சனி, 24 மே, 2014

ஐ ம்பது ஆண்டு அடிப்படை மொழி?


 கணினி  பயன்படுத்த வேண்டும் என்றால், ஓரளவிற்கு, சிறிய அளவிலாவது அதன் அடிப்படை இயக்கமான புரோகிராமிங் மொழி குறித்துத் தெரிந்திருக்க வேண்டும்.
கணினி அறிமுகமாகி பரவலாக பயன்படுத்த துங்கினபோது  அனைவரும் அறிந்து பயன்படுத்தக் கூடிய புரோகிராமிங் மொழியாக "பேசிக்' பழக்கத்தில் இருந்தது.
மே 1 அன்று இம்மொழி பயன்பாட்டிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
suran
.
பேசிக் மொழியை உருவாக்கியவர்கள் John G. Kemeny மற்றும் Thomas E. Kurtz ஆகிய இரு பேராசிரியர்கள்.
. 1964 ஆம் ஆண்டில் மே மாதம் முதல் நாள், இதனை இயக்கிக் காட்டினார்கள். கணிதவியல் ஆசிரியர்களான இந்த இருவரும், புரோகிராமிங் கற்றுக் கொள்வது கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு அடிப்படையானது என உறுதியாக எடுத்துரைத்து, அதற்கென குறியீடுகளை எளிய முறையில் அமைக்க இதனை உருவாக்கினர். இதன் முழு பெயர் "Beginner's AllPurpose Symbolic Instruction Code”.
பேசிக் மொழி வரும் முன், குறியீடுகளை, அட்டைகளில் துளையிடுவதன் மூலம் அமைத்து, அவற்றை கம்ப்யூட்டரில் செலுத்தி இயக்கினர். பேசிக் மொழி வந்த பின்னரே, நாம் ஒன்றை கம்ப்யூட்டரில் டைப் செய்து இயக்க, நமக்குத் தேவையான செயல்பாடு கிடைத்தது.
 இப்போது கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள், போன்கள் ஆகிய சாதனங்கள் அனைத்தும் நாம் தரும் கட்டளைகளை ஏற்று, நமக்குத் தேவையானதை, இலக்கு வைப்பதைத் தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனை முதன் முதலில் சாத்தியமாக்கியது பேசிக் மொழிதான்.
1970 முதல் 1980 ஆம் ஆண்டு வரை, ஹோம் கம்ப்யூட்டர்கள் பரவலாகப் பயன்படுத்த வெளியான போது, இந்த மொழி மிகவும் உதவியது. அப்போதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதன் பல வகைகளை வெளியிட்டது. மைக்ரோசாப்ட் மற்றும் ஐ.பி.எம். நிறுவனங்களால், பேசிக் அனைத்து மக்களையும் சென்றடைந்தது.
வெளியான அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பதியப்பட்டு தரப்பட்டது. இதன் எளிமையைக் கண்ட மக்கள் அனைவரும் "ஆஹா! நாமும் புரோகிராமர்களாகலாம்' என்று மகிழ்ச்சியும் பெருமையும் நடந்தனர். அப்போது இணையம் என்பது இல்லை. கூகுள், பேஸ்புக், தேடல்கள் என்பதெல்லாம் கண்டறியப்படவில்லை.
suran

 வண்ண மானிட்டர்கள் எதுவும் இல்லாமல், பச்சை வண்ணத்தில் அல்லது கருப்பு வண்ணத்தில் எழுத்துக்களை அமைத்து கம்ப்யூட்டரை இயக்கி வந்தோம். புள்ளிக்கும் கமாவிற்கும் வேறுபாட்டினை திரையிலும், டாட் மேட்ரிக்ஸ் அச்சிலும் காண்பது சிரமமான ஒன்றாக இருந்து வந்த நேரம் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்திய அனைவரும், பேசிக் மொழியைச் சிறிதளவாவது பயன்படுத்தித் தமக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொண்டனர். கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக பேசிக் மொழி கோடிக்கணக்கான மக்களுக்குத் தந்தது. ஒரு பாடத் திட்டமாக இல்லாமல், யாவரும் கற்றுக் கொள்ளும் எளிய வழிமுறைகளைக் கொண்டிருந்தது.
ஒன்றைப் புதிதாய்க் கற்றுக் கொள்வதில் இருக்கும் சிரமங்கள் எதுவும் இல்லாமல், மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் பேசிக் மொழியை மக்கள் கற்றுக் கொண்டனர்.
பேசிக் மொழி மைக்ரோசாப்ட் ஒரு சிறந்த நிறுவனமாக உருவாக உதவியது. Bill Gates and Paul Allen ஆகிய இருவரும் முதலில் Altair BASIC என்ற ஒரு வகை பேசிக் மொழியை உருவாக்கித் தந்தனர். அனைவரும் விரும்பும் வகையில் பின்னர் இதில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி வழங்கினர். பேசிக் மொழி அனைவராலும் பயன்படுத்தப்பட்ட காலம் என்றால் 1975 முதல் 1990 வரை எனலாம்.
suran
காலப் போக்கில் பேசிக் மொழியில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து வேகமாகவும் எளிதாகவும் அமைக்கக் கூடிய குறியீடுகளைக் கொண்ட மொழிகள் வந்ததனால், முதலில் வந்த பேசிக் மொழி வடிவம் பயன்பாட்டிலிருந்து மறைந்தது.
சிக்கலான வேலைகளுக்கு பேசிக் மொழி ஈடு கொடுக்காததால், புரோகிராம் உருவாக்கிய வல்லுநர்கள் வேறு மொழிகளை நாடினார்கள். பாஸ்கல், சி போன்ற மொழிகள் அவர்களின் தேவைகளுக்கு ஈடு கொடுத்தன.
மைக்ரோசாப்ட் நிறுவனம், புரோகிராமர்களுக்கு உதவ QuickBasic மற்றும் Turbo Basic என இரண்டு வகைகளைத் தந்தது.
இதனை கண்ட, பேசிக் மொழியை முதலில் வடிவமைத்தவர்கள் (Kemeny and Kurtz), மைக்ரோசாப்ட் பேசிக் மொழியைக் கெடுத்துவிட்டது என்று கூறி True BASIC என ஒரு வகையைத் தந்தனர்.
ஆனால், அந்த நேரத்தில் மக்களின் தேவைகள் அதிகரித்ததனால், எது உண்மையான பேசிக், எது இல்லை என ஆய்வு செய்திடாமல், வேறு புரோகிராமிங் மொழிகளைப் பயன்படுத்தச் சென்றனர்.suran
  மைக்ரோசாப்ட் தந்த பேசிக் மொழியின் இன்றைய வடிவம் தான் விசுவல் பேசிக் (Microsoft Visual Basic) என்ற பெயரில் உள்ளது. இருப்பினும் VB.NET என்பது பழைய பேசிக் மொழியின் சரியான விரிவாக்கம் என்று கூற முடியாது.
1970ல் இருந்த பேசிக் மொழி பயன்பாட்டினை இன்றைய விசுவல் பேசிக் அமைப்பில் இயக்க முடியாது.
 இன்றைய விசுவல் பேசிக், பல புதிய குறியீட்டு அடிப்படையைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஆனால், மற்ற மொழிகள் அப்படி இல்லை. தொடக்கத்தினை இன்னும் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கோபால் (COBOL) மொழியின் தொடக்க புரோகிராமினை, இன்றைய கோபால் மொழியின் வகையிலும் இயக்கலாம்.
இன்றைக்கு பேசப்படுகிற அளவிற்கு, புகழப்படுகிற அளவிற்கு சி ஷார்ப், சி ப்ளஸ் ப்ளஸ், ஜாவா ஸ்கிரிப்ட் போல, பேசிக் அல்லது விசுவல் பேசிக் இடம் பெறவில்லை.
இருப்பினும் அவ்வப்போது புரோகிராமர்களிடையே விசுவல் பேசிக் டாட் நெட் இடம் பெறுவதைக் காணலாம்.
தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வேறு சாதனங்கள் தந்து வரும் நிலையில், பெர்சனல் கம்ப்யூட்டரின் நிலையே உறுதியற்றதாக இருக்கும் நிலையில், பேசிக் மொழியும் ஒருநாள் நினைவில் இருந்தே காணாமல் போக வாய்ப்புண்டு.
My JC Film Gallery is open to the public in Shanghai.Check it out here for more information: http://bit.ly/1kLHd2J
==========================================================================
முதுமை என்பது யாதெனில்?
======================

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அவர்களில் பெரும்பாலோர் தாங்கள் எண்பது வயதைத் தாண்டும் வரைதங்களை முதிய வர்கள் என்று கருதுவதில்லை என்று தெரியவந்துள்ளது என்று டெய்லி எக்ஸ்பிரஸ் இதழ் கூறுகிறது.
ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் 60 வயதைத் தாண்டியவுடன் வயதில்மூத்தவர்கள் என்று கருதத் தொடங்கினர் என்றும் அது கூறுகிறது.
 suran
ஆரோக்கியமான, கூடுதலான செயல்பாடு மிகுந்தவாழ்க்கைமுறை, கூடுதலாக வேலையில் இருப்பது, வாழ்க்கையில் பிரகாசிக்கும் வயதானவர்களை காண்பதுடன் அவர்களுடன் பழகுவது ஆகியவை இந்த அணுகுமுறை மாற்றத்துக்கு காரணங்களாகக் கூறப்படுகிறது. பேயிங் டூ மச் . காம்என்ற இணையதளம் இந்த ஆய்வைநடத்தியது.
கடந்த சில ஆண்டுகளில் வயதானவர்கள் என்ற பொருளின் அர்த்தம் வெகுவாக மாறி விட்டது என்றும் அது கூறுகிறது. பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் வயதானவர், மூத்தவர் என்று ஒருகாலத்தில் கருதப்பட்டது. ஆனால் இப்போது 70வயதைத் தாண்டிய பின்னும் நம்மில் ஏராளமானோர் ஆரோக்கியமாகவும் செயல்பாட்டுடனும் இருக்கின்றனர்.

7000 பிரிட்டிஷாரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 17 விழுக்காட்டினர் 70 வயதுக்கு கீழாக இருப்பவர்களையும் வயதானவர்கள் என்றுகூறுகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இருபது விழுக்காட்டிற்கும் அதிகமானோர் 90ஐ எட்டினாலும் இளமையுடன் இருக்கலாம் என்று கூறினர். வேறு சிலர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 63 வயதைத் தாண்டியவர்களைக்கூட வயதானவர்கள் என்று கருதியதாகக் கூறினர். "ஒருவர் ஓய்வூதியம் பெறத் தொடங்கியவுடன் முதுமை தொடங்கி விட்டதாகக் கருதக்கூடாது என்றும், உங்களுடைய புதிய வாழ்க்கை அப்போதுதான் தொடங்குகிறது" என்று 92 விழுக்காட்டினர் கூறினர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
suran
-------------------------------------------------------------------------------------------------------------------------

suran

"மோடி பிரதமராவதற்காக உலக தேநீர்க் கடைக்காரர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்."
suran