கிருஷ்ணா - கோதாவரி
தமிழகத்தில் நடந்து முடிந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான ஓட்டுகளில், அதில் ஒவ்வொரு கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம், கூட்டணிக் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகித விவரங்கள் விரிவாகக் காணலாம்.
நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் பதிவான மொத்த வாக்குகள் 4.22 கோடி, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.91 கோடி. தமிழகத்தில் பதிவான வாக்குசதவிகிதம் 71.87. இது கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகளைவிடக் குறைவு. 2014-ல் மொத்த வாக்காளர்கள் 5.3 கோடி, பதிவான வாக்குகள் 4.3 கோடி. பதிவான வாக்கு சதவிகிதம் 73.82.
தி.மு.க கூட்டணி :
2014-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க 95
லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.
இது பதிவான மொத்த வாக்குகளில்திமுக பெற்றது
23.6 விழுக்காடாகும்.
ஆனால்அத்தேர்தலில் தி.மு.க ஒரு தொகுதியில்கூட
வெற்றிபெறவில்லை.
இந்தமுறை தி.மு.க தலைமையிலான கூட்டணியில்
இடம்பெற்றுள்ள கட்சிகள் 2.23 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளன.
இது பதிவான மொத்த வாக்குகளில் 52.64 விழுக்காடாகும்.
இதில் தி.மு.க மட்டும்
பெற்ற வாக்கு சதவிகிதம் 32.76 ஆகும்.
அ.தி.மு.க கூட்டணி:
2014-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க 1.79
கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில்
44.3 விழுக்காடு. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க தனித்துப் போட்டியிட்டு 37
தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆனால், நடந்து முடிந்த தேர்தலில்
அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மொத்தம் 1.28 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப்
பெற்றுள்ளது. இது பதிவான மொத்த வாக்குகளில் 30.28 விழுக்காடாகும். இதில்
அ.தி.மு.க பெற்ற வாக்கு சதவிகிதம் 18.48 ஆகும்.
காங்கிரஸ்:
தமிழகத்தில் 2014-ம் ஆண்டு 39
தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்போது 17
லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது.
இது பதிவான மொத்த
வாக்குகளில் 4.3 விழுக்காடு.
ஆனால், இந்தத் தேர்தலில் தி.மு.க-வுடன்
கூட்டணி வைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம்
12.76 ஆகும்.
பாஜக கூட்டணி:
2014-ம் ஆண்டு தேர்தலில் பி.ஜே.பி
கூட்டணியில், பி.ஜே.பி மட்டும் 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப்
பெற்றது.
அதன் வாக்கு சதவிகிதம் 5.5. அந்தக் கூட்டணியில் அப்போது
இடம்பெற்றிருந்த தே.மு.தி.க 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 வாக்குகளைப்
பெற்றது.
வாக்கு சதவிகிதம் 5.1. அதேகூட்டணியில் பா.ம.க 18 லட்சத்து 4
ஆயிரத்து 812 வாக்குகளைப் பெற்றது. வாக்கு சதவிகிதம் 4.4 ம.தி.மு.க 14
லட்சத்து 17 ஆயிரத்து 535 வாக்குகளைப் பெற்றது.
வாக்கு சதவிகிதம் 3.5.
மற்ற கட்சிகள்:
2014-ம் ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாகத்
தேர்தலைச் சந்தித்த ஆம் ஆத்மி கட்சி 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப்
பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 0.5 விழுக்காடாகும். விடுதலைச்
சிறுத்தைகள் கட்சிக்கு, 6,06,110 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சிக்கு
2,62,812 வாக்குகளும் கிடைத்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2014-ல்
2,20,614 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி 2,19,866
வாக்குகளையும் பெற்றன.
மக்கள் நீதி மய்யம்:
நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி
மய்யம் சந்தித்துள்ள முதல் மக்களவைத் தேர்தல் இதுதான்.கட்சி ஆரம்பித்து 13மாதங்களிலேயே இத்தேர்தலை சந்தித்துள்ளது.இந்தத் தேர்தலில் 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.
இது பதிவான மொத்த வாக்குகளில் 3.94 விழுக்காடு.
அ.ம.மு.க:
டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க
சந்தித்துள்ள முதல் மக்களவைத் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் அ.ம.மு.க ஒரு
லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இது பதிவான மொத்த
வாக்குகளில் 5.38 விழுக்காடு ஆகும்.
நாம் தமிழர் கட்சி :
2010-ம் ஆண்டு கட்சி தொடங்கிய
நாம் தமிழர் கட்சி 16 லட்சம் வாக்குகளைப்
பெற்றது.
இது பதிவான மொத்த வாக்குகளில் 3.99 விழுக்காடு ஆகும்.
2016-ம்
ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த
வாக்குகள் 4 லட்சத்து 58 ஆயிரத்து 104 இது பதிவான மொத்த வாக்குகளில் 1.1
விழுக்காடு.
நோட்டா - NOTA :
2014-ம் ஆண்டு நோட்டாவுக்கு 5 லட்சத்து 82 ஆயிரத்து 62 வாக்குகள் கிடைத்தன. இது பதிவான மொத்த வாக்குகளில் 1.4 விழுக்காடாகும்.
இந்த ஆண்டு நோட்டாவுக்கு 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது பதிவான மொத்த வாக்குகளில் 1.28 விழுக்காடாகும்.
கடந்த
தேர்தலைவிட இந்தத் தேர்தலில் நோட்டாவின் வாக்கு சதவிகிதம் பாமக,தேமுதிக ,பாஜக போல் குறைந்துள்ளது.
இதற்குக் காரணம், பல புதிய கட்சிகளின் வருகை என்றுகூடச் சொல்லலாம்.
![](https://images.assettype.com/kalaignarseithigal%2F2019-05%2F3f37bf6a-c866-4870-8bc4-9fec1b543476%2F61159516_2417827395116018_7959419829440479232_n.jpg?w=1200&auto=format%2Ccompress)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
புதிய பாஜக அமைச்சரவை
17வது லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடந்தது. ஓட்டு எண்ணிக்கை, 23ல் நடந்தது. இதில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, 353 இடங்களில் வென்று, ஆட்சியை தக்க வைத்தது.
புதிய மக்களவை உறுப்பினர்கள் முதல் கூட்டம் ஜூன், 6ல் துவங்கி, 15ம் தேதி வரைநடக்கும் என, தெரிகிறது.
மோடி தலைமையிலான புதிய அரசு, நாளை மறுநாள் பதவியேற்கிறது.
மத்திய அமைச்சர்களாக இருக்கும் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி உடல் நலம் சரியில்லை என தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்கள் வகித்த முக்கிய இலாகாக்கள் பிறருக்கு வழங்கப்பட உள்ளன.
அதில் உள்துறை அமைச்சராக அமித் ஷாவும்,வெளியுறவுத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானியும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராவார் என கூறப்படுவதால் பா.ஜ. தலைவராக பூபேந்திர யாதவ் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல அமைச்சர்களாக இருந்து சிறப்பாகசெயல்படாத சிலருக்கு அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என தெரிகிறது.
மேலும் கூட்டணி கட்சியினர் அதிமுக,பாமக போன்றவைகளுக்கும், பா.ஜ.க இளைஞர்களுக்கு அமைச்சரவையில் முக்கியமான இலாகாக்கள் வழங்கப்படும் எனவும் தெரிகிறது.
மலேகான் குண்டு வெடிப்பின்RSSன்
முக்கிய பெண் பயங்கரவாதியும்
தற்போதைய BJP.அரசின் MP.யுமான பிரக்யாசிங்.
"பாரிலிமென்ட்ல குண்டு வெச்சிடாதே தாயி என்னால ஓடமுடியாது "
---------------------------------------------------------------------------------------------------------------
கிருஷ்ணா - கோதாவரி ஆறுகள் இணைப்பு சாத்தியமா?தீர்வாகுமா?
"காவேரி நதி நீர் மேலாண்மை வாரியத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, இதே நிதின் கட்கரிதான் மத்தியில் நீர்வளத் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது ஏன் தமிழக நீர் தட்டுப்பாட்டை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?"