மூட்டுவலிக்கு சில ஆலோசனைகள்...

அனேகமாக உலகில் அதிகமாக வயதானோர் பா திக்கப்பட்டுள்ள நோயாக மூட்டு வலிதான் இருக்கும்.
வயது ஏற,ஏற கால்,கை இணைப்புகளில் உள்ள எண்ணைப்பசை குறைவாகி விடுவதாலேயே இவ்வலிகள் உண்டாகிறது.
முன்பை விட இப்போது அதிகம் பேர்களை மூட்டு வலி பாதிக்க காரணம்.நாம் எண்ணைக்குளியலை மறந்ததும் ஒன்று.
முன்பு சனி,ஞாயிறுகளில் உடல் முழுக்க எண்ணை பூசிக்கொண்டு குளிக்க  தயாராக இருப்பவர்களை அதிகம் பார்க்கலாம்.ஆனால் இன்று தலையில் கூட எண்ணைப்பசையுடன் இருப்பவர்களை பார்க்க இயலவில்லை.

இது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் சிறு குழப்பத்தின் காரணமாக, மூட்டுத்திசுக்களை நோய்க்கிருமிகளாக நினைத்து, நம் உடலிலிருந்தே சில ரசாயனங்களை உண்டாக்கி, மூட்டுத்திசுக்களைப் பாதிக்கிறது. 30 முதல் 60 வயதுக்காரர்களை, குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கிற இந்த நோயின் அறிகுறிகள் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதில்லை.

உடல் முழுவதும் வலி, குறிப்பாக மூட்டுகளில் அதிக வலி, சோர்வு, மூட்டு வீக்கம், கை, கால்களில் விரைப்புத் தன்மை, காலையில் எழுந்ததும் கால்களில் விரைப்பு, ஓய்வுக்குப் பிறகும் கை, கால்களில் விரைப்பு நீடிப்பதும், சோர்வு தொடர்வதும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக உணரப்படலாம். இந்த நிலையிலேயே மருத்துவரை அணுகினால், நோயின் தீவிரத்தை கண்டறிந்து, குணப்படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தினால், மூட்டுகளில் வீக்கம், அதிக வலி, மூட்டுகள் தேய்வடைந்து முற்றிலும் பாதிக்கப்படக்கூடும். தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
மூட்டு வலி

குறிப்பிட்ட இடைவெளிகளில் மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதையும், நோயின் தீவிரம் எப்படியிருக்கிறது என்பதையும் சில ரத்தப் பரிசோதனைகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வகையான மூட்டுவலி ஒருவரது எலும்புகளை மட்டுமின்றி, இதயத்தையும் பாதிக்கக் கூடியது. மூட்டு மட்டுமின்றி, முதுகெலும்பு, முழங்கால், கணுக்கால்களிலும் வலி உணரப்படும். எனவே, சிகிச்சையையும் பயிற்சிகளையும் பாதியில் நிறுத்தக் கூடாது. குறிப்பாக பயிற்சிகளை முறையாகச் செய்து வந்தால் எலும்புகள் நெகிழ்வுடன் காணப்பட்டு, வலி குறையும். பயிற்சிகளை ஆரம்பக் கட்டத்திலேயே மெதுவாக, குறைவாகத் தொடங்கவும்.

உணவில் மூன்றில் 2 பங்கு காய்கறிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சைவ உணவே சிறந்தது. அசைவத்தில் மீன் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் சாலமன் மற்றும் டுனா மீன்கள் சிறந்தவை. அவற்றில் உள்ள ‘ஒமேகா 3’ கொழுப்பு அமிலம் வலியைக் குறைக்க உதவும். காய்கறிகள் தவிர, பழங்கள், தானியங்களும் முக்கியம். ஸ்ட்ராபெர்ரி பழமும், ஆலிவ் ஆயிலும் நல்லவை. உணவில் கால்சியம், செலினியம், வைட்டமின் டி சத்துகள் நிறைந்திருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கோழி இறைச்சி, வாட்டப்பட்ட உணவுகள் (க்ரில்), துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள், பதப்படுத்திய உணவுகள் போன்றவை வலியை அதிகரிக்கும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த நோய்க்கு, இதய நோயுடன் தொடர்புண்டு என்பதால் கொழுப்பு நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்

மிகப்பரவலாகக் காணப்படுகிற முக்கியமான நோய் இது. முழங்கால், இடுப்பு, இடுப்பு மூட்டு, முதுகெலும்புப் பகுதிகளில் வலி இருக்கும். வயதானவர்களிடம் அதிகம் காணப்படுகிற இது, 90 சத விகிதம் எலும்புத் தேய்மானத்தால் வருகிறது. வயதின் காரணமாக எலும்புகளில் உண்டாகிற தேய்மானம், மூட்டில் எப்போதோ ஏற்பட்ட விபத்து, அடி, காயம், பருமன், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை போன்றவையே பிரதான காரணங்கள். வலி மருந்துகள் மற்றும் பயிற்சிகளின் மூலம் நிவாரணம் பெறலாம். தேவைப்பட்டால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம். இப்போது தீவிர வலி நிவாரண சிகிச்சையின் மூலம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சையைக் கூடத் தவிர்க்க முடிகிறது. ரேடியோ அலை சிகிச்சை முறை மற்றும் ஊசி மூலம் மருந்து செலுத்தும் முறைகளும் உதவியாக இருக்கும்.

ஆங்கிலோசிங் ஸ்பான்டிலைட்டிஸ்


முதுகெலும்பிலுள்ள சிறு சந்திப்புகளிலும் இடுப்பிலும் உணரப்படுகிற வலி இது. முக்கியமாக இடுப்புவலி என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுகிற குழப்பம் காரணமாகவே வரும். அதி தீவிர வலி நிவாரண சிகிச்சை முறையின் மூலம் வலியைக் குறைத்து, பயிற்சிகளையும் தொடர்வதன் மூலம் வேதனையிலிருந்து விடுபடலாம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இடுப்பெலும்பில் மருந்தைச் செலுத்தியும் வலியைக் குறைக்கலாம்.

கவுட் ஆர்த்ரைட்டிஸ்

உடலிலுள்ள யூரிக் அமிலம் எனப்படுகிற ரசாயனம், மூட்டில் படிவதே இந்த வலிக்கான காரணம். கை, கால்களில், கால் பெருவிரல்களில், கணுக்கால்களில், முழங்கை சந்திப்புகளில் அதிக வலி தெரியும். ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைச் சரி பார்த்து, அதைக் குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படும். பயிற்சிகளும் அவசியம். அசைவ உணவுகளை அறவே தவிர்க்கவும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் இந்த வகை நோய்க்கு வழி வகுக்கலாம் என்பதால் அதுவும் வேண்டாம். குடிப்பழக்கம் கூடாது. அதிக இனிப்பு சேர்த்த உணவுகள், மைதாவில் செய்த உணவுகள் போன்றவையும் ஆபத்து.

இவற்றுக்குப் பதிலாக, சுத்தமான பழச்சாறுகள், முழு தானிய உணவுகள், காய்கறிகள், கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த பால் உணவுகள் சேர்த்துக் கொள்ளலாம். நிறைய தண்ணீர் மற்றும் திரவ உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 16 டம்ளர் தண்ணீர் குடிப்பதன் மூலம் அதிகப்படியான யூரிக் அமிலம் வெளியேற்றப்படும்.

மூட்டுவலிக்கு பொதுவான சில ஆலோசனைகள்...

அறிகுறிகள் சின்னதாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல், ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகவும். ஆரம்பக் கட்ட பரிசோதனையின் மூலம் நோய் தீவிரமடைவதைத் தவிர்த்து, வலியிலிருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுக்க வேண்டும். சுய மருத்துவம் ஆபத்தானது.

உடற்பயிற்சிகள் மிக முக்கியம். அவற்றின் மூலம்தான் மூட்டுகளில் வலி வராமல் காக்க முடியும்.நோய் வந்த பிறகு பயிற்சி என்பதைத் தவிர்த்து, பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைத்துப் பின்பற்றுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்.
"It's our responsibility to bring friendship and love from all different places around the world and to live together in peace."
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?