வாக்கு எண்ணிக்கையாவது

ர்மையாக நடக்கட்டும்
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப் பதிவு முடிந்தவுடன் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பாசிச சக்திகளின் வழிகாட்டுதலில் செயல்படும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிமிகப்பெரிய வெற்றியை பெறும் என பெரும்பாலான கணிப்புகள் கூறுகின்றன. மதச்சார்பற்ற ஆதரவாளர்களிடம் இது பெருத்த ஏமாற்றத்தை விளைவித்துள்ளது. எனினும் கடந்த கால இத்தகைய கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே அமைந்தன என்பதையும் இந்த கணிப்புகள் கார்ப்பரேட் முதலாளிகளின் தலைமையிலான ஊடகங்களின் முன்மொழிவு என்பதையும் நினைவில் கொள்வது மிக அவசியம் ஆகும்.
பொய்த்துப் போன கடந்தகால கணிப்புகள் 
மிகச் சமீப காலத்தில் இத்தகைய கணிப்புகளின் உண்மைத் தன்மை குறித்து அறிவது அவசியம் ஆகும். 2004ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியில் அமரும் என அனைத்து கணிப்புகளும் கூறின.ஆனால் முடிவுகள் அதற்கு நேர்மாறாக அமைந்தன. இதனை கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து அறியலாம்:
ஊடக பா.ஜ.க. காங்கிரஸ் பா.ஜ.க. /காங்.
பெயர் கூட்டணி கூட்டணி அல்லாத கட்சிகள்
ஆஜ்தக்
- ஓ.ஆர்.ஜி.மார்க் 248 190 105
என்.டி.டி.வி-

இந்தியன்
எக்ஸ்பிரஸ்
-நீல்சன் 230 190 100

சகாரா-டி.ஆர்.எஸ். 263 171 92
ஸ்டார் நியூஸ்

- சி வோட்டர் 263 174 86

ஜீ நியூஸ் 249 176 117

தேர்தல் முடிவுகள் 187 219 137
பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை இழந்தது. இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு தர காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. அதிகபட்சமாக 263 தொகுதிகள் பா.ஜ.க. கூட்டணிக்கு கணிக்கப்பட்டன. ஆனால் பா.ஜ.க. 200ஐ தொடகூட முடியவில்லை.2009ம் ஆண்டு தேர்தல்கள் குறித்த கணிப்புகளும் இதே போல பொய்த்து போயின என்பதை கீழ்க்கண்ட விவரங்கள் தெரிவிக்கின்றன:
ஊடக பா.ஜ.க. காங்கிரஸ் பா.ஜ.க. /காங்.
பெயர் கூட்டணி கூட்டணி அல்லாத கட்சிகள்
ஸ்டார்
நியூஸ்- நீல்சன் 197 199 136

சி.என்.என்.
- ஐ.பி.என் 165 185 165

என்.டி.டி.வி 177 216 150

ஹெட் லைன்ஸ்
டுடே 180 191 172

நியூஸ் எக்ஸ் 199 191 172

img

டைம்ஸ் நவ் 183 198 162

தேர்தல்
முடிவுகள் 159 262 79
பா.ஜ.க.கூட்டணியும் காங்கிரஸ் கூட்டணியும் சமபலத்தில் உள்ளதாக பெரும்பாலான கணிப்புகள் கூறின. ஆனால் முடிவுகள் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய தோல்வியை அளித்தன. கணிப்புகளைவிட மிக அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. அதே போல பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத கட்சிகள் 172 தொகுதிகள்கைப்பற்றும் என கணிப்புகள் கூறின. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக இருந்தன. இதற்கு நேர்மாறாக 2014ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 148 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கணிப்புகள் கூறின. ஆனால் காங்கிரஸ் வெறும் 59 தொகுதிகளில்தான் வென்றது.
சட்டமன்ற தேர்தல்களிலும் ஊடகங்களின் கணிப்புகள் தவறாக அமைந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. 2017ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் தேர்தலில் ஊடகங்களின் கணிப்புகளுக்கும் உண்மையான முடிவுகளுக்கும் இடையே உள்ள பெருத்த வேறுபாடுகளை கீழே காணலாம்:\
ஆம் ஆத்மி காங்கிரஸ் பா.ஜக.-
அகாலிதள்

நியூஸ் 24- சாணக்யா 45 45 4

இண்டியா டுடே 42 62 4

இண்டியா டி.வி.- சி வோட்டர் 59 41 4

தேர்தல் முடிவுகள் 22 77 18
ஆம் ஆத்மிக்கு 59 தொகுதிகள் வரை கிடைக்கும் என கணிப்புகள் கூறின. ஆனால் 22 தொகுதிகள்தான் கிடைத்தன. ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சி அமைக்கும் என கணிப்புகள் கூறின. ஆனால் காங்கிரஸ்தான் ஆட்சி அமைத்தது.
விருப்பு வெறுப்பு இன்றி கணிப்புகள் உள்ளனவா?
கருத்துக் கணிப்புகள் அல்லது தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் எனப்படும் கணிப்புகள் இரண்டு முக்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
1) விருப்பு வெறுப்பின்றி கணிப்புகள் நடத்தப்பட வேண்டும்.
2) இதற்கான SAMPLE SIZE எனப்படும் மாதிரி வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது மிக கவனமாக வடிவமைக்கப்பட வேண்டும்.
இவை இரண்டிலுமே இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் பொருத்தமற்ற முறையில் செயல்படுகின்றன எனும் விமர்சனம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்திய காட்சி ஊடகங்கள் விருப்புவெறுப்பின்றி கணிப்புகளை நடத்தின என்பதை சிறிதளவுகூட நம்பமுடியாத சூழல்தான் தற்பொழுது உள்ளது. உதாரணத்திற்கு மோடியின் குரலை அப்பட்டமாக எதிரொலிக்கும் ரிபப்ளிக் டி.வி. அல்லது மோடியின் ஆட்சியில் அபரிமிதமாக சலுகைகள் பெற்ற முகேஷ் அம்பானியின் நியூஸ் 18போன்ற ஊடகங்கள் நடுநிலையுடன் இந்த கணிப்புகளை நடத்தியது என்பதை எவராவது நம்ப முடியுமா? முகேஷ் அம்பானி ஒரு முறை “மோடிஜி காந்திஜிக்கு இணையானவர்” என பேசியதை நினைவில் கொள்வது அவசியம்.ஆகவே பிரதான காட்சி ஊடகங்கள் விருப்பு வெறுப்பின்றிகணிப்புகளை முன்வைத்தன என்பது நம்புவது கடினமானது.கணிப்புகள் பொய்த்து போவதற்கு இன்னொரு முக்கியக் காரணம், இந்திய வாக்காளர்களிடையே நிலவும்பல்வேறு சமூக மற்றும் வாழ்வியல் நிலைமைகளும் அதன் விளைவாக உருவாகும் பன்முகத்தன்மை கொண்ட சிந்தனைப் போக்குகளும் ஆகும். ஒரு சட்டமன்றதொகுதியை எடுத்துக் கொண்டால் வாக்காளர்களின் பாலினம், வயது, மதம், சாதி, அவற்றின் உட்பிரிவு, தொழில், கல்வி போன்ற பல அம்சங்களை அடிப்படையாக கொண்டு விகிதாச்சார அடிப்படையில் மாதிரி வாக்காளர்களை தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது. அத்தகைய வாக்காளர்கள் தயக்கம் அல்லது பயமின்றி தமது கருத்தை கூறும் சூழல் இருப்பதும் அவசியம்.
உதாரணத்திற்கு உ.பி.யில் ஒரு முஸ்லிம் அல்லது தலித் வாக்காளர் பா.ஜ.க.விற்கு வாக்களிக்கவில்லை எனதைரியமாக கூறுவதற்கான சூழல் உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே! அத்தகைய சூழலில் ஊடகங்களிடம் மாதிரி வாக்காளர்கள் கூறுவது உண்மையா என்பதே ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றாகும்.பெரும்பாலான சமயங்களில் ஊடகங்கள் பொருத்தமான மாதிரி வாக்காளர்களின் பட்டியலை வடிவமைப்பது இல்லை எனும் விமர்சனம் ஆழமாக உள்ளது. இந்த மாதிரி வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது ஒரு தொகுதிக்கு 500 அல்லது 1000 என்பது மிக மிகக் குறைவானஒன்றாகும். மாதிரி வாக்காளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் குறிப்பிட்டதொகுதியின் சமூக வாழ்வியல் அம்சங்களை விகிதாச்சார அளவில் போதுமான அளவிற்கு பிரதிபலிக்கும் வகையிலும் அமைய வேண்டும். இந்த அம்சத்தில் ஊடகங்கள் பெரும்பாலும் கவனம் செலுத்துவது இல்லை!
முரண்பாடான கணிப்புகள்
தற்போதைய கணிப்புகளில் கூட பல முரண்பாடுகள் வெளிப்படுகின்றன. ஒரு கணிப்பு பா.ஜ.க. கூட்டணி 41ரூ வாக்குகளை பெறும் என்கிறது. இன்னொரு கணிப்பு49ரூ பெறும் என்கிறது. 8ரூ வேறுபாடு என்பது மிகப்பெரிய இடைவெளி ஆகும். அதே போல காங்கிரசின் வாக்குகள் ஒரு ஊடகம் 25ரூ எனவும் இன்னொரு ஊடகம் 32ரூ எனவும் மதிப்பிடுகிறது. 7ரூ வேறுபாடு என்பதும் பெரிய இடைவெளி ஆகும். ஒரு ஊடகம் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. கூட்டணி 33 தொகுதிகள் வெல்லும் எனவும் இன்னொரு ஊடகம் 65 தொகுதிகள் வெல்லும் எனவும் கூறுகிறது. ஒரே மாநிலத்தில் செய்த கணிப்புகளில் 32 தொகுதிகள் எப்படி வேறுபடும்? இத்தகைய முரண்பாடுகள் இந்த கணிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து பெரிய சந்தேகத்தை கிளப்புகின்றன.2019 தேர்தல் காலம் முழுதும் ஊடகங்கள் மோடி ஆதரவு நிலையே எடுத்தன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எதிர்க்கட்சிகளின் கருத்துகள், பேரணிகள் ஆகியவை மிகக் குறைவாகவே ஒளிபரப்பப்பட்டன. குறிப்பாகஇடதுசாரிகளின் பிரச்சாரம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது எனில் மிகை அல்ல. மேற்கு வங்கத்தில் மம்தாவும் மோடியும் மட்டுமே களத்தில் உள்ளது போலவும் இடதுசாரி அணி களத்தில் அறவே இல்லை என்பது போலவும் மாயத் தோற்றத்தை உருவாக்க ஊடகங்கள் முயன்றன. அத்தகைய ஊடகங்களிடமிருந்து ஒரு நியாயமான கணிப்புகளை எதிர்பார்க்க இயலாது.
பெரிய ஊடகங்களின் கணிப்புக்கு மாறாக பல சிறிய அல்லது களத்தில் தீவிரமாக ஆய்வு செய்த ஊடகங்கள் மாறுபட்ட கணிப்புகளை முன்வைக்கின்றன. 2014தேர்தல் விவரங்கள், 2019 வரை நடைபெற்ற பல சட்டமன்ற தேர்தல்கள், 2019 கள நிலைமை ஆகியவற்றை ஆய்வு செய்து பா.ஜ.க. கூட்டணி 150 முதல் 175 தொகுதிகள்தான் வெல்லும் என இந்த ஊடகங்கள் உறுதியாகக் கூறுகின்றன. உதாரணத்திற்கு இந்த கணிப்புகளை நிராகரிக்கும் மேற்குவங்க அரசியல் ஆய்வாளர்கள் அந்த மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி குறிப்பிடத்தக்க அளவில் இருக்காது என மதிப்பிடுகின்றனர். டார்ஜிலிங், ராய்கஞ்ச், பங்குரா, கிருஷ்ணாநகர், முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் இடதுசாரிகளும் தெற்கு மால்டா, பெர்ஹாம்பூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ்வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர்கள் கூறுகின்றனர். பீகாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) வேட்பாளர் ராஜு யாதவும் வெல்வதற்கு வாய்ப்புகள்அதிகம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.பெரிய ஊடகங்கள் இத்தகைய கள நிலவரங்களை புறக்கணித்துள்ளன என்பதே உண்மை. எனவே இந்தகணிப்புகளின் நம்பகத்தன்மை மிகப்பெரிய கேள்விக்குரியது என்பதை நாம் மனதில் கொள்வது அவசியம் ஆகும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம்தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பாஜக அணி வெற்றி பெற்றுவிடும்என்பதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பெரும்பாலான ஊடகங்கள் முயல்கின்றன. வெற்றி பெறுவது யார் என்பது வாக்குப்பதிவு நாளன்றுதான் தெரியவரும் என்ற போதும் பாரபட்சமற்ற, நியாயமான தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது என்றே கூற வேண்டும்.இறுதிக்கட்ட வாக்குப்பதிவின்போது மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. தேர்தல் நடைமுறைகள் துவங்கியதிலிருந்தே இடதுசாரிக்கட்சி ஊழியர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். மம்தா கட்சி குண்டர்கள்வாக்காளர்களை மிரட்டினர். வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் வேலையும் நடைபெற்றது.
இதைதடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. தேசிய அளவில் பாஜகவுக்கு அனுசரணையாகவே தேர்தல் ஆணையம் நடந்துகொண்டது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாதேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறினர்.எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை திட்டமிட்டு முடக்கிய தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினரின் விதிமீறல்களை கண்டும் காணாமல் இருந்தது.மோடி ஆட்சியில் மத்திய திட்டக்குழு, மத்தியபுலனாய்வுத்துறை, ரிசர்வ் வங்கி, நீதித்துறை எனபல்வேறு துறைகள் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டன. தற்போது இந்த பட்டியலில் தேர்தல் ஆணையமும் இணைந்துள்ளது. தேர்தல் ஆணையர்அசோக் லவாசா இதுகுறித்து வெளிப்படையாகவே புகார் கூறியுள்ளார். நெறிமுறை மீறல்கள்தொடர்பாக தம்முடைய கருத்து ஏற்கப்படவில்லையென்றும் எனவே இனி ஆணையக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும்அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, அமித்ஷா மீதான புகார்கள் அலட்சியப்படுத்தப்பட்டது குறித்து தம்முடைய எதிர்ப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றுஅசோக் லவாசா கூறியுள்ளதாக தெரிகிறது.மோடி ஆட்சியில் மத்திய புலனாய்வுத்துறை பிளவுபட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது சக நீதிபதிகள் வெளிப்படையாக குற்றம் சாட்டினர். தங்களுக்கு ஒத்துவராத ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் பாஜகவினால் பந்தாடப்பட்டனர்.தமிழகத்திலும் கூட ஆளும் கட்சிகளான அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ஆதரவாகவே தேர்தல் ஆணையமும் அதிகாரிகளும் நடந்து கொண்டனர். வாக்கு எண்ணிக்கையின் போதும்பெருமளவு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புண்டு என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையையாவது எவ்வித புகாரும் இல்லாமல் நேர்மையாக நடத்ததேர்தல் ஆணையம் முன்வரவேண்டும். தேர்தல்முறையை அதன்மூலம் ஜனநாயகத்தை சீரழிக்கதேர்தல் ஆணையம் துணை போகக்கூடாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?