இனி 2ஜி வழக்கு எப்படி
புதிய மத்திய அரசு பொறுப்பேற்கப் போகிறது இனி 2ஜி வழக்கு எப்படி நடக்கும்?
அருண்ஜெட்லி அமைச்சராக இருந்த காலத்தில் உள்ள நடைமுறைதான் தான் கையாண்டதாக ஆ.ராசா கூறியுள்ளார்.
சாக்கோ தலைமையிலான கூட்டுக்குழு ஆ.ராசாவை கடைசிவரை விசார்க்கவே இல்லை.விசாரிக்க ஆ.ராசா கோரியும் மறுத்து தன்னிச்சையாக மன்மோகன்.ப.சி.க்கு ஆதரவாக முழுக்குற்ற த்தையும் ஆ.ராசா மீதே சுமத்தி அறிக்கை தந்து விட்டது.
அதை பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்த்தன.இப்போது அதிகாரம் கைவசம் வந்த நிலையில் பாஜக மேற்கொண்டு என்ன செய்யப்போகிறது.மன்மோகன்சிங்,ப.சிதம்பரம் ஆகிய இருவருக்குமான 2ஜி ஒதுக்கிடு பங்கை நியாயமான முறையில் விசாரி க்குமா?
ஒளிந்திருக்கும் உண்மைகளை முழுவதுமாக வெளிக்கொணருமா?
அல்லது தங்கள் முந்தைய ஆட்சிக்கால விவகாரங்கள் நாறிவிடும் என்று இப்படியே அமுக்கி விடுமா?ஆ.ராசா ,திமுக தலையிலேயே முறைகேடு தலைப்பா கட்டப்பட்டு விடுமா?
3 ஆண்டு காலமாக இந்தியா வின் அரசியல் நிலைத்தன்மையையும், வளர்ச்சியையும் வெகுவாக பாதிக்கும் வண்ணம் 2-ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் உத்தேச வருவாய் இழப்பு என்று சித் தரித்த இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரி (CAG) யின் அறிக்கை. அதனை ஊதிப் பெரிதாக்கி வருவாய் இழப்பை, இமாலய ஊழல் என்று சித்தரித்து இந்திய மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திய ஊட கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள், வாதியாக (பிராசிக்யூட்டர்) மாறிய நீதித்துறை ஆகி யோரின் கருத்து ஒரு மாயத் தோற்றமே என்பதை நடந்து முடிந்த அலைக்கற்றை ஏலங்களின் தோல்வி நாட்டுக்கு உணர்த் தியுள்ளது.
ஆம்! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் டிராய் அமைப்பின் பரிந்துரையைக் கணக்கில் கொண்டு ரூ.40,000 கோடி ஏலம் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் 12.11.2012 அன்று நடைபெற்ற 2 ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.9,000 கோடிக்கு மட்டுமே ஏலம் கோரப்பட்டு படுதோல்வியில் முடிந்தது.
இந்த முதல் ஏல முறைக்கு ஏற்பட்ட தோல்விக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்சக் கட்டணம் அதிகம் எனவும், ஏலத் தில் கலந்து கொண்ட நிறுவனங்கள் தங் களிடையே கூட்டணி வைத்து (Cartel) செயல்பட்டது போன்ற பல்வேறு வியாக் கியானங்கள் முன் வைக்கப்பட்டன.
ஆனால் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோரிய அனைத்து மாற்றங்களையும் உள்ளடக்கி 03.02.2014 முதல் 13.02.2014 வரை நடை பெற்ற ஏலத்திலும் ரூ.61162 கோடிக்கு மட்டுமே அலைக்கற்றை ஏலம் கோரப் பட்டுள்ளது என்பது மீண்டும் அபரிமித மான எதிர்பார்ப்பை பொய்யாக்கி உள்ளது. இந்த ஏலத் தொகையிலும் 1800 அலைக்கற்றை ஏலம் கோரியவர்கள் அ த் தொகையில் 33 சதவிகிதமும், 900 அலைக்கற்றை ஏலம் கோரியவர்கள் 25 சதவிகிதமும் முன்பணமாக செலுத்த வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு எந்தத் தொகையும் செலுத்தத் தேவை யில்லை. அதற்குப் பின் ஏலம் எடுத்தோர் செலுத்த வேண்டிய மீதித் தொகையை ஆண்டுத் தவணையாக 10 ஆண்டுகளில் செலுத்தலாம். இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய முன்பணம் 18,296 கோடி ரூபாய் மட்டுமே.
1995 இல் கடைப்பிடிக்கப்பட்ட ஏலத் தில் பங்கேற்று, பெரும் வருவாயை எதிர் பார்த்து, போதிய வருவாய் இல்லாததால் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அந்த நிறுவனங்கள் நீதிமன்றங்களின் உத வியை நாடியதும், இறுதியில் மாண்புமிகு வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான பா.ஜ.க. அரசு ரூ.50,000 கோடியை 1999 ஆம் ஆண்டு ரத்து செய்ததும் இங்கே நினைவு கூரத்தக்கது.
மீண்டும் அதே கதிதான் இன்றைய ஏல முறையில் நிறு வனங்கள் கட்ட வேண்டிய எஞ்சியுள்ள தொகைக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் விளைவாக தொலைத் தொடர்பு மூலம் அரசிற்கு வருவாய் கிடைப்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் இன்னும் எதிர்க்கட்சி யினரும், சில ஊடகங்களும் ஏதோ இமாலய ஊழல் நடைபெற்றுள்ளதாக பரப்பி வருகின்றனர்.
ஆனால் உண்மை நிலை என்ன?
(அ) உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று அவர் களின் ஒப்புதலின் பேரில் சி.பி.அய்.யால் சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் . ஆ.இராசா ஒரு ரூபாய் கூட கையூட்டு பெற்ற தாக குற்றப் பத்திரிக்கையிலேயே கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.
(ஆ) இந்த வழக்கைக் கையாளும் சி.பி.அய்., அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் ஒன்றி ணைந்து . ஆ.இராசா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தினோம்; எல்லாக் கோணங்களிலும் தீர விசாரித்தோம்;
ஆ.இராசாவிடம் வருவாய்க்கு மீறிய சொத்து எதுவும் இல்லை; சொத்துக் குவிப்பு வழக்கு எதுவும் நாங்கள் பதிவு செய்திடவுமில்லை என்பதாக நீதிமன்றத் தில் 13.11.2013 அன்று . விவேக் பிரிய தரிசினி என்ற சி.பி.அய். விசாரணை அதிகாரி கூறியுள்ளது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும்.
(இ) முறையாக உரிமம் வழங்கப்பட வில்லை என்று 122 நிறுவனங்களின் உரி மத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றமும், இதற்கென அமைக்கப்பட்ட நாடாளுமன் றக் கூட்டுக்குழுவும் (JPC)
அந்த உரிமம் வழங்கிய ஆ.இராசா அவர்களுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காதது ஏன்?
அந்த உரிமம் வழங்கிய ஆ.இராசா அவர்களுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காதது ஏன்?
இந்தச் செயல் இயற்கையின் நியதிக்கு (National Justice) புறம்பானது அல்லவா? அவர்களின் முடிவு ஒரு தலைப்பட்சமானதுதானே!
(ஈ) 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்கிற திட்டம் 2003 முதல் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக 2009-2010 ஆம் ஆண்டு வரை ரூ.79906.64 கோடி வருவாயில் பங்காக (Revenue Share) அரசுக்குக் கிடைத்துள் ளது. இன்று அது ஒரு லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. ஆனால் ஏல முறை யால், வருவாயில் பங்காக ஆண்டுக்கு ரூ.15,000 கோடிவரை நிரந்தரமாக வரும் வருவாய் இனி அரசுக்குக் கிடைக்காது. இது ஒரு பேரிழப்பு ஆகும்.
2003 இல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத் தில் அருண்சோரி, ஜஸ்வந்த் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் (GOM) பரிந்து ரையை ஏற்று, அமைச்சரவையின் முடி வின்படி, 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டணமாக ரூ.1658 கோடியைச் செலுத்தி ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளித்து (First Come First Serve) வருவாயில் பங்கு (Revenue Share) போன்ற முடிவுகளும் கடைப்பிடிக்கப்பட் டன. ஆனால் அதே அடிப்படையில். அரசின் கொள்கை முடிவின்படி மேலும் புதிய நிறுவனங்களுக்கு திரு.ஆ.இராசா காலத்தில் உரிமம் வழங்கியது தவறில்லை என்பதை தோல்வி அடைந்த இந்த ஏல முடிவுகள் காட்டுகின்றன.
2007 இல் நூற்றுக்கு 18 பேர் தொலை பேசியை பயன்படுத்துவோர் என்றிருந்த நிலையை 2001 இல் 90 கோடியாக உயர வழி வகுத்தது. ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்ற கட்டணம் என்றிருந்த நிலையை மாற்றி விநாடிகள் (Seconds) அடிப்படையில் கட்டணம் என்ற முறையை ஏற்படச் செய்ததுடன் உலகிலேயே குறைந்த கட்டணம் இந்தியாவில்தான் என்ற நிலையையும் ஏற்படுத்தியது.
ஒவ்வொரு உபயோகிப்பாளருக்கும் மாதாந்திர தொலைபேசி செலவு (ARPU)) ரூ.298/- என்றிருந்ததை ரூ.100/- ஆகக் குறையச் செய்தது. இந்நடவடிக்கைகளால் இந்தியாவின் மொத்த வருவாயில் (GDP) 25 சதவிகிதம் தொலைத்தொடர்பின் மூலம் கிடைக்க வழிவகுத்தது. பொதுத்துறை நிறுவனங்களான BSNL / MTNL தனியார் மயமாகாமல் பாதுகாத்த தோடு, இந்நிறுவனங்களுக்கு 3ஜி உரி மங்களை, ஓராண்டு முன்பாகவே வழங்கி, குறைந்த கட்டணம் நிர்ணயிக்கச் செய்து, தனியார் நிறுவனங்களின் கொட்டத்தை அடக்கியது.
உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ ஒரு ரூபாய் லஞ்சப் பணம் இருப்ப தாகவோ வருவாய்க்கு மேல் ஒரு ரூபாய் சொத்து சேர்த்ததாகவோ நிரூபிக்கப் பட்டால், நான் வழக்கை நடத்தாமலேயே ஆயுள் தண்டனையை ஏற்றுக் கொள் கிறேன். நிரூபிக்கத் தயாரா? என்று 11.2.2011 அன்று நீதிமன்றத்தில் முழக்கமிட்ட திரு. ஆ.இராசா அவர்கள் எங்கே?
ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கிலும் வருமான வரி வழக்கிலும் 18 ஆண்டு களாக வாய்தா மேல் வாய்தா வாங்கும் கூட்டம் எங்கே? சிந்திப்பீர்! அரசின் கொள்கை முடிவில் தலை யிட்டு அசாதாரண சூழ்நிலையை ஏற் படுத்திய மத்திய தணிக்கை அதிகாரி (CAG),
CAG -யின் அறிக்கையில் கூறப்பட்டி ருந்த உத்தேச வருவாய் இழப்பு என்பதை ஊழலாக சித்தரித்து ஒவ்வொரு நாளும் நாள் முழுவதும் (24ஜ்7) விவாதம் நடத்தி தங்களைத் தாங்களே நீதிபதிகளாக பாவித்து (Trial and Judgement by Media) ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்கள்,
CAG, ஊடகங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று கூறிக் கொள்வோர் ஆகியோரின் கூக்குரலால் சி.பி.அய்.யின் விசாரணையையே, தன் மேற்பார்வையில் கொண்டு வந்தது மற்றும் குற்றச்சாட்டுப் பதிவையே, தன் நேரடி மேற்பார்வைக்குக் கொண்டு வந்தது போன்ற அசாதாரண சூழ்நிலை களைக் கடைப்பிடித்து 122 உரிமங்களை ரத்து செய்த நீதிமன்றங்கள்,
அரசின் கொள்கை முடிவுகளில் CAG, CVC மற்றும் நீதிமன்றங்கள் தலையிட உரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை நீதிமன்றங்களில் வாதிடாதது மட்டுமின்றி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உரிய முறையில் மேல்முறையீடு செய்யாத மத்திய அரசு போக்கு ஆழமாக சிந்தித்தால் மத்திய அரசின் தலைமைகள் மீது சந்தேகம் வருகிறது..
அலைக்கற்றை ஒதுக்கீட்டை மய்யப் படுத்தி கடந்த 3 ஆண்டுகளாக ஏற்படுத் தப்பட்ட அசாதாரண சூழ்நிலையால் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் மீது இருந்த நம்பிக்கையும், நன்மதிப்பும் சீரழிக்கப்பட்டு பொருளாதார தேக்க நிலை உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.