரதிய ஜனதா கட்சியின் வலுவை உணர்ந்த பின்னணியில் எதிர்கட்சிகளிடையே இன்னும் கூடுதலான கூட்டணி பலம் இருந்திருக்க வேண்டுமா?
பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் கட்சிகளுடன் காங்கிரஸ் மேலும் ஒருங்கிணைந்த ஒப்பந்தங்களைக் கண்டிருக்க வேண்டுமா?
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்கட்சியுடன் மேலும் ஒருங்கிணைப்பு இருந்திருக்க வேண்டுமா?
ஆம் ஆத்மி கட்சியுடன் தில்லியில் கூட்டணி உருவாக்கியிருக்க வேண்டுமா?
மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர் கட்சியுடன் கூட்டு உருவாக்கியிருக்க வேண்டுமா?
பீகாரில் கூட்டணியை உருவாக்கிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் இளம் மாணவர் தலைவர் கன்னையா குமாருக்கு தொகுதியை மறுத்தது சரியானதா?
(கன்னையா குமார் லல்லுவின் மகனான தேஜஸ்வி யாதவுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்றுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது)அதன் மூலம் பா.ஜ.க.எதிர்ப்பு வாக்குகள் சிதறியிருக்க வேண்டுமா?
இப்படி பல கேள்விகளுக்கு பதில்கள் தேவைப்படுகின்றன.

இதற்கு சற்றும் குறையாத முக்கியத்துவம் கொண்ட இன்னொரு அம்சம் உள்ளது.
களத்தில் உருவான கூட்டணிகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ஒன்றுபட்ட மாற்றுத் திட்டத்தை உருவாக்கியிருக்க வேண்டாமா?
 “பாஜக எதிர்ப்பு” என்பது மட்டுமே போதுமானது என திருப்தி மனப்பான்மை கொண்டது சரியானதா? பா.ஜ.க.எதிர்ப்பு எனும் குரல் வலுவாக கேட்டது.
ஆனால் அந்த அளவிற்கு பாஜக கொள்கைகளுக்கு மாற்று திட்டம் அல்லது கருத்தாக்கம் அல்லது கோட்பாடுகள் குறித்து எந்த பொருத்தமான விவாதங்கள் அல்லது முன்மொழிவுகள் எதிர்கட்சிகளிடம் இருந்திருக்கவில்லை. பாஜகவின் அடிப்படை சித்தாந்தக் கோட்பாடான பெரும்பான்மை மதவெறி அடிப்படையிலான அடையாளம் என்பதற்கு எதிராக ஒரு மாற்று கருத்தாக்கம் முன்வைக்கப்படவில்லை.

இந்தியாவை இவ்வளவு ஆண்டுகள் ஒருங்கிணைந்து கட்டிக்காத்த காந்தி- தாகூர்- நேரு ஆகியோரின் ஒன்றுபட்ட இந்தியா எனும் கருத்தாக்கம் முன்வைக்கப்படவில்லை. மதங்களை கடந்த இந்த கருத்தாக்கம்தான் இந்தியாவை இவ்வளவு நாட்களாக ஒன்றிணைத்து காத்து வருகிறது.
ஆனால் இதன் முக்கியத்துவம் போதுமான அளவு உணரப்படவில்லை. பாஜக எதிர்ப்பு எனும் ஒற்றை அணுகுமுறையின் பாதகமான அம்சத்திற்கு எதிராக ஒரு சாதகமான மாற்றுக் கருத்தாக்கத்தை முன்வைப்பது என்பது ஆக்கப்பூர்வமான உத்வேகத்தை உருவாக்கியிருக்கும். ஹெகலின் மொழியில் சொல்வதனால் “மறுப்புக்கும் மறுப்பு” எனும் சூழலை உருவாக்கியிருக்கும்.

உலகம் பாஜக வெற்றியை எப்படி பார்க்கிறது?
பா.ஜ.க.வென்றுள்ளது. பா.ஜ.க. தலைமை மகிழ்ச்சி அடைவதற்கான எல்லா காரணிகளும் தேர்தல் முடிவுகளில் உள்ளன.
எனினும் பா.ஜ.க.தலைமை அல்லது இந்த வெற்றிக்கு காரணமான நீண்ட எதிர்பார்ப்புகள் மற்றும் பேராசைகளைக் கொண்ட நரேந்திர மோடி, இந்த வெற்றி விளைவித்த உலக அளவிலான எதிர்வினைகள் குறித்து ஏமாற்றம் அடைவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. உலக ஊடகங்களில் மிகப்பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன், வால் ஸ்டிரீட் ஜர்னல், அப்சர்வர், லீ மோன்டே,டை சீட், ஹார்டெஸ், பி.பி.சி., சி.என்.என். போன்ற பல முக்கிய ஊடகங்கள் இந்த வெற்றியை கடுமையாக விமர்சித்துள்ளன.
 இந்த வெற்றி எப்படிப் பெறப்பட்டது என்பது குறித்தும் இந்திய மக்களின் ஒரு பகுதியினர் மீது குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்பட்ட வெறுப்பு அரசியல் குறித்தும் விரிவான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 மோடிக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு அடிப்படையாக இருந்த கருத்தாக்கம் என்பது காந்தி – தாகூர் கருத்தாக்கங்களுக்கு முற்றிலும் முரண்பட்டது ஆகும்.

தேர்தல் போர் என்பது வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்க இயலாது. தேர்தலுக்கு பின்பு உலகம் எப்படி வெற்றியாளர்களை மதிப்பிடுகிறது என்பதும் மிக முக்கியம்.
 பா.ஜ.க.வின் நலவிரும்பிகள் வெற்றியுடன் சேர்த்து உலகம் இந்த வெற்றியை சாதகமாக மதிப்பிட வேண்டும் என எதிர்பார்ப்பதற்கு காரணம் இருந்திருக்கலாம்.
ஆனால் இந்த வெற்றியை உலகின் பல பகுதிகள் கொண்டாடவில்லை. இந்தியா பல அம்சங்களில் ஒரு வெற்றிகரமான ஜனநாயக நாடு. சில நாட்கள் முன்பு வரை அனைத்து அரசியல் கட்சிகளையும் சமமாக நடத்தும் அணுகுமுறை இருந்தது.
அனைத்து கட்சிகளையும் பாரபட்சமின்றி ஒரே மாதிரியாக மதிப்பிடும் அணுகுமுறை இருந்தது. எனினும் 2019 தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டன எனும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளில் நியாயமும் நம்பகத்தன்மையும் இருந்தன.

ஆளும் கட்சிக்கு சாதகமான தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம்
தேர்தல் ஆணையம் எடுத்த சில முடிவுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இவை!
ஆனால் தேர்தல் ஆணையம் மட்டுமல்ல; பல அரசாங்க அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளுக்கு பாரபட்சமாகவும் சமமற்ற வாய்ப்புகளை உருவாக்கியதும் இதில் அடங்கும்.
 உதாரணத்திற்கு மிக முக்கியமான தேர்தலுக்கு முந்தைய கட்டத்தில் தூர்தர்ஷன் காங்கிரசைவிட இரண்டு மடங்கு அதிகமான பிரச்சார நேரத்தை பாஜகவுக்கு கொடுத்தது.

 தேர்தல் காலத்தில் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்தும் தேசம் எனும் நற்பெயரை இந்தியா தக்க வைத்து கொள்ள வேண்டுமானால், உண்மையில் அந்த நற்பெயரை மீண்டும் திரும்ப பெற வேண்டுமானால் இந்த பாரபட்ச சமமற்ற போக்கு அகற்றப்பட வேண்டும்.
 அதுவும் குறிப்பாக இந்த பாரபட்சம் ஆளும் கட்சிக்கு சாதகமாக காட்டப்படுவது அறவே நிறுத்தப்பட வேண்டும்.
ஏனெனில் தேர்தல் ஆணையர்கள் உட்பட அரசு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் பெரிய அளவிற்கு ஆளும் கட்சிக்கு உள்ளது.

மேலும் தேர்தல் காலத்தில் பயன்படுத்தப்படும் நிதியைப் பெறுவதில் அசாதரணமான அசமத்துவம் அரசியல் கட்சிகளிடையே 2019ல் நிலவியது.
 காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளின் நிதியைவிட பா.ஜ.க.விற்கு பன்மடங்கு அதிகமான நிதி சேர்ந்தது. இத்தகைய பாரபட்சங்களையும் அசமத்துவ சூழல்களையும் தடுப்பதற்கு பொருத்தமான விதிகளை உருவாக்கும் தேவை மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவின் ஜனநாயக நம்பகத்தன்மைக்கு இது மிக முக்கியம் என்பது மட்டுமல்ல; தேர்தல் வெற்றியாளர் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறார் என்பதற்கும் இது மிக அவசியம்.

அநீதிகளை எதிர்த்து குரல் தரும் தார்மீக தைரியமுடைய மக்கள் இந்தியாவில் நிறையவே உள்ளனர். பொருளாதார, அரசியல், சமூக, கலாச்சார அநீதிகளை எதிர்த்து கருத்துகளை முன்வைப்பது தேர்தல் காலத்தில் மிக சுலபமான ஒன்று.
 எனினும் இந்த அநீதிகளை எதிர்த்த போராட்டம் நமது நாட்டில் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது.
 ஆனால் அநீதிக்கு எதிரான குரல்களை நெரிக்கும் முயற்சிகளும் தொடரவே செய்கின்றன. பேச்சுரிமைக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டுள்ளன. மாற்றுக் கருத்துகளை கூறுவோரை தேச துரோகிகள் என சில அதீத தேசிய வெறியர்கள் வகைப்படுத்துகின்றனர்.
 “நகர்ப்புற நக்சல்கள்” எனும் புது அடைமொழிகள் உருவாக்கப்படுகின்றன.
 மாற்று கருத்தாளர்கள் வீட்டுக்காவல் மற்றும் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். இந்திய நீதிமன்றங்கள் தலையிட்டு அரசாங்கத்தை கடிவாளம் போடுகின்றன.
எனினும் இந்தியாவில் உள்ள நீதி செயல்முறை என்பது மிக மெதுவாக இயங்குவதால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் மிகத் தாமதமாகவே கிடைக்கிறது. இந்துத்துவா இயக்கம் ஆட்சேபிக்கும் கருத்துகளை சொன்னதற்காக அறிவு ஜீவிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய அடக்குமுறைகளால் ஆளும் கட்சியின் தேர்தல் வெற்றியின் பெருமை மற்றும் நம்பகத்தன்மை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வென்ற பகுதியினர்தான் எத்தகைய ஆட்சியை நடத்த வேண்டும் என்பதையும் அந்த ஆட்சி உலகத்தின் பல பகுதியினரால் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதையும் பரிசீலனை செய்ய வேண்டும்.

ஜனநாயகம் என்பது வெறும் வாக்கு எண்ணிக்கை மட்டுமல்ல; அதனைவிட பல மடங்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ள கடுமையான பயிற்சி தேவை இல்லை!

மிழில் அ.அன்வர் உசேன்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?