செத்தும்கொடுத்தான் சீதக்காதி என்ற தமிழரைப்பற்றி படித்திருக்கிறோம்.
ஆனால் செத்து கெடுத்தான் என்ற கதையையும் கேட்டிருக்கிறோம்.
அக்கதையின் உண்மை உருதான் மோடி என்றால் தப்பே இல்லை.
ஆட்சியில் இருக்கையில்தான் தமிழ்நாட்டோட நலங்களை ,வளங்களை,நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக அழித்தார் என்றால்,ஆட்சியை விட்டு போகும் போதும் தனது கெடுமதியை விட்டு விடவில்லை மோடி.
16 உயிர்களை சுட்டுக்கொன்ற அணில் அகர்வாலின் வேதாந்தா உட்பட பல கர்பர்ட் நிறுவனங்களுக்கு காவிரி நெற்களஞ்சியப்பகுதியை அழிக்க ஆணை பிறப்பித்து விட்டார் மோடி.தேர்தல் இறுதிக்கட்ட பரப்புரை முடிந்தவுடன் தனது அழிவு வேலையை ஆரம்பித்த விட்டன கார்ப்பரேட் அழிவு சக்திகள்.
காவிரி டெல்டா பகுதியை பெட்ரோ- கெமிக்கல் மண்டலமாக மாற்ற மத்திய, மாநில
அரசுகள், விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி போலீஸ் படையுடன் வயல்களில் ஷேல்
கேஸ் ராட்சச குழாய்கள் பதிக்கும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.
நாகை மாவட்டம் சீர்காழி மாதானம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 30 கிமீ
தொலைவுக்கு ஷேல் கேஸ் எடுத்துச் செல்ல ஓஎன்ஜிசி கெயில் நிறுவனம் ராட்சச
குழாய்களை அமைக்கும் பணியில் கடந்த சில நாளாக ஈடுபட்டு வருகிறது.
விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான
காவலர்கள் துணையுடன் மிக தீவிரமாக குழாய்களை அமைத்து வருகிறது.
காவிரி
டெல்டா பகுதியில் தண்ணீரின்றி விவசாயம் கேளிவிக்குறியாகி வரும் நிலையில்
மிச்சமிருக்கும் விவசாயத்தையும் முற்றிலும் அழிக்கும் விதமாக மத்திய, மாநில
அரசுகள் பெட்ரோ- கெமிக்கல் மண்டலமாக அறிவித்து இயற்கை வளங்களை
கொள்ளையடித்துக் கொள்ள அனுமதியளித்துள்ளது.
விவசாயத்தை பாதுகாக்க
போராடுகிறவர்களை அடக்கி வழக்கு பதிவு செய்வது, மிரட்டுவது என்ற
அடக்குமுறையால் விவசாயிகளில் பெரும்பாலானோர் போராட தயங்கும் நிலையில் ஷேல்
கேஸ் எடுப்பதற்காக குழாய்களை பதிக்கும் பணியில் கெயில் நிறுவனம் ஈடுபட்டு
வருகிறது.
செம்பனார்கோவில் அருகேயுள்ள காளகஸ்திநாதபுரம், மேமாத்தூர்
பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலங்களை நாசமாக்கி தற்போது
குழாய்களை அமைத்து வருகின்றனர்.
எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை கண்டு
கொள்ளாமல் அடக்குமுறையோடு குழாய்களை பதிப்பதாகவும் உடனடியாக பணிகளை
நிறுத்தவில்லையெனில் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என அப்பகுதி விவசாயிகள்
கூறியுள்ளனர்.
4,000
கோடி ரூபாய்சாரதா ஊழல்.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'சாரதா'
என்ற நிதி நிறுவனம், சிட்பண்ட் மூலம், பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று,
திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த நிறுவனம், 4,000
கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த சாரதா நிறுவனம் மம்தா பானர்ஜியின் கட்சி தலைவர்களால் துவக்கப்பட்டது.மம்தாவுக்கு இதில் பங்குண்டு என்று தெரிகிறது.
இந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க,காவல்துறை அதிகாரி
ராஜீவ் குமார் தலைமையில், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவர் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டு ஊழலை மறைக்க முயற்சித்து அது தொடர்பான ஆர்வங்களை அழிக்க ஆரம்பிக்கிறார் என கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியதால்
இந்த
வழக்கை, 2014ல், சி.பி.ஐ.,க்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
'இந்த வழக்கு தொடர்பாக, சிறப்பு
விசாரணைக்குழு அளித்த ஆவணங்கள், ஆதாரங்கள், திருத்தப்பட்டவை,புதிதாக உருவாக்கப்பட்டவை .அதற்கு காவல்துறை அதிகாரி ராஜீவ் குமார் காரணம் ' என, சி.பி.ஐ.,
புகார் கூறியது.
இது தொடர்பாக விசாரிக்க, தற்போது, கோல்கட்டா போலீஸ்
கமிஷனராக உள்ள, ராஜீவ் குமார் வீட்டுக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில்
சென்றனர்.
ஆனால், கோல்கட்டா போலீசார், அவர்களை சிறை பிடித்தனர்.
மேலும்,
கோல்கட்டாவில் உள்ள,சி.பி.ஐ., அலுவலகத்தையும், மாநில போலீசார் சுற்றி
வளைத்தனர்.
'பழி வாங்கும் நோக்கில், சி.பி.ஐ., மூலம் மத்தியில் ஆளும்,
பா.ஜ., அரசு செயல்படுகிறது' என குற்றஞ்சாட்டி, முதல்வர் மம்தா பானர்ஜி,
திரிணாமுல் கட்சியினருடன் மூன்று நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த போராட்டத்தில் காவல் ஆணையர் ராஜீவ்குமார் உட்பட்ட சில குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு பரபரப்பை உண்டாக்கினர்.
சி.பி.ஐ., தொடர்ந்த
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அளித்த உத்தரவில், 'சி.பி.ஐ.,
அதிகாரிகள் முன், போலீஸ் கமிஷனர், ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும்.
பிரச்னைகளை தவிர்க்க, மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் இந்த விசாரணை
நடத்தப்பட வேண்டும். அதேசமயம், கைது நடவடிக்கை கூடாது' என, கூறியது.
கோல்கட்டா காவல் ஆணையாராகி இருந்த ராஜீவ்குமார், தற்போது குற்ற விசாரணை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்
செய்த மனுவில், ஆவணங்களை அழித்தது தொடர்பாக ராஜீவ்குமாருக்கு எதிராக
முகாந்திரம் இருப்பதால், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்துவது அவசியம்.
வழக்கில், மேலும் சில தகவலை பெற, அவரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும்
எனக்கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று,
உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராஜீவ்குமார் கைது
செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.
மேலும், 7 நாளுக்கு கைது தொடர்பாக
எந்த நடவடிக்கையும் சிபிஐ மேற்கொள்ளக்கூடாது.
7 நாளில் உரிய நீதிமன்றத்தை
அணுகி ராஜீவ்குமார் ஜாமின் பெற்று கொளளலாம் என உத்தரவிட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------- வாய் வெடித்து இறந்தவர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி
செய்துள்ளார். அப்போது அவரை மீட்ட உறவினர்கள் இவரைக் காப்பாற்ற
அம்மாநிலத்தில் உள்ள JN மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அபோது நடைபெற்ற சிகிச்சையின் போது யாரும் எதிர்பாராத விதமாக வாய் வெடித்து
இளம்பெண் ஒருவர் இறந்துள்ளார்.அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.
இது பற்றி மருத்துவர்கள் கூறும் போது : தற்கொலைக்கு முயற்சித்த இளம்பெண்
கந்தக அமிலம் குடித்திருக்க வேண்டும் அதனால் தான் சிகிச்சையின் போது அவரது
வாயில் ஆக்ஸிஜன் குழாய் வைக்கப்பட்டபொழுது வேதிமாற்றத்தினால் அவரது வாயில்
வெடிவிபத்து நிகழ்ந்தது என்று கூறியுள்ளார்.
இது அனைவரையும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோ தற்போது
சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
ஒரு நாள் ராசா?
தேனி மாவட்டம்
குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில்,
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயர் தேனி
நாடாளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைந்துள்ள
சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையொட்டி இங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டில், கோவிலுக்கு உபயம் அளித்தவர்கள்
பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
மறைக்கப்படுகிறது.
அதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்களின்
பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதில் யாரும் எதிர்பாராத விதமாக தேனி
நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் என்று
பொறிக்கப்பட்டிருந்தது.
இது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
இன்னும் வாக்கு எண்ணிக்கையே நடைபெறாத நிலையில், துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமாரை எப்படி தேனி எம்.பி. என
கல்வெட்டில் எழுதலாம் என எதிர்கட்சியினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும் அப்பகுதி மக்கள் பெயரை நீக்கவும் வலியுறுத்தினார்.
இதனிடையே செய்தி
ஊடகத்தின் வழியே பரவியதை அடுத்து எம்.பி ரவீந்திரநாத்குமார் என
வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
எந்த நம்பிக்கையில் முடிவு வரும் முன் நாடாளுமன்ற உறுப்பினர் என பெயரில்
இணைத்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்கள் புறக்கணிப்பார்கள் என்று
அறிந்து வாரணாசி சென்று மோடியின் காலில் தந்தையும் மகனும் விழுந்த
நம்பிக்கையா?
அல்லது தேனிக்கு ரகசியமாக தேர்தல் ஆணையம் கொண்டுவந்த வாக்குப்பதிவு பெட்டிகள் மீதான நம்பிக்கையா??
அவர்கள் நம்பிக்கை எப்படி இருந்தாலும்,அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கோவிலில் இப்படி அதிமுக கட்சிக்கு சார்பாக அரசு விதிகளை மீறி பாரதிய தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையில் தங்கள் அதிகார வரம்பை மீறி இப்படி கல்வெட்டு வைத்த திகரிகள் மீது கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை செய்ய தேர்தல் ஆணையம் ஆணையிட வேண்டும்.
உலகின்
மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ்
நேற்று(15.05.2019) மரணம் அடைந்தார்.
மரணமடைந்த அப்பாஸ் இலியிவ்க்கு 123
வயதாகும்.
ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான இங்குஷெத்தியாவில் 1896-ம்
ஆண்டு பிறந்தார்.
தற்போது அப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35
பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
1917 முதல் 1922 வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய
அப்பாஸ் இலியிவ், தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று,
டிராக்டர் டிரைவராகப்பணியாற்றிவந்தார்.
பச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும்
தினசரி உணவாக கொண்டு வாழ்ந்து வந்த அப்பாஸ் இலியிவ், நாள் ஒன்றுக்கு சுமார்
11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்.
அவருக்கு மது, புகை போன்ற
எந்த போதை பழக்கமம் இல்லை என்றும் இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை
என்றும் கூறப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒன்பது கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவர் பாஜகவினரின் கல்வி தகுதியை அவர்களுடைய பேச்சுக்களே
திட்டவட்டமாக சொல்லிவிடும் என்றாலும், பெறாத பட்டத்தை பெற்றதாக
கூறிக்கொண்டு வசமாக சிக்கிக்கொள்வதில் அவர்களுக்கு ஈடு அவர்களே.
முன்னதாக,
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியின்
‘யேல்’ பட்டம், டெல்லி பல்கலைக்கழக பட்டப்படிப்பு குறித்த புரட்டுகள் சமூக
ஊடகங்களில் சிரிப்பாய் சிரித்தன.
இப்போது மோடி வாங்கிய ‘அரசியல் அறிவியல்’
பட்டப்படிப்பு குறித்த செய்திகள் சந்தி சிரிக்கின்றன.
குஜராத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜெயந்த் பட்டேல்,
“நரேந்திர மோடி தனது பட்டப்படிப்பில் படித்ததாக கூறியிருக்கும் பாடங்கள்,
அப்போது பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே இல்லை” என்கிறார்.
இதுகுறித்து
தனது முகநூலில் எழுதியுள்ள பேராசிரியர், மோடி பட்டம் வாங்கியதாக கூறும்
காலக்கட்டத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.
மோடி தனது எம்.ஏ. அரசியல் அறிவியல் பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில்
அரசியல் அறிவியல் பாடத்தில் 62 மதிப்பெண்ணும்,
ஐரோப்பிய மற்றும் சமூக
அரசியல் சிந்தனைகள் என்ற பாடத்தில் 62 மதிப்பெண்ணும்,
நவீன இந்தியா/அரசியல்
பகுப்பாய்வு என்ற பாடத்தில் 69 மதிப்பெண்ணும்,
அரசியல் உளவியல் பாடத்தில்
67 மதிப்பெண்ணும் பெற்றதாக பிடிஐ செய்தி வெளியிட்டிருந்தது.
இதனை
சுட்டிக்காட்டி எழுதியிருக்கும் பேராசிரியர் ஜெயந்த பட்டேல், “என்னுடைய
அறிவுக்கு எட்டிய வரையில் பகுதி-2 ல் உள் அல்லது வெளி மாணவருக்கு அப்படியான
பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படவில்லை” என்கிறார்.
1969 முதல் 1983-ஆம்
ஆண்டு வரை குஜராத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார்
இவர்.
ஆனாலும் மாண்புமிகு பிரதமரின் மானத்தைக் காப்பாற்றும் வகையில் குஜராத்
பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மகேஷ் பட்டேல் இதை மறுக்கிறார்.
முப்பது
ஆண்டுகளுக்கு முன்பு இந்த மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்பட்டது என்றும்
அப்போதைய பாடத்திட்டத்தில் சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும் படிப்புகள்
சொல்லித்தரப்பட்டன என்றும் கூறுகிறார்.
சர்ச்சை கிளம்பியிருக்கும் நிலையில், மோடியின் பட்டப்படிப்பு குறித்த
தகவலை வெளியிடும்படி டெல்லி கல்வி துறை அமைச்சர் மனீஷ் சிசோடியா, டெல்லி
பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எழுதியிருக்கிறார்.
“டெல்லி பல்கலைக்கழகம்
மோடியின் பட்டத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
பல பல்கலைக்கழகங்கள்
பிரதமர் தங்கள் கல்லுரியில் படித்தவர் என சொல்லிக்கொள்வதில்
பெருமையடைவார்கள்.
எனவே, பல்கலைக்கழக இணையதளத்தில் மோடி பட்டத்தை பதிவேற்ற
வேண்டும்” என அந்தக் கடித்தத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆம் ஆத்மி, மோடியின் பட்டப்படிப்பு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி
வருகிறது.
1978-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் மோடியின் பெயரைக்கொண்ட
ஒருவர்தான் பட்டம் பெற்றிருக்கிறாரே அன்றி, பிரதமர் மோடி பட்டத்தை
பெறவில்லை என ஆம் ஆத்மி சொல்கிறது.
மோடி பெற்றதாக சொல்லப்படும் டெல்லி
பல்கலைக்கழக பட்டமும், குஜராத் பல்கலைக்கழக பட்டமும் புரட்டு என்கிறது
இக்கட்சி.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி பல்கலைக்கழகத்துக்கு
கடந்த வாரம் எழுதிய கடிதத்தில், மோடியின் பட்டம் குறித்த தகவலை
இணையதளத்தில் வெளியிட்டு, பட்டப்படிப்பு சான்றிதழ்கள் ‘பாதுகாப்பாக’
இருப்பதை உறுதிசெய்யுமாறு எழுதியிருந்தார்.
ஆனாலும் பொய் – புரட்டுகளாலே
ஆட்சியைப் பிடித்த பாஜக கும்பல் அதை மழுப்புகிறது.
ஒன்பது கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவர் ,ரெயில் நிலையம் வரும் 8 ஆண்டுகளுக்கு முன்னரே அதில் தேனீர் விற்றவர்,இமெயில்வரும் முன்னரே இமெயிலில் வண்ணப்படங்களை அனுப்பியவர்,அறிமுகமே ஆகாத டிஜிட்டல் காமிராவில் படம் எடுத்தவர், கல்லூரியிலேயே இல்லாத பாடங்களைப் படித்து பட்டம் வாங்குவதில் என்ன வியப்பு.
இதுதாங்க மோடிசீ படித்து (?) வாங்கிய பட்டம். உருவானதல்ல,உருவாக்கப்பட்டது.
கோட்சே விவகாரத்தில் பிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை,
சரித்திரம் பதில் சொல்லும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி
தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய் யம்
கட்சித் தலைவர் கமல்ஹாசன் ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு
இந்து.
அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார்.
இதுகுறித்து மோடி ‘‘ஒரு இந்துதீவிரவாதியாக இருக்க
முடியாது’’ என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேட்ட
கேள்விக்கு பதில் அளிக்கையில்,“ பிரதமருக்கு நான் பதில் சொல்ல
வேண்டியதில்லை.
சரித்திரம் பதில் சொல்லும், இந்தியாவின் முதல் தீவிரவாதி
ஒரு இந்து என நான் கூறியதில் தவறு இல்லை.
இது உருவான சர்ச்சை அல்ல,
உருவாக்கப்பட்ட சர்ச்சை’’ என்றார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------- வாயே திறக்காமல் ஒரு பேட்டி.
இந்திய மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா இருவரும்
கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
மேலும், கடந்த இரு
மக்களவை தேர்தல்களின்போது (2009, 2014), ஐபிஎல் போட்டிகளைக்கூட நடத்த
முடியவில்லை.
அரசாங்கம் வலுவாக இருந்தால், ஐபிஎல், ரம்சான், பள்ளித்
தேர்வுகள் என அனைத்தும் அமைதியாக நடக்கும் என்று கூறினார்.
செய்தியாளர்களின்
அனைத்து கேள்விகளுக்கும் அமித் ஷாவே பதிலளித்தார்.
அவருடன் மோடி
இருந்தாலும், அவர் எந்த கேள்விக்கும் வாயைத்திறந்து பதில் சொல்லவில்லை.
டிஜிட்டல் காமிரா,இமெயில் ,கவிதை எழுதுவது போன்று எதையும் உளறிவிடக்கூடாது. அல்லது அதைப்பற்றி கேள்விகள் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் இருக்கலாம். சந்திப்பின்போது பேசிய அமித் ஷா, இந்த அரசாங்கத்தின் திட்டங்கள் அனைத்து நிலை மக்களையும் சென்றடைந்ததாக கூறினார்.
ஏழைகளுக்காக
பல திட்டங்களை பாஜக கொண்டு வந்ததாக குறிப்பிட்ட அமித் ஷா, மக்கள் மீண்டும்
இந்த ஆட்சியே வர வேண்டும் என்று விரும்பவதாக தெரிவித்தார்.
பல கேள்விகள் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூரை பற்றி இருந்தது.
மலேகான் குண்டுவைத்து பலரைக்கொன்று குவித்து சிறையில் இருக்கும் பிரக்யா சிங் தாக்கூர் மரபாக புற்று நோய்க்கு சிகிசசை பெறுவதாகக்கூறி பரோலில் வந்து நீதித்துறையை ஏமாற்றி தேர்தலில்
போட்டியிடுவதும்,கோமியம் குடித்து தனது புற்று நோய் குணமானதாகக்கூறி பேட்டி கொடுக்க அதை அவரது மருத்துவர் மறுத்து அவருக்கு புர்ரு நோயே கிடையாது என்று கூறியது,கோட்சேவை தேச பக்தர்
என்று கூறியது
தொடர்பான கேள்விகள் ஒன்றுக்கு பதிலளித்த அமித் ஷா, "கோட்சேவை தேச பக்தர்
என்று கூறியது தொடர்பாக பிரக்யா சிங் தாக்கூருக்கு நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது.
10 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென்று
கோரப்பட்டுள்ளது.
அவர் பதிலளித்தவுடன் கட்சியின் ஒழங்கு நடவடிக்கைக்குழு
அதற்கேற்ப நடவடிக்கையை எடுக்கும்" என்று தெரிவித்தார்.
"ஊழல் இல்லாது நடந்த முதல் தேர்தல் இதுதான். நீண்ட காலத்திற்கு பிறகு மக்கள் இதுபோன்ற ஒரு தேர்தலை பார்த்துள்ளனர்.
2014ஆம்
ஆண்டு பாஜக ஆட்சி அமைத்த போது, எங்களிடம் ஆறு மாநில அரசுகள்தான் இருந்தன.
தற்போது 16 மாநிலங்களில் நாங்கள் ஆட்சி அமைத்துள்ளோம்.
நாடு முழுக்க (எந்த நாடு என்பதை சொல்லவேயில்லை.5 கோடி ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளோம்" என்றும் அமித் ஷா 'கதை'த்தார். மோடியிடம் பேட்டி என்று அமித் ஷாவிடம் பேட்டி எடுத்து வந்த நடுநிலை நக்கி ஊடகங்களே ராகுல் காந்தி கேள்விக்கு என்ன பதில் தரப்போகிறீர்கள்.?
----------------------------------------------------------------------------------------------------------------------------------- பிரதமராக 5 ஆண்டுகளில் முதன் முறையாக செய்தியாளர்களுக்கு மோடி பேட்டி!-செய்தி. பிரதமராக மோடியின் முதலும் கடைசியுமான பேட்டினு சொல்லுங்க.
-------------------------------------------------------------------------------------------------- "மோடி ஆட்சியின் திட்டங்களால் நாடு முழுவதும் 50 கோடி ஏழைகள் பயனடைந்துள்ளனர்!" - அமித்ஷா
முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி! ஒன்றிய அரசு சமீபத்தில் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதியும் உடனே ஒப்புதல் கொடுத்துள்ளார். வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம் மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக முஸ்லிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் மசூதிகள் இருக்கும் இடத்தை பிடுங்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது. நாட்டில் அதிகமான மற்றும் முக்கியமான கட்டிடங்கள் இருக்கும் நிலங்கள் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக இருக்கிறது. கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன? அந்த நிலம் பல்வேறு காலக்கட்டங்களில் பலரின் கைகளுக்கு மாறி இருக்கிறது. அந்த வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தென்மும்பையில் கட்டி இருக்கும் பல அடுக்கு சொகுசு மாளிகையான ஆன்டிலியா கட்டிடம் இருக்கும் நிலமும் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பணக்கார வீடாக பார்க்கப்படும் முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.15000 கோடியாகும். இந்த வீடு இருக்கும் நிலத்தை மு...
தமிழ் காமிக்ஸைப் புரட்டிப்போட்ட முத்து காமிக்ஸ்! தமிழில் காமிக்ஸ் என்றால் இரும்புக் கை மாயாவியைப் பற்றிப் பேசாமல் ஆரம்பிக்க முடியாது. இரும்புக் கை மாயாவியின் படத்தைப் பார்த்திராதவர்கள்கூட உச்சரிக்கும் மந்திரப் பெயராக அது புகழ்பெற்றிருக்கிறது. இரும்புக் கை மாயாவி ஏன் இப்படி கொண்டாடப்படுகிறது? மூன்று விஷயங்களை மட்டும் பார்ப்போம்: தமிழகத்தில் இரும்புக்கை மாயாவியின் சகாப்தம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போதும்கூட அதன் மறுபதிப்பைத் தேடுபவர்கள் உண்டு. சினிமா இயக்குநர்கள் பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், சிம்புதேவன் உள்ளிட்டோர் தங்களுடைய சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர். # எழுபது, எண்பதுகளில் இரும்புக்கை மாயாவியைப் போலவே தங்கக் கை மாயாவி, இரும்பு விரல் மாயாவி, தங்க விரல் மாயாவி, உலோகக் கை மாயாவி, நெருப்பு விரல் சிஐடி என ஏகப்பட்ட 'போலச் செய்யும்' கதாபாத்திரங்கள் வந்ததில் இருந்தே, இரும்புக் கை மாயாவி எவ்வளவு பிரபலம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். # தொடர்ந்து வந்த கதைகள் மாயாவியின் ஆளுமை, தமிழகத்தில் நிலைத்து நிற்க உதவி...
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...