மருந்துகள் செயலிழப்பது .......
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இன்றைய நோய்க் கிருமிகள் அலோபதி மருந்து ,மாத்திரைகளை எதிர்த்து உயிர் வாழும் திறமையை வளர்த்துக்கொண்டிருப்பதாக தெரிய வருகிறது.
ஆண்டிபயாடிக் எனப்படும் மாத்திரைகள் கூட தனது செயலாக்கத்தை,வீரியத்தை கிருமிகள் முன் இழந்து வருவதாக தெரிகிறது.
"தற்போது உலகம் ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது" என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது
இத்தகைய ஒரு காலகட்டத்தில், மக்கள் சாதாரண தொற்றுக்களாலும், சிறிய காயங்களாலும் கூட உயிரிழக்கக்கூடிய ஒரு நிலை உருவாகும் நிலை வரலாம் என்று அந்த அறிக்கை அச்சத்துடன் கூறுகிறது.
சூப்பர் பக்ஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கிருமிகள், உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டிபயாடிக்ஸ்களிடமிருந்துகூட தப்பித்துக்கொள்ளும் நிலையை எட்டியிருப்பதாகவும்,இது இப்போது உலக அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதாகவும், உலகச் சுகாதார நிறுவனம், ஆண்டிபயாடிக்ஸ் செயலற்றுப் போகும் நிலை குறித்து வெளியிட்டுள்ள முதல் உலகளாவிய அறிக்கையில் கூறுகிறது.
தன்னிடம் வரும் நோயாளிகள் குணமாவது போல் காண்பிக்க ஆங்கில மருத்துவர்கள் சிறிய நோய்களுக்கும் ,இம்மருந்து தேவைப்படா நோய் களுக்கும் இத்தகைய நோய் எதிர்ப்பு மருந்துகளை தேவைக்கதிகமாக பரிந்துரைப்பதும்,
நோயாளிகள் இத்தகைய மருந்துகளை உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் அதிகமாக உட்கொள்ளுவது அல்லது உட்கொள்ளாமல் இடையில் நிறுத்துவது போன்ற, முறையற்ற உபயோகங்கள் தான் இதற்குக் காரணம் என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆங்கில மருந்துகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுவதும்.கிருமிகள் இம்மருந்துகளை தாங்கி வாழும் சக்தியை தங்கள் பரிணாம வளர்ச்சியில் பெற்றுவருவதுமெ முக்கிய காரணங்கள். .
இதனால் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழப்பது என்பது, எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று அது கூறியது.
புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் விரைவாக உருவாக்கப்படவேண்டும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், இவைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்க, மேலும் சிறந்த கண்காணிப்பு முறைகள் அவசியம் என்று கூறுகிறது.
ஆங்கில மருந்துகள் நோய்களை உடனே தீர்ப்பது போல் இருந்தாலும் அவற்றை அம்மருந்துகள் அமுக்கி தான் வைக்கின்றன .அவ்வியாதிகள் தலைவலி போய் திருகு வலியை சிலகாலத்துக்குப்பின் வெளிக்கொணரும் என்பதுதான் மாற்று [ஓமியோபதி,சித்த,ஆயர்வேத ]மருத்துவர்கள் காலகாலமாக கூறி வரும் குற்றசாட்டு .அதைத்தான் இப்போது இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது .
----------------------------------------------------------------------------
உங்க வீட்டுத்தண்ணீரை
மிக சுத்தமான குடிநீராக்க .....,
அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம். எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது.
உங்க வீட்டுத்தண்ணீரை
மிக சுத்தமான குடிநீராக்க .....,
இப்போது கேன் தண்ணீர் , மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது.
ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும்.
மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார்.
இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க
செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’ என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்.
நன்றி:பசுமை விகடன்
-------------------------------------------------------------------------------------------------
கடவுளாக்காகவும்-மதத்துக்காவும்
குண்டு வைத்து மக்களை பலி
கொண்டவனை தூக்கில் இருந்து
அவன் கடவுள் காக்க வில்லை.!
குண்டில் பலியானவனை காக்க வில்லை
அவன் கடவுள்.!!
பின் யாருக்காக இக் கொடூர
மூட நம்பிக்கைகள்.!!!
-------------------------------------------------------------
delda Search என்ற சர்ச் இஞ்சின், சற்று மிகையான
இடத்தையே நம் பிரவுசரில் பிடித்துக் கொள்கிறது. இந்த தேவையற்ற புரோகிராம் இயங்குவதுடன், வர்த்தக ரீதியான சில தளங்களை நமக்கு பரிந்துரைக்கிறது. நம் தேடலுக்குச் சம்பந்தமில்லாத, ஆனால் அவை போலத் தோற்றமளிக்கின்ற இணைய தளங்களுக்கான லிங்க் வழங்குகிறது. இவை adwares எனப்படும் விளம்பர புரோகிராம்களால் ஏற்படுபவை. இவற்றில் சில வைரஸ் சார்ந்தவையும் இருக்கலாம். இந்த வைரஸ் கம்ப்யூட்டருக்குள் நுழைந்தவுடன் நாம் மாறா நிலையில் அமைத்த சர்ச் இஞ்சின் செட்டிங்ஸை மாற்றுகிறது. அதே போல, புக்மார்க் மற்றும் ஹோம் பேஜ் அமைப்புகளையும் மாற்றுகிறது. சிலவற்றில் Delta search.com என்ற தன் தளத்தினை முதன்மைத் தளமாக மாற்றி அமைக்கிறது. ஒவ்வொரு முறை புதிய தளம் ஒன்றை நம் பிரவுசரில் திறக்கும்போதும், இந்த தளமும் திறக்கும்படி அமைக்கப்படுகிறது. கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் பயர்பாக்ஸ் என அனைத்து பிரவுசர்களிலும் இந்த செட்டிங்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த தேடல் சாதனத்தை அனைவரும் கட்டாயமாக நீக்கியே ஆக வேண்டும். தேவையற்ற, போலியான இணைய தளங்களைத் தன் தேடல் முடிவுகளாக இது காட்டுவதால், இதனை அனு மதிக்கக் கூடாது. அதற்கான வழிகளை இங்கு காணலாம்.
ஏதேனும் புரோகிராம் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்கையில், இதுவும் ஒட்டிக் கொண்டு வருகிறது. பின்னர், தன் செயல்பாடுகளை வலிந்து மேற்கொள்கிறது. இதற்குப் பல முகங்கள் உண்டு. முதலாவதாக Delta Search virus. இது டெல்டா சர்ச் டூலின் இன்னொரு முகம். இது உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளதா என நீங்கள் சோதனையிட்டுக் கொண்டு செயல்பட வேண்டும். இதனு டன் பல மால்வேர், ப்ரீவேர் மற்றும் ஷேர்வேர் எனப் பல புரோகிராம்கள் இணைந்து வருகின்றன. இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இரண்டாவதாக, Deltasearch.com redirect என்பதாகும். இது டெல்டா சர்ச் வைரஸினால் ஏற்படுத்தப்படுவது. நம் பிரவுசரின் செட்டிங்ஸ் பக்கத்தில் அனைத்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி, அடிக்கடி டெல்டா சர்ச் காம் என்ற தளத்தினைத் திறந்து காட்டும்.
அடுத்ததாக yhs.deltasearch.com. இது டெல்டா சர்ச் இஞ்சினின் காப்பி புரோகிராம். இதனைப் பயன்படுத்தவே கூடாது. ஏனென்றால், பல பிரபலமான இணையதளங்கள் போல அமைந்த போலியான தளங்களுக்கான முகவரிகளை தேடல் முடிவுகளாகத் தந்து நம் கம்ப்யூட்டரில் சிக்கல்களை இது ஏற்படுத்தும்.
இன்னொரு முகமாக நமக்குக் கிடைப்பது mixidj.deltasearch.com. டெல்டா சர்ச் வைரஸ் இணைந்து மிக அதிகமாகப் பரவுவது இதுதான். இந்த தேடல் சாதனமும், நம்மை போலியான இணைய தளங்களுக்கு அழைத்துச் செல்வதில் செயல்படுகிறது. இன்னொரு வகையான வைரஸ் தரும் தேடல் தளம் visualbee.deltasearch.com. குறிப்பிட்ட தளங்களுக்கு நம்மை வழி நடத்தி, அதில் அதிகம் பேர் வந்ததாகக் காட்டும் வேலையை இந்த தேடல் தளம் செய்கிறது. மற்றும் பல மோசமான விளைவு
களைத் தரும் தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இந்த தேடல் தளம் உங்கள் பிரவுசரில் இயங்குவதாக இருந்தால், உடனடியாக அதனை நீக்க வேண்டும். இல்லையேல் பல பாதகவிளைவுகள் ஏற்படும்.
எந்த இலவச புரோகிராம் அல்லது ஷேர்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் இறக்கம் செய்வதாக இருந்தாலும், மிகவும் கவனமாக மேற்கொள்ளவும். இந்த டெல்டா சர்ச் மற்றும் சார்ந்த அனைத்து வகைகளும், இத்தகைய புரோகிராம்களுடன் தான் ஒட்டிக் கொண்டு வருகின்றன. டெல்டா சர்ச் சார்ந்த எந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்குவது தெரிந்தாலும், உடனே அதனை நீக்க வேண்டும்.
டெல்டா சர்ச் இஞ்சினை எப்படி நீக்குவது எனப் பார்க்கலாம். இது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால், பிரவுசரை இயக்கத் தொடங்கியவுடன் செயல்படத் தொடங்கும். அதனை அனுமதிக்கக் கூடாது. உடனே அந்த டேப்பினை மூடிவிட வேண்டும். பின்னர், Add/Remove Programs பட்டியலில் இருந்து இதனை நீக்க வேண்டும். இதற்கு ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, Settings > Control Panel > Add/Remove Programs எனச் செல்லவும். அங்கு டெல்டா சர்ச் இருந்தால் நீக்கவும். அத்துடன் Delta Chrome Toolbar, Delta toolbar, Yontoo, Browser Protect மற்றும் Mixi.DJ ஆகியவையும் தென்பட்டால் அனைத்தையும் நீக்கவும். அத்துடன் உங்கள் பிரவுசரில் இருக்கும் டெல்டா சர்ச் டூலையும் நீக்கவும். அதற்கான வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. இன் டர்நெட் எக்ஸ்புளோரர்: பிரவுசரைத் திறந்து 'Tools' > “Manage Addons' >'Toolbars and Extensions' எனச் செல்லவும். இங்கு Delta Search மற்றும் சார்ந்த அனைத்தையும் கண்டறிந்து அன் இன்ஸ்டால் செய்திடவும். தொடர்ந்து Tools கிளிக் செய்து Manage addons' > 'Search Providers' எனச் செல்லவும். இங்கு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பாதுகாப்பான சர்ச் இஞ்சினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
2. மொஸில்லா பயர்பாக்ஸ்: பிரவுசரைத் திறக்கவும். Tools' > 'Addons' >'Extensions' எனச் சென்று டெல்டா சர்ச் இருப்பதைக் கண்டறியவும். மற்றும் இது சார்ந்த மற்ற புரோகிராம்களைக் கண்டறிந்து அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்திடவும். தொடர்ந்து 'Tools' > 'Options' எனச் சென்று, தொடக்க ஹோம் பேஜ் என்பதில் கூகுள் டாட் காம் அல்லது யாஹூ டாட் காம் அல்லது உங்களுக்குத் தேவையான தேடல் தளத்தினை அமைக்கவும்.
3. குரோம் பிரவுசர்: பிரவுசரினைத் திறந்து குரோம் மெனு பட்டனைக் கிளிக் செய்திடவும். Tools > Extensions எனத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Delta Search எக்ஸ்டன்ஷன் கண்டறிந்து, பின் Recycle Binல் கிளிக் செய்து அதனை நீக்கவும்.
தொடர்ந்து ரென்ச் ஐகான், அல்லது மூன்று கோடுகள் உள்ள ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Settings என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் பக்கத்தில் 'Manage search engines' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்களுக்குத் தேவையான, பாதுகாப்பான சர்ச் இஞ்சினை, உங்கள் மாறா நிலை சர்ச் இஞ்சினாக அமைக்கவும். இதனைத் தொடர்ந்து, "On start” என்னும் பிரிவிற்குச் செல்லவும். இங்கு புதிய டேப் ஒன்றினைக் கிளிக் செய்கையில், எந்த தளமும் இல்லாமல் காலியான பக்கம் (blank page) கிடைக்கும்படி அமைக்கவும்.
நீங்களாக இன்ஸ்டால் செய்யாத புரோகிராம் ஏதேனும் உங்கள் கம்ப்யூட்டரில் இருப்பதாகவோ, இயக்கப்படுவதாகவோ தெரிந்தால், உடனே, முழு கம்ப்யூட்டர் சிஸ்டத்தினையும் ஸ்கேன் செய்து, வைரஸ் அல்லது மால்வேர் இருந்தால் அழிக்கவும். இதற்குக் கீழ்க்காணும் புரோகிராம்களும் உங்களுக்குத் துணை புரியும். அவை SpyHunter, STOPzilla மற்றும் Malwarebytes Anti Malware.

நன்றி:தினமலர்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்