ஞாயிறு, 19 மே, 2019

பாரதீய தேர்தல் ஆணையர்கள்

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று பேர் கொண்ட அமைப்பு.
 தேர்தல் ஆணையத்தின் முக்கிய முடிவுகள், தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக இந்த மூன்று தேர்தல் ஆணையர்கள் கொண்ட குழுதான் இறுதி முடிவு எடுக்கும்.

தேர்தல் ஆணையத்தின் அனைத்து இறுதி முடிவுகளும் முடிந்தவரையில் ஒருமனதாக இருக்க வேண்டும் ஒருவேளை தேர்தல் ஆணையர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பெரும்பான்மை அடிப்படையில் முடிவுகள் தீர்மானிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய விதிமுறைகள் கூறுகின்றன.

தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் பெரும்பாலும் ஒருமனதாகவே எடுக்கப்படுகின்றன.

தற்போது ஏழாவது கட்டமாக நடைபெற்று வருகிற பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு வருவதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் முன்னாள் தேர்தல் ஆணையர்களுமே குற்றம் சாட்டி வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் விதத்தில் பிரசாரம் செய்ததற்காக மாயாவதி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நாள்கள் பிரசாரம் செய்ய தடைவிதித்தது.

ஆனால், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா மீதும் இருந்த அதே போன்ற புகார்களில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகக் குற்றச்சாட்டு இந்தியா முழுக்க எதிர்கட்சிகளால் ஆதாரங்களுடன் எழுப்பப்பட்டுள்ளது.  

அசோக் லாவாசா
தேர்தல் பிரசாரத்தில் மதத்தைப் பயன்படுத்தியது பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்குகள் கேட்டது எனப் பிரதமர் நரேந்திர மோடி மீது பல குற்றசாட்டுகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம் மோடியும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் எந்தவொரு தேர்தல் நடத்தை விதிகளையும் மீறவில்லை என அனைத்துக் குற்றசாட்டுகளையும் தள்ளுபடி செய்து பாஜகவுக்கு தடையின்மை சான்றளித்தது. 
இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறானது என பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்படவில்லை என்றும் பெரும்பான்மை அடிப்படையிலே எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

 ஆனால் மோடி ,பாஜக ஆதரவாளர்களான தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா பிரதமருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்க மற்றுமொரு தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா தவறு என முரண்பட்டு பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றார்.

ஆனால் தேர்தல் ஆணையத்தின் இறுதி ஆணையில் மூவர் கருத்துக்களும் பதிவு செய்யவேண்டிய விதிப்படி அசோக் லாவாசாவின் மாற்றுக் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை.

 தேர்தல் ஆணையத்தின் இறுதி உத்தரவில் தன்னுடைய மாற்றுக் கருத்தைப் பதிவு செய்வது விதி என்றும் அதைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அசோக் லாவாசா பலமுறை கடிதம் எழுதியுள்ளார். அதை தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கண்டுகொள்ளவே இல்லை. லாவாசா கடிதங்கள் அனைத்தும் குப்பைக்கூடைக்குத்தான் போய் சேர்ந்தன.

இதில் எந்தக் கடிதத்துக்கும் சரியான பதில் கிடைக்காததால் சுயமரியாதை மேலெழும்ப தேர்தல் ஆணையர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள அசோக் லாவாசா மறுத்துவிட்டார்.
 இந்திய தேர்தல் ஆணையம் பாரதீய தேர்தல் அணியமாகி பாஜகவுக்கு சார்பாக மட்டுமே செயல்படும் நிலையில்,தனது முடிவுகள் எதையும் கண்டுகொள்ளாமல் பாஜகவை சேர்ந்த இரு தேர்தல் அனைவர்களும் செயல்படுவதுடன்,தனது முடிவை பதிவும் செய்யாமல் அலட்சியப்படுத்துகின்றனர்.அப்படிப்பட்ட நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டு அவமானப்படுவதை தவிர்க்கவே இந்த முடிவை வாலாசா எடுத்ததாக கூறியுள்ளார்.
இதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்தின் நேர்மையற்ற ,நடுநிலையற்ற போக்கில் தனக்கு எந்தவிதப்பங்குமில்லை என்பதை வெளியுலகிற்கு உணர்த்தலாம்  என்பதே அவர் நிலை.

 தற்போது அதற்கு விளக்கம் தெரிவித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா “தேர்தல் ஆணையர்கள் அனைவரும் ஒரே கருத்துடன் இருக்க வேண்டியது அவசியமில்லை."என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லாவாசாவும் , பாரதீய தேர்தல் ஆணையர்கள் சுனில் அரோரா,சுசில் சந்திராவும்.   

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 கடந்த 5 ஆண்டுகளில் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கப்போவதாக அறிவிப்பு வந்தவுடன் ஊடக உலகம் பரபரத்தது.2014-ம் ஆண்டு மே 26-ம் தேதிக்குப் பிறகு செய்தியாளர்களைப் பிரதமர் மோடி இப்போதுதான் சந்திக்கிறார்'.
எனவே, டெலிகிராப்பின் ஆசிரியர்  குழு, மோடியின் பேட்டிக்கு முதல் பக்கத்தில் இடம் ஒதுக்கியிருந்தது.

ஆனால், செய்தியாளர்களின் கேள்விக்கு அமித் ஷா தான் பதில் தந்தார்.மோடி கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு சோகமாக அமர்ந்திருந்தார்.

இதைச் சுட்டிக்காட்டும் வகையில், டெலிகிராப் முன் பக்கத்தில் மோடி அமித்ஷாவை நோக்கி கை காட்டும் 7 புகைப்படங்களைப் பல்வேறு முக பாவனைகளுடன் பிரசுரித்துள்ளது.

புகைப்படங்களுக்கு மேலே, பிரதமர் வாய் திறக்கவில்லை என்பதைக் குறிக்கும் வகையில், ஒலி எழுப்பாதே குறியீட்டுடன் டெலிகிராப் வெளியிட்டுள்ளது.
மோடி பேசாத காரணத்தால்,  அவரின் பேட்டிக்கு என்று ஒதுக்கப்பட்ட மொத்த இடத்தையும் காலியாக விட்டுவிட்டது.

அதோடு, 'பிரதமரின் பிரஸ்மீட் தேசத்தைப் பேச விடாமல் செய்துவிட்டது. 1817 நாள்கள் கழித்து மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். 
2014-ம் ஆண்டு மே 26-ம் தேதிக்குப் பிறகு செய்தியாளர்களைப் பிரதமர் மோடி இப்போதுதான் வெறுமனே சந்தித்தார் ' என்று புகைப் படங்களின் மேல் குறிப்பாக  டெலிகிராப் பத்திரிகை எழுதியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்று .பறி போன நாற்காலிக்காக
இன்று டாடி. பறி போகும் நாற்காலிக்காகந்தியாவின் அதிநவீன குகை.......
மோடி ஒரு முனிவரை போல் தவத்தில் அமர்ந்து தேர்தலின் இறுதி தருவாயில் ஒரு காவி பில்டப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார், இது என்னடா தவ வாழ்க்கைக்கு வந்த சோதனை என்று கொஞ்சம் தேடி அலசினேன்....
இந்த குகை கேதர்நாத்தில் இருந்து 1.5கிமி தொலைவில் அமைந்துள்ளது.
சவுபாரியா ஏரியின் அருகில் இருக்கும் இந்த குகையை நீங்கள் பார்த்தால் அசந்து போவீர்கள்.
இந்த குகை 5 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்டது, இந்த குகைக்கு அருகில் இருக்கும் உரேதா கிராமத்தில் இருந்து மின்சாரம் வருகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த குகையில் DSPT தொலைபேசி இணைப்பு பொறுத்தப்பட்டுள்ளது. இந்த குகைக்கு வெளியே ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த குகையில் அருகில் ஒரு சொகுசு படுக்கையும், நவீன கழிவறையும் அமைக்கப்பட்டுள்ளது. ஜிண்டால் நிறுவனத்தின் முழுமையான நிதியில் Wood Stone Company இந்த குகையின் பனிகளை 2018 ஏப்ரலில் தொடங்கியது.

காடுகளிலும்,மலைகளிலும் தவம் ஏற்றும் முனிவர்களை சுற்றி பாம்பு புற்று வந்ததாகக் கதையெல்லாம் படித்திருப்போம்.

இன்று எழுத்தாயின் மகன் தவத்தை பார்த்தால் புல்லரிக்கிறது.பிரதமர் பதவியில் இருந்து கொண்டு மக்கள் நலனைப்பார்க்காமல் கண் மூடி கார்பரேட்களைப்பற்றி மட்டும் தவமிருந்த மோடிக்கு நாற்காலி பறி போய்விடுமோ என்ற பயமே இத்தியானதுக்கு கரணம்.பன்னிருக்கும் டாடிக்கும் அண்ணா வித்தியாசம் ?
ஜன்னல்,மெத்தைவைத்த கட்டிலுடன் கூடிய குகை.குளிர் அதிகம் என்பதால்தான் ஏ .சி.வைக்கவில்லையாம்.
 மோடியின் அருந்தவம்.இந்திய ஊடகப்பார்வையிலே.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------                                                                          
------------------------------------------------------------------------------------------------------------------------------------