வென்றவர்களைப் பற்றி ......!
முன்பு நடந்த தேர்தல் வாக்களிப்பு திருவிழாவுக்கு இப்போது வாக்கு எண்ணிக்கை முடிவுரை நடந்துள்ளது.
மோடி கார்ப்பரேட் சதியில் ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்ட பொம்மை என்று முன்பும் கூறினோம் .இப்போது இப்போதும் கூட நாம் நம்ப இயலா ஏன் மோடியே நம்பாத அளவிலான வெற்றியிலும் சொல்லுகிறோம்.அந்த கருத்தை திரும்ப வாங்கும் திட்டமோ.எதுவும் கிடையாது.
இந்தியா முழுக்க சோனியா கால மன்மோகன் சிங் ஆட்சியின் மீது மக்களுக்கு எற்பட்டுள்ள அதிருப்தியும்,கோபமுமே இப்படி வெடித்துள்ளது.சோனியாவின் காங்கிரசு அரசின் புதிய பொருளாதார கொள்கை இந்திய அடித்தட்டு மக்களுக்கு கொடுத்த இன்னல்களின் வெளிப்பாடுதான் இது.
சோனியாவின் காங்கிரசுக்கு பாடம் புகட்ட காத்திருந்தவர்களுக்கு ஊதி பெரிதாக்கப்பட்ட மோடி பலூன் சரியான ஆயுதமாக கிடைத்துள்ளது.
காங்கிரசுக்கு இப்போதைய எதிரி பாஜக .அதையே மக்கள் கையில் எடுத்துள்ளனர்.
மாதாமாதம் பெட்ரோல் விலை ஏற்றம்..அதனால் மறைமுகமாக உயரும் விலைவாசி.
அம்பானி வகையறாக்களுக்கு சலுகைகள்.ஏழை மக்களுக்கோ மானியங்கள் வெட்டு.உணவுப்பொருட்கள் , உரம் மானியம்,நிறுத்தம்.
சமையல் எரிவாயு விலை கடுமையான உயர்வு.போதாதற்கு வழங்கும் எரிபொருள் உருளை கள் எண்ணிக்கை குறைப்பு.
ஆனால் இப்படி விலை எல்லாம் அம்பானி எரிவாயு நிறுவனத்துக்கு லாபம் குவிக்கத்தான் என்ற உண்மை வெளியானது.லட்சக்கோடிகளில் 2ஜி,நிலக்கரி,கேஜி என்று ஊழல்கள் வரிசை.
ஆனால் இந்த ஊழல்கள் நடந்ததே தனது துறையாக இருந்தாலும் தெரியவே,தெரியாது என்று அடம் பிடிக்கும் ரோபோ பிரதமர் மன்மோகன் சிங்.
அடக்கி வைத்த காங்கிரசு பத்தாண்டு அரசின் அலங்கோலம் மீதான எதிர்ப்பு வாக்கு எந்திரம் மூலம் வெளியாகியுள்ளது.
இதில் மோடியின் மீதான மோகமோ காதலோ காரணம் அல்லவே அல்ல.
இந்தியாமுழுக்க அப்படி ஒரு நிலைதான்.
மோடியின் மீதான மோகம் ,அலை,என்றால் தென் மாநிலங்களில் பாஜக தாமரை ஏன் பூக்கவில்லை.
மே.வங்கம்,தமிழகம்,கேரளா வில் பாஜக கணக்கு ஆரம்பமாகவே இல்லையே.
எப்போதும் காங்கிரசு இல்லையெனில் பாஜக என்று உள்ள வடமாநிலங்களிலும்,கர்நாடகாவிலும் தான் காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவுக்கு அள்ளி வழங்கப் பட்டுள்ளது.
முன்பும் இப்படித்தான் வாஜ்பாய் பதவிக்கு வந்தார்.
அப்போதை விட காங்கிரசின் அந்நிய முதலீடு,புதுப் பொருளாதாரம் ,ஊழல்கள் அதிகம் மக்களிடையே கடுப்பை கிளப்பவே இன்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலை.
மேலும் இந்த மோடி அலை பாஜக -ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தால் சிறந்த முறையில் கோயபல்ஸ் கோட்பாட்டின் படி திட்டமிடப்பட்டு பல்லாயிரக்கணக்கான கோடிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக பல இணைய ,ஊடக,தொலைக்காட்சிகள் பணத்துக்கு அமர்த்தப்பட்டன.
காசுக்கு செய்தி என்ற ஏற்பாட்டில் காணும் இடமெல்லாம் ஊடகங்களிலும்,தொலைக்காட்சிகளிலும்,இணைய தளங்களிலும்,சமுக வலைத்தளங்களிலும் செய்திகள் மெது,மெதுவாக பரப்பப்பட்டன.
ஹிட்லரை கோயபல்ஸ் தனது பிரச்சார வலிமையால் மக்களை காக்க வந்தவராக காட்டியது போலவே பாஜகவும் தனது நமோ மோடியை வடிவமைத்து இந்தியாவில் மோடி அலையை கானல் அலையாக உருவாக்கியது.
போலி கணக்கில் இணைய தளங்கள்,முகனூல்,கணக்குகள் லட்சக்கணக்கில் ஆரம்பிக்கப்பட்டு சுட்டியை வைக்கும் இடமெல்லாம் மோடி புகழ் பாடப்பட்டது.இது இணைய உபயோகிப்பாளர்கள் அறியாதது அல்ல.
மோடி பற்றிய புகழ் பரப்பும் துணுக்குகளை பரப்பி விட்டு போலி கணக்குகள் மூலம் ஆயிரக்கணக்கில் லைக்குகள் தரப்பட்டன.
இது தவிர பனியன்கள்,தி சர்ட்டுகள்,தொப்பிகள் மலிவு விலையில் கடைகளில் குவிக்கப்பட்டன.மோடி கூட்டங்க்களில் இலவசமாக வாரி இறைக்கப்பட்டன.
ஆக இந்தியர்கள் மனதில் காங்கிரசு அரசின் சீர்கேடுகளால் உருவான வெப்பத்தில் மோடி கானல் நீர் உருவாக்கப்பட்டது.ஆனால் அது உண்மையான உருவம் அல்ல என்பதை இன்னும் சில மாதங்களிலேயே மோடியின்-பாஜக ஆட்சி காட்டிக்கொடுத்து விடும்.
ஆனால் இப்போதே ஒன்று சொல்ல வேண்டும் .
பாஜகவும் கொள்கையளவில் புதிய பொருளாதாரத்துக்கு ஆதரவான கட்சிதான்.அந்நிய முதலீட்டை சிகப்பு கம்பளம் வைத்து வரவேற்கும் கட்சிதான்.
சில்லறை வர்த்தகத்திலும் காங்கிரசின் வழியில்தான் செல்லப் போவதாக சொல்லி .உள்ளது
அங்குதான் இவர்களின் இன்றைய வெற்றி காணாமல் போகும் புள்ளியும் உள்ளது.
காங்கிரசுடன் இந்த பொருளாதாரக் கொள்கைகளில் எந்த வேறுபாடும் இல்லாத பாஜக கொஞ்ச நாளிலேயே மக்கள் அதிருப்தியை வாங்கிக்கொள்ளும்.
மோடி பலூன் காற்று மக்கள் அதிருப்தி வெப்ப மூச்சில் உடைந்து போகும் அபாயம் அருகிலேயே இருக்கிறது.
இடது சாரிகள் மக்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பாததுதான் இன்றைய காங்கிரசு வெறுப்பு மோடி-ஆர்.எஸ் .எஸ். கூட்டத்துக்கு லாபமாகி விட்டது.மற்றபடி மோடி அலையும் இல்லை.அவர் வலையில் மக்கள் சிக்கவும் இல்லை.
பாம்பிடம் இருந்து தப்பிக்க முதலைஇடம் அடைக்கலம் புகுந்த கதைதான் இன்றைய இந்தியாவின் நிலை.
-------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் திமுக பெற்ற வெற்றியை[?] பற்றி சொல்ல வேண்டியதில்லை.
ஸ்டாலினுக்கு தானாக திரண்ட மக்கள் கூட்டம் ,பேச்சுக்கு கிடைத்த வரவேற்பு இவைகளை வாக்கு ஆக்குவதை விட ,
அதிமுக -தேர்தல் ஆணைய கூட்டணி பண ஊர்வலம் மூலம் வாக்குகளை திரட்டி சாதனை செய்து விட்டது.இந்த வெற்றிக்கு ஜெயலலிதா மக்களுக்கு நன்றி சொல்லுவதை விட பணம் கொடுத்து வாக்குகளை வாங்க எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பு தந்த ஒருபடி மேலேயே போ ய் 144 தடையை போட்டு சத்தியம் வாங்கி பணப்பட்டுவாடா செய்திட உதவிய தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமாருக்கு நன்றி சொல்லுவதுதான் சாலச் சிறந்தது.
இவரும் எப்படிங்க ?ஒய்வு பெற்றதும் ஒங்க கையாலே அதிமுகவில் அட்டை வாங்க்குவாருங்களா?
எப்படியோ பணம் கொடுக்காமல் திமுக மண்ணைக்கவ்வியதால் மீசையில் மண் ஒட்டவில்லை.திமுக பெற்ற வாக்குகள் எல்லாமே வெற்றிதான்.
அதிமுக?அங்கதான் மீசையே இல்லையே?
மேலும் பாஜக இழுபறியில் வென்றிருந்தால் அதிமுக வெற்றிக்கு பலன் கிடைத்திருக்கும்.
அறுதி பெரும்பான்மையில் பாஜக வெற்றி பெற்று விட்டதால் அதிமுக பெற்ற 37 வெறும் எண்ணிக்கயாகப் போய்விட்டது.அவையில் மூன்றாம் இடம் என்ற பேருதான்.திமுக முன்பு பாஜக,பின்பு காங்கிரசை ஆட்டி படித்தமாதிரி ஒன்றும் செய்ய இயலாதே?
அதிமுக இவ்வளவு வென்றும் தோல்விதான்.