திங்கள், 20 மே, 2019

பாரதிய தேர்தல் ஆணைய கருத்து திணிப்பு





மக்கலவைத்தேர்தலுக்குப்பின்னர்  பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தம் இருக்கும் 543 இடங்களில் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.

 காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 120 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனப்படுகிறது.
இவையே ஒட்டு மொத்த ஊடகங்களின் கணிப்பாக உள்ளது.


கடந்த ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்த  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில்மீண்டும் பாஜக உயிர்த்தெழுந்து சாதனை படைக்கும் என்று ஒட்டுமொத்த ஊடக அலறல்.

 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து சந்தேகம் கொள்வதில் பல உண்மைகள் உள்ளது.
இதுதான் பாரதிய தேர்தல் ஆணைய  கருத்து திணிப்பு.
 2004 ஆம் ஆண்டு தேர்தலின் போதும், பல கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி 250 இடங்களைக் கைப்பற்றும் என்றும், சிலர் பாஜக, தனிப் பெரும்பான்மை பெறும் என்றும் கணித்தனர்.
ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, 335 இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்தது.

கருத்துக் கணிப்புகள் என்பது, செய்தி சேனல்கள், தங்களது விளம்பரம் அள்ளித்தரும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வெளியிடும் ஒன்று.
வாடிக்கையாளர்கள் த கட்சிக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படவில்லை என்றால் விளமபரவாய்ப்புகள் நின்று விடும்.
அதுவும் அதிகாரத்தில் உள்ள தேர்தல் ஆணையம்,சி.பி.ஐ,ரிசர்வ் வங்கி,டிராய்  அனைத்தையும் தனது கைப்பிடியில் வைத்துள்ள மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக செயல்பட்டால் இந்த ஜால்ரா ஊடகங்கள் கதி என்னவாகும் ?யோசியுங்கள்.!


 தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் பல எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து, பாஜக இல்லாத ஆட்சியை அமைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மக்களவைத் தேர்தல் குறித்து, வாக்குப்பதிவுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள், பாஜக-வுக்கு ஆதரவாக வந்துள்ளன.

இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள், பாஜகவுக்கு எதிராக உள்ள  எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம்.
மனஅளவிலான தொய்வை உருவாக்கி தங்கள் செயல்களில் தடுமாற்றத்தை உருவாக்கிடும்.அதைத்தான் பாஜக விரும்புகிறது.

மேலும் பாரதிய தேர்தல் ஆணையத்தை கையில் வைத்திருக்கும் பாஜக அதன் கூட்டணியுடன் தங்கள் வெல்ல வேண்டிய தொகுதிகளை ஏற்கனவே தீர்மானித்து அதற்கேற்ப உ.பி,ம.பி,ராஜஸ்தான் என்ற மாநிலங்களுக்கு வாக்குப்பதிந்த எந்திரங்களை அனுப்பிவைத்திருக்கலாம்.அதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.அங்கு கல்வியறிவு,அரசியல் அறிவு மிக்க குறைவு.மதஅடிப்படையில் மக்களை சிதறடித்துள்ளது இந்துத்துவா அமைப்புகள்.

மக்கள் கைகளில் மை  வைத்தபின் அவர்களுக்கு உதவுவது போல் தங்கள் கட்சிக்கு வாக்களித்த முகவர்கள் அங்கு அதிகம் அனால் ஒருவர் மட்டுமே காமிராமூலம் மாற்றியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாந்தாலி உட்பட பல கிராமங்களில் உள்ள பெண் வாக்காளர்கள் அனைவரையும் வாக்குப்பதிவு செய்ய வரக்கூடாது  என்றும் அதற்காக அவர்கள் விரல்களில் நேற்றே(18ம் தேதி) மை வைத்துவிட்டு ரூ.500-ஐ பாஜக ஆதரவாளர்கள் கொடுத்துச்சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 இதுதொடர்பாக கிராமவாசிகள் உள்ளூர் காவல்நிலையங்களுக்கு சென்று புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் புகார்களை வாங்க மறுக்கப்பட்டு அனைவரும் 
விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

ஆக தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்பு என்று ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்ட ஒரே மாதிரியான செய்தி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வெற்றியை மக்கள் கருத்தாக ஊடகங்கள் பரப்பியுள்ளன என்றே எடுத்துக்கொள்ளலாம்.

ஏனென்றால் முதல் நாள் வரை பாஜகவுக்கு அடி சறுக்கும் என்று சொல்லிவந்தவர்கள் ஓரிரவில் நேர் எதிமாறாக மாற வேறு வாய்ப்புகள் இல்லை.
அதுதான் உண்மை.
மேலும் தேர்தலுக்குப்பின் கருத்துக்கணிப்பு வெளியிட தடை என்று தேர்தல் ஆணையம் தடையாணை பிறப்பித்திருந்த போதும் அணைத்து ஊடகங்களும் அதை புறந்தள்ளி விட்டு ஒட்டு மொத்தமாக பாஜக கொடியை பிடித்துள்ளதும்,அதை இதுவரை தேர்தல் ஆணையம் கண்டே கொள்ளாததும் பல ஐயங்களை கிளப்புகிறது.
 
பாஜக தேர்தல் பரப்புரை பேரணியில் சட்டத்துக்கு மாறாக தேசியக்கொடி.பாரதிய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவே இல்லை.
காரணம் யாரும் குற்றசாட்டு கொடுக்கவில்லையாம்.
இதை கவனிக்க வேண்டியது  தேர்தல் பார்வையாளர்கள் பனி அல்லவா?
அவர்கள் குற்றச்சாட்டு தரவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்?
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
 கறுப்புப்பணத்தால் கட்டப்பட்ட ஆட்சி
கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது நரேந்திர மோடி வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப்பணத்தை கைப்பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று முழங்கினார்.
 அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சி முடிந்து கடைசியாக அளித்த பேட்டியில் கூட இதுகுறித்து அவர் வாய்திறக்கவில்லை. சொல்லப்போனால் எதுகுறித்தும் அவர் வாய்திறக்கவில்லை.

மறுபுறத்தில் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?
அவர்கள் பதுக்கியுள்ள தொகை எவ்வளவு?
என்றவிவரத்தைக் கூட வெளியே சொல்ல முடியாது எனமோடி அரசு மறுத்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி நிதிக்கணக்கு பற்றிய தகவல்களை இரு நாடுகளும் தானியங்கி முறையில் பகிர்ந்து கொள்ள வகை செய்யப்பட்டது.
 இதன்படி 2018முதல் இரு நாடுகளும் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த தகவலின் அடிப்படையில் கிடைத்த விவரம் என்ன?
 என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டபோது இது ரகசியமானதென்றும் இதை வெளியே சொல்ல முடியாது என்றும் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இதுவரை சுவிட்சர்லாந்து அரசு தகவல் அளிக்க மறுக்கிறது என்று கூறி, கறுப்புப் பண முதலைகளை காப்பாற்றி வந்தனர்.
இப்போது தகவல் கிடைத்தாலும் அதை வெளியே சொல்லமறுக்கின்றனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது.
ஆனால்இதுவரை அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைஎன்ன என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.

மோடி அரசின் நோக்கம் கறுப்புப்பணத்தை கைப்பற்றுவதல்ல. மாறாக அவர்களை காப்பாற்றுவதுதான். ஏனெனில் கறுப்புப்பண பேர்வழிகள் தான் பாஜகவின் தேர்தல் செலவுக்கு பெரும் தொகையை தருபவர்கள். இந்தியாவில் உள்ளகட்சிகளிலேயே கார்ப்பரேட் நிறுவனங்களிடமும், பெரு முதலாளிகளிடமும் அதிகளவு கட்சி நிதிவசூலிப்பது பாஜகதான் என்பது வெளிப்படையாகவே வெளிவந்துவிட்டது.

பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுதிருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிகளின் பட்டியலை கூடஇவர்கள் வெளியே சொல்வதில்லை.

 அவர்கள் பெரும் தொகையை ஏப்பம் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிய பிறகுதான் அவர்கள் சுருட்டிய தொகை எவ்வளவு என்பதே தெரியவரும்.
இதேபோலத்தான் கறுப்புப்பணத்தை கண்டுபிடிக்கும் விவகாரத்திலும் மோடி அரசு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது.
இவர்கள் ஒருபோதும் கறுப்புப்பண பேர்வழிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
ஏனெனில் கறுப்புப்பணத்தால் கட்டப்பட்ட ஆட்சி இது.

பணமதிப்பிழப்பு என்கிற பெயரில் கறுப்பை வெள்ளையாக்க உதவிய மோடி ஆட்சியின் சாயம் வெளுக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரே ஒரு எழுத்தில் உலகப்புகழ் பறிபோனது.
உலகிலேயே மிக நீண்ட பெயரை கொண்ட ரயில்வே நிலையம், வேல்ஸ் நாட்டில் உள்ளது. “Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch” இது தான் அந்த பெயரை எப்படி வாசிப்பது என்று சற்று குழப்பத்தில்  தான் இருக்கின்றோம்.
ஆனாலும் இது தான் உலகின் மிக நீளமான பெயரை கொண்ட ரயில்வே நிலையம்.
மொத்தம் 58 எழுத்துகள் இதில் உள்ளன.


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், இனி எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கூறியதில் மக்களிடையே  மாற்றுக் கருத்து நிலவி வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்  “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்” என்று அவசரமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆங்கிலத்தில் இதை எழுதும் போது, Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station – 57 எழுத்துகள் கொண்ட ரயில் நிலையத்தின் பெயர் கிடைக்கிறது.

வேல்ஸ் நாட்டில் உள்ள ரயில் நிலையத்திற்கு போட்டியாக அமைய வேண்டிய பெயர். ஆனாலும் ஒற்றை எழுத்து வித்தியாசத்தில் இந்த பெருமையை இழந்துவிட்டது இந்த ரயில் நிலையம்.

இருந்தாலும் இந்தியாவில் மிக நீண்ட பெயரை கொண்ட ரயில்வே ஸ்டேசன் இது தான்.
இதற்கடுத்து பெங்களூரு ரயில்வே ஸ்டேசன் க்ரந்திவீரா சங்கோலி ராயன்னா பெங்களூரு சிட்டி – இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

ஆந்திராவில் இருக்கும் வெங்கடநரசிம்மராஜுவரீபேட்டை ரயில் நிலையம் அதற்கடுத்த இடத்திலும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் அதற்கடுத்த இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------