மின்தடை நீங்கும் ?
தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையத்தில் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதால், விரைவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்க உள்ளது.மின்வெட்டு குறையும் நிலையம் வந்துள்ளது.
ஏற்கனவே தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் துறைமுகத்துக்கு செல்லும் வழியில் செயல்பட்டு வருகிறது.
இந்த அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் புதிதாக அனல் மின் நிலையங்கள் அமைக்க சென்ற திமுக ஆட்சிகாலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மத்திய அரசு அனுமதியளித்ததன்படி, இப்போது உள்ள அனல் மின் நிலையத்துக்கு அருகிலேயே புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கியது.
மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் (என்எல்சி), தமிழக மின்வாரியம் இணைந்து தலா 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதற்கான பங்கு முதலீட்டில் என்.எல்.சி. நிறுவனம் 89 சதவீதமும், தமிழ்நாடு மின்சார வாரியம் 11 சதவீதமும் அளித்துள்ளன. மின் நிலையம் அமைக்கத் தேவையான 127 ஹெக்டேர் நிலத்தை தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் குத்தகைக்கு வழங்கியுள்ளது.
புதிய அனல் மின் நிலையத்துக்கான கொதிகலன்கள் மற்றும் இயந்திரங்கள் நிறுவும் பணிகளை பெல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நிலக்கரி கையாளும் இயந்திரங்களை "எல் அண்ட் டி' நிறுவனம் அமைத்து வருகிறது.
புதிய அனல் மின் நிலையப் பணிகள் 2012ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நாள்களுக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாமல் தற்போதுவரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்னும் சில மாதங்களுக்குள் மின் உற்பத்தியைத் தொடங்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தற்போது கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், வெளிப்புற பூச்சு மட்டுமே பாக்கி உள்ளது.
இதற்கிடையே, புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக, நிலக்கரிக்குப் பதிலாக டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மூலம் இயந்திரங்கள் இயக்கப்பட்டன. இதில், ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளதால் அனைத்து இயந்திரங்களும் முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதை பொறியாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்தப் பணிகள் முடிவடைந்ததும் அரசிடம் ஒப்படைக்கப்படும் .
அதன் பின்னர உற்பத்தியை துவக்க முறையான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கினால் 1000 மெகாவாட் வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இருண்டுவரும் தமிழகம் ஒளிரும்.
இதை வைத்துதான் விரைவில் மின்தடை நீங்கும் என்று முதல்வரும்,அமைச்சர்களும் ஆருடம் கூறிவந்தனர்.
ஆனால் இது திமுக கருணாநிதி கொணர்ந்த திட்டம் என்று தாமதப்படுத்தாமல் இருக்க வேண்டும் .அதுதான் .இப்போது நமது கவலை.
-------------------------------------------------------------------------------------------------------------------------