தோற்பவர்களை பற்றி ....!

இன்று  ஆவது இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்.
இதுவரை இல்லா அளவு தமிழகத்தில் ஐந்து முனைப்போட்டி .

 .தேர்தலுக்கு முன்பிருந்தே அடுத்த பிரதமர்,நாற்பதும் நமதே என்றவர்கள் கடைசி கட்டத்தில் அந்த வாக்குகளை விட்டு ,விட்டு காசு கொடுத்தால்தான் வாக்கு என்று  நம்புமளவு கள நிலவரம்.
அந்த அளவு மக்கள் மனநிலை என்னவென்று தெரியாத அளவு குழப்ப சூழல்.
ஒரு பக்கம் காசுக்கு செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்து விட்டதால் ,மோடி அலை என்று ஒரு கானல் அலை உருவாக்கப்பட்டு விட்டதால் உண்மை நிலை தெரியாமல் அனைவரும் தடுமாறும் நிலை.
இதற்கு ஊடகங்கள் தான் முக்கிய காரணம்suran.
ஆளுங்கட்சிக்கு ஆதரவான  செய்திகள் ஆனால் அதை வெளியிட்டதாலேயே ஆளுங்கட்சிக்கும் உண்மையான  மக்கள் நிலை தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு கேட்க வருவதை மக்கள் தடுக்கும் செய்திகள் வெளியானபின்னரெ ஆளுங்கட்சி நாற்பதும் நமதே,சென்னை கோட்டையில் இருந்து செங்கோட்டை குரலை தணித்துக்கொண்டது.
அதிகார வர்க்கத்துடன்,தேர்தல் ஆணையத்தின் துணையுடன் வாக்குக்கு பணத்தை கொடுக்க ஆரம்பித்தது.அது எந்த அளவு வாக்குகளை பெற்றுத்தரும் என்பது இன்னமும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.
இந்த தேர்தலில் மோடி என்பவரின் சார்பு அலை ஊடகங்களால்காசு வாங்கி  உருவாக்கப்பட்டது.
மக்களை பாதித்துள்ளதா என்பதும் பட்டவர்த்தனமாகி விடும்.
காசுக்கு வாக்குகளை மக்கள் அளிக்கிறார்களா?அல்லது தனக்கு தரப்பட்ட காசு உண்மையிலேயே உழைத்து வந்ததில் தரப்பட்டதில்லை
.சுரண்டல் காசுதான்
இதை இழந்தாலும் அவர்களுக்கு செல்வாக்கில் குறைவு வரப்ப்போவதில்லை என்று தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க ஆரம்பித்து விட்டார்களா? என்பதும் கூட தெரிந்து விடும்.

விஜயகாந்த்,பாமக கட்சிகள் சில இடங்க்களைப்பெற்றாலும் அவை மோடி அலையின் தாக்கத்தினால் கிட்டியதாகத்தான் இருக்கும்.
திமுக வாங்கும் இடங்கள்தான் உண்மையில் இப்போதைய ஆளுங்கட்சிக்கு இருக்கும் செல்வாக்கையும்,எதிர்பையும் சுட்டிக்காட்டும்.
அதுவும் கூட வாக்கு விற்றலில் முழுமையாக தெரியாமல் போய்விடும் வாய்ப்புள்ளது.
யார் ஜெயிப்பார்கள் என்று பல ஊடகங்கள் அறைக்குள் இருந்தே வாங்கிய பணத்துக்கு உண்டானபடி இடங்களை கருத்து கணிப்பு என்று தந்து விட்டன.
நாமும் நமது கருத்தை சொல்லியாக வே ண்டும்.
வேறுபாடாக தோற்பவர்களை பற்றி சொல்லலாம் .
யார் வென்றாலும் தோற்பது ஐந்தாண்டுகள் அலைக்கழிக்கப்படும் நடுத்தட்டு -அடித்தட்டு மக்கள்தான்.
M. K. Stalin


suran-------------------------------------------------------------------------------------------------------------------------












 திடீர் ஈழத்தாய் அரசு  மாவீரன்  பிரபாகரனின் நினைவாக எவ்வித நிகழ்ச் சிகளையும் வரும் மே 18 மற்றும் 19 தே திகளில்  மேற்கொள்ளக்கூடாது என்று இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அகதிகளுக்கு காவல்துறை மூலம் கட்டளையிட்டுள்ளது.


.-------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய நாட்டின் விடுதலைக்காக பகத் சிங், ராஜகுரு ஆகியோரோடு தூக்கு தண்டனை மூலம் மரணத்தை தழுவிய சுக்தேவ் பிறந்த தினம் இன்று,

வீரம் செறிந்த சுக்தேவின் தியாகத்தை மறவாமல் பெருமையுடன் நினைவு கூர்வோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
suran
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?