செம்புத்தமிழன் சீமானுக்கு

மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே வருவது தொடர்பாக பல குரல்கள் பலவிதங்களில் ஒழித்துக் கொண்டிருக்கின்றன.ஆனால் மூன்று ஈழ வியாபாரிகளில் வைகோ தவிர இருவர் குரல் ஒலிப்பது போல் தெரியவில்லையே.அல்லது நெடுமாறன்,சீமான் குரல்கள் ஒலிப்பது எனக்குத்தான் தெரியவில்லையா?கேட்கவில்லையா?
பாஜக என்றுமே ராஜபக்சேக்கு ஆதரவாகத்தான் இருந்து வந்துள்ளது.
தமிழருக்கு ஆதவாக அல்ல.
suranமஹிந்தவும் மோடியும்
சுஷ்மா சுவராஜ் ராஜபக்சே வீட்டுக்கு இருமுறை விருந்து சென்றார்.எப்போது தமிழர் அழித்தொழிப்பு நடந்து முடிந்து தமிழர்கள் எல்லாம் கடும் சோகத்தில்-கோபத்தில்-இயலாமையில் இருந்த போது .
அப்போது கூட பாஜக காங்கிரசுக்கு எதிராக அரசியல் நடத்துவதற்காக தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை.காங்கிரசுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொண்டது.
காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுக்க [பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட]பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
ஆக இன்று மோடி கூப்பிட்டதில் அதிசயம் இல்லை.
வைகோ நீலிக்கண்ணீர் வேண்டுகோள் விடுக்க வேண்டியதில்லை.
ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணுல் எதற்கு?
பாஜக எதிர்கட்சியாக இருந்த போதே தமிழர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து இல்லை.
இன்று மிருக பலத்தில் நாற்காலிகளை கைப்பற்றியபோது எப்படி நடந்து கொள்வார்கள்.
மேலும் ஈழத்தமிழருக்கும் இங்குள்ள தமிழருக்கும் மட்டுமல்ல சிங்களருக்கும் வடக்கே உள்ள வட மாநில மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது.
suran
சிங்களர்கள் இந்தியாவில் உள்ள பீகார்,ஓடிசா ,வங்கத்தில் இருந்து நாவலந்தீவுக்கு அதாங்க இலங்கைக்கு பிழைக்க  வந்தவர்கள்தான்.தமிழர்கள் இலங்கையை ஆண்ட போது உழைக்க வந்தவர்கள் பின் சிறுபான்மையினர் தமிழர்களை சிறுபான்மையாக்கி விட்டனர்.
ஆங்கிலேயன் வழக்கம் போல் பிரித்தாளும் சூட்சியில் சிங்களர் பொறுப்பில் விடுதலை பத்திரத்தை கொடுத்து தமிழனை இரண்டாம் குடிமக்களாக்கி தண்ணீர் தெளித்து விட்டு போய்விட்டான்.
நமக்கு கல் தோன்றி கடவுள் தோன்றா கால பெருமை மட்டும்தான் இன்றும் மிச்சம்.
பெரியார் தமிழனை ஏன் காட்டுமிராண்டி என்றார்.?நாம் கல்தோன்றி என்ற பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருப்பதால் மட்டும் தானே!
இன்று மோடி இலங்கை அதிபரை மட்டும் அழைக்க வில்லையே .
பாகிஸ்தான் உட்பட சார்க் நாட்டு அதிபர்களா அனைவருக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்.
ராஜ பக்சே மட்டும் இந்தியா வராததால் ஈழத்தமிழர் பிரச்னை முடிந்து விடுமா?
வைகோ போ ய் கறுப்புக்கொடியை காட்டினால் பிரபாகரன் உயிரை திரும்பக் கொடுத்து விடுவாரா பக்சே?
நடந்து முடிந்த படுகொலையை வைத்தே ஈழ வியாபரிகள் பிழைப்பு நடத்துகின்றனர்.
இப்போது அங்கு உயிருடன் உள்ள தமிழன் பாதுகாப்புக்கும்,உயர்வுக்கும்,உரிமை பெறவும் இங்குள்ள வியாபாரிகள் செய்தவை என்ன?
சட்டமன்றத்தில் திடீர் ஈழத்தாய் ஜெயலலிதா தீர்மானங்கள் நிறைவேற்றியதால் மட்டும் போதுமா?அங்குள்ள ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு இதுவரை என்ன திட்டங்களை ஜெயலலிதா தந்துள்ளார்.இல்லை.இந்த பக்சே வரவேண்டாம் என்று சொல்லும் அரசியல்காரர்கள் என்ன தீர்வுகளை சொல்லியுள்ளார்கள்.
அப்போது கருணாநிதி ஆட்சியில் இருந்ததால்  அவருக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு பங்கு  என்பதாகவும் கருணாநிதி நினைத்திருந்தால் படுகொலைகளை நிறுத்தியிருக்கலாம் என்றும் முட்டாள் தனமாக இன்றும் பேசிவருபவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி '
suran
உங்களின் திடீர் ஈழத்தாய் ஜெயலலிதா இன்று தமிழக முதல்வர் .அதுமட்டுமல்ல மோடியின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்.அதுமட்டுமல்ல பாஜக ஆதரவை பெற்றவர்.
அவர் ராஜபகசெவை இந்தியாவிற்குள் வர விடாமல் ஏ ன் தடுக்க இயவில்லை.
அறிக்கை மட்டும் விடுகிறார்.?
ஈழப் படுகொலையை அதாவது அண்டை நாட்டு உள்நாட்டுப் போரை மத்திய அரசு மூலம் தடுப்பதை விட ராஜபக்சே அழைப்பை தடுப்பது மிக எளிதான வேலைதானே?

அதை ஏன் உங்கள் திடீர் ஈழத்தாய் செய்யவில்லை.
இக்கேள்வி ஜெயலலிதாவின் அடிமை செம்புத்தமிழன் சீமானுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.

suran
மூன்று ஈழ வியாபாரிகள்?
-----------------------------------------------------------------------
ண்ட்ராய்ட்  கருவிகளை பாதுகாக்க....,
=========================================
உலகில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது மொபைல் போன். மொபைல் போன் வரிசையில் புதிய புரட்சி ஆண்ட்ராய்ட் மொபைல்போன்கள். உலகெங்கும் அனைவராலும் விரும்பப்படும் ஆண்ட்ராய்ட் போன்கள் பல்வேறு விலைகளில், பல்வேறு அளவுகளில், பல்வேறு வசதிகளுடன் கிடைக்கின்றன.
ஆண்ட்ராய்ட் போன்கள் இந்தளவிற்கு பிரபலமானதற்கு காரணம் user friendly கட்டமைப்புதான். இவ்வாறு அனைவரையும் கவரும் ஆண்ட்ராய்ட் போன்கள், நாளடைவில் கணினியைப் போன்று செயல்படும் திறனில் வேகம் குறைகின்றன. இதற்கு காரணம் பயன்படுத்தும் விதம் மற்றும் அதில் இடம்பெரும் அப்ளிகேஷன்களின் அளவு, இடம்பெற்றிருக்கும் கோப்புகளின் எண்ணிக்கை மற்றும் கோப்புகளின் அளவு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தைப் புதிய போனைப் போன்று அதிக செயற்திறனுடன் செயல்பட வைக்க ஒரு புதிய மென்பொருள் பயன்படுகிறது.
மென்பொருளின் பெயர்: Advanced mobile care
இந்த மென்பொருள் மெதுவாக இயங்கும் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்குகிறது. மேலும் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள தேவையற்ற வைரஸ்களை நீக்கி பாதுகாக்கின்றனது.
suran-Android-

Games Booster:

நீங்க் உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தில் கேம்ஸ் விளையாடும்போது , கேம்ஸ் ஸ்பீடர் (Games speeder) எனும் டூல் மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் பேக்ரவுண்டில் இயங்கும் நிரலிகளை கட்டுப்படுத்தி, வேகமாக கேம் விளையாட உதவுகிறது.

Battery Saver:

இதிலுள்ள battery saver எனும் டூல் மூலம் வீணாகும் பேட்டரி சக்தியை முறையாக சேமித்து முடியும்.

Privacy Advisor:

இந்த டூல் மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தில் நிறுவப்படும் ஒவ்வொரு அப்ளிகேஷனும் மூலம் உங்களுடைய சாதனத்தில் இருக்கும் எப்படிப்பட்ட வசதிகளை இயக்க முடியும் என்பதை  தனித்தனியாக காட்டுகிறது.

Application Manager:

இந்த டூல் மூலம் சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் அப்ளிகேஷன்களை நீக்கவும், movie apps என்பதன் மூல் SD card க்கு மூவ் செய்துகொள்ளவும் முடியும்.

Cloud Backup:

இந்த வசதியின் மூலம் உங்கள் தொடர்பில் இருக்கும் contac, call log போன்றவற்றை இணையத்தில் சேமித்துக்கொள்ள முடியும். இந்த வசதியின் மூலம் நீங்கள் புதிய சாதனத்திற்கு மாறும்பொழுது அனைத்து விபரங்களையும் புதிய சாதனத்திற்கு எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

Anti Theft:

இந்த Advance care மென்பொருள் நிறவப்பட்ட உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனம் தொலைந்துவிட்டால், மற்றொரு Advance care மென்பொருள் நிறவப்பட்ட சாதனத்தின் மூலம் தொலைந்து போன சாதனத்தை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக தொலைந்து போன சாதனத்தில் GPS இயக்கப்படாது இருந்தாலும் சாதனம் இருக்கும் இடத்தை துல்லியமாக Google Map மூலம் கண்டுபிடிக்க முடியும்.

Privacy Locker:

இந்த வசதியின் மூலம் விடியோ கோப்புகள், ஆவணங்கள் மற்றும் ஆல்பம் போன்றவற்றினை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுக்க முடியும்.
இத்தனை வசதிகளும் கொண்ட இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்.
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி:
Download Advanced mobile care apps for Android phone users
suran
======================================================================
திப்புவின் மோதிரம்?


பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்ட , மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் அணிந்திருந்ததாகக் கூறப்படும் தங்க மோதிரம் ஒன்று பிரிட்டனில் சுமார் 1.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.



இந்துக் கடவுளான ,ராமரின் பெயர், தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த இந்த மோதிரம் 41.2 கிராம் ( சுமார் ஐந்து பவுன்) எடையுள்ளது.

இந்த மோதிரத்தை திப்பு சுல்தான் தனது விரலில் அணிந்திருந்ததாக ...பாரம்பர்யமாக வரும் செய்திகள் கூறுகின்றன.

லண்டனில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் இன்று வியாழக்கிழமை நடத்திய ஏலத்தில், இந்த மோதிரத்தை 140,500 பவுண்டுகளுக்கு ( சுமார் 1.40 கோடி இந்திய ருபாய்கள் ) யாரோ ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். இது 10,000 பவுண்டுகளிலிருந்து சுமார் 15,000 பவுண்டுகள்தான் மதிப்புள்ளதாக கணிக்கப்பட்டிருந்த்து.

ஏலம் எடுத்தவர் யாரென்பதை இந்த நிறுவனம் வெளியிடவில்லை.

முஸ்லீம் சுல்தானாக இருந்தாலும், இந்து மதத்தின் மீது திப்பு வைத்திருந்த நன்மதிப்பின் வெளிப்பாடாக சிலரால் பார்க்கப்படும் இந்த மோதிரத்தை ஏலத்தில் விற்க இந்திய அரசும், கர்நாடக அரசும் அனுமதிக்கக்கூடாது என்று இந்தியாவில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்தன.
suran

ஆனால் இந்திய அரசு இந்த ஏலத்தில் பங்கேற்றதா என்பது தெரியவில்லை.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்த திப்பு, மைசூரை ஆண்ட ஹைதர் அலியின் வாரிசு.

ஹைதர் அலி 1782ல் இறந்த பின்னர் மைசூர் சுல்தானாக முடிசூடிய திப்பு, பெரும்பான்மை இந்துப் பிரஜைகளின் சுல்தானாக ஆட்சி புரிந்தார்.

சுமார் 17 ஆண்டுகள் ஆட்சி செய்த திப்பு கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளுடன் 1780லிருந்தே மோதத் தொடங்கினார். இந்த மோதல்கள் 1799ல் சீரங்கப்பட்டினத்தில் நடந்த இறுதிப்போரில் , ஆர்தர் வெல்லஸ்லியின் தலைமையிலான படைகளின் வெற்றியில் முடிந்தன.

இந்தப் போரில் கொல்லப்பட்ட திப்பு சுல்தானின் கையிலிருந்து ,இந்த மோதிரம் ஆர்தர் வெல்லெஸ்லியால் எடுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் வழி வந்த செய்திகள் கூறுகின்றன என்றாலும், ஒரு பெரிய முஸ்லீம் போர்வீரர் , இந்து கடவுளின் பெயர் பொறித்த மோதிரத்தை அணிந்திருக்கக் கூடும் என்பது வியப்பளிக்கும் செய்தியாகவே இருக்கும் என்று கிறிஸ்டீஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.

இந்த மோதிரம் திப்புவின் களஞ்சியத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பது சாத்தியமே என்று அது கூறுகிறது.
=========================================================================
suran

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?