ஸ்டாலினுக்கு சில
குறிப்புகள்
---------------------------
திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று ஊர்,ஊராக போய் உளறிய ,திமுகவுக்கு பின்னடைவு என்றவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடிய அழகிரி யை இப் போது பெரிய ஆளாக திமுகவை வெல்ல வைக்கும் சக்தியாக எண்ண வேண்டாம் .
சொந்த வட்டத்திலேயே திமுக வை வெல்ல வைக்க முடியா வாய் சொல் வீரர் தான் அவர் .
திமுக தோற்க வெண்டும்,அது தோற்று விட்டது என்றவுடன் அழகிரி எப்படி உண்மையான கட்சிக்காரர்?அவருக்கும் திமுக எதிர்ப்பையே தன பிறவி கடனாக வைத்துள்ள சோ.ராமசாமிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
இந்த தோல்விகளுக்கு காரணம் ஊடகங்கள்,தேர்தல் ஆணையர் பிரவின் குமார்,ஜெயலலிதா,காவல்துறை,சில அரசு முக்கிய அதிகாரிகள்,இவை எல்லா வற்றையும் விட பணக்கட்டுக்குவியல் கொண்ட பலமான கூட்டணிதான் .
இது உங்களுக்கு தெரியாதது அல்ல.
நீங்கள் இந்த மக்களவை தேர்தல் களத்தின் பரப்புரையிலேயே இந்த தேர்தலை விட 2016 சட்டமன்றத் தேர்தல் வெற்றிதான் எங்கள் குறிக்கோள் என்று கூறியுள்ளீர்கள்.
அதையே இத்தோல்விக்கு சமாதானமாக்கி கொள்ளலாம்.
ஆனால் 2016 தேர்தலிலும் மேலே சொன்ன பலமான கூட்டணியுடன் தான் நீங்கள் மோத வேண்டியிருக்கிறது.அதற்குள் இக் கூட்டணி இன்னமும் தனது பலத்தை பெருக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இந்த ஜெயா கூட்டணிப் பலத்தை ஒடுக்க நீங்கள் வியூகம் வகுக்க வேண்டும் .
திமுகவின் இளையோர் பலத்தை அதிகரிக்க வேண்டும்.பொதுக்கூட்டம் போடாமல் மக்களிடம் சென்று தோழமையுடன் இந்த ஜெயா அரசின் நிர்வாக முறைகேடுகள் பற்றி பேசி மனதில் இட ம பிடிக்க வேண்டும் .ஊடகங்கள் அனைத்தும்[சன் ,தினகரன் உட்பட] ஜெயா தரும் பணத்துக்கும்,விளம்பரத்துக்கும் விலை போ ய் விட்டதை சுட்டிக்காட்ட வேண்டும் .
தேர்தல் ஆணையத்தில் அதிமுக முறைகேடுகள் பற்றி கொடுத்த புகார்கள் அனைத்தையும் 'உங்கள் ஒரு சார்பான நடவடிக்கையினால் இக்குற்ற சாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காததாலும்,இனியும் எடுக்கப் போவதில்லை என்பதினாலும் நாங்கள் கொடுத்த அத்தனை புகார்களையும் திரும்பப் பெறுகிறோம்.அனைத்தையும் அதற்கான [நீங்கள் ஒதுக்கிய ]இடமான குப்பைத்தொட்டியில் நாங்களே போட்டு விடுகிறோம்."
என்று கடி தம் கொடுத்து திருப்பப் பெறுங்கள்.
திரும்பப் பெறாவிட்டாலும் ஒரு நடவடிக்கையும் இந்த ஆணையர் எடுக்கவும் போவதில்லை.அப்படி அவர் எடுக்கும் கடுமையான நடவடிக்கையே 'இனி இவ்வாறு செய்யாக்கூடாது "என்ற காகித எச்சரிக்கை மட்டும்தான்.நீதிமன்ற எச்சரிக்கைகளையே கண்டுகொள்ளாதவர்களுக்கு இது பெரிசா?
சிலர் , ஊடகங்கள்,கூறுவது போல் வேட்பாளர்கள் தேர்வில் தவறு.அழகிரி வெளியெறதால் பின்னடைவு எல்லாம் சும்மாதான்.இத்தோ ல்விகளுக்கு காரணங்களே வேறு .அது இத்தேர்தல் ஜனநாயக முறையில் நடக்காமல் பணநாயக முறையில் நடந்து முடிந்ததுதான்.அதற்கு ஜெயலலிதா அமைத்த பலமான கூட்டணியின் செயல்பாடுகள்தான் காரணம்.
தேர்தல் நடமுறைக்கு முன்னரே பணக்கட்டுகள் ஊர,ஊராக கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
வீடு வீடாக வாக்குகளுக்கு கண்டிப்பாக இரட்டை இலைக்கு வாக்களிப்பேன் என்று வாக்கு வாங்கி வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டது.இதற்கு காவல்துறை பாதுகாப்பும் வாகனங்களும்,அரசு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டது.தெரு,தெருவுக்கு பணப்பட்டுவாடா பற்றி எழந்த புகார்களை மாவட்ட அதிகாரிகளும்,மாநில அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.குற்ற சாட்டுகளும் குப்பை கூடையில்.
இப்படி பட்ட அதிகாரிகள்,காவல்துரையினர்தானே 2016 ஏப்ரலிலும் அதிகாரத்தில் இருப்பார்கள்.
தமிழக மக்களும் பணத்தை வாங்கினால் அவர்களுக்கு விசுவாசமாக வாக்களிக்கும் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது.இந்த பணம் ஒழுங்கா உழைத்து வந்ததில்லை.இதை செலவிட்டால் இதை விட பன்மடங்கு சம்பாதிப்பார்களே என்ற எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும் .நமக்கு நல்லது செய்வதாக வாக்கு தந்து நம்மை ஏமாற்றுபவர்களை நாம் வாக்கை மாற்றிப்போட்டால் ஒன்றும் தவறில்லை.இது நம்மிடம் இருந்து போன பணம்தான்.நமக்கு வந்திருக்கிறது.வாக்கை நாம் விரும்புவர்களுக்கே போடணும் என்ற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும்.
ஊடகங்கள் 2ஜியை பக்கம் பக்கமாக எழுதின.தயாளு அம்மையார் சிறை செல்லுவாரா?என்று அலசி ஆய்வுக்கட்டுரைகள் பி.எச்.டி அளவுக்கு எழுதின.ஆனால் பெங்களூரில் நடந்த வழக்கில் பவாநிசிங் வாசித்த குற்றப்பத்திரிக்கை செய்தி "ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் "அளவுக்கு கூட வரவில்லை.
இவர்களை வெல்ல கடுமையான வெற்றி முறைகளை வகுத்து கட்சியினருக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் .
இப்போது திமுக உங்கள் கையில்தான் உள்ளது.தொண்டர்களும் உங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள்.
அழகிரி உளறல்கள் ஒருகாசும் பெறாது.காகிதப்புலி.வேட்பாளர்கள் தேர்வை பற்றி கூறப்படும் குற்ற சாட்டுகளுக்கும் கவலை வேண்டாம் .
திமுக மட்டும் இத்தேர்தலில் தோல்வியை சந்திக்க வில்லை .மோடி அலையில் படகு விட்டு கூட்டனி வைத்த விஜயகாந்த்,வைகோ எல்லோரும்தான் தோற்றிருக்கிறார்கள்.பெரும் அலையில் வந்தவர்களே இந்த இலையில் தடுக்கி விழுந்திருக்கிறார்கள்.
மீண்டும் சொல்லுகிறோம் இத்தோல்விக்கு முக்கிய காரணம்.ஆளுங்கட்சி அதிமுக தனது காவல் படை,மாவட்ட தேர்தல் அலுவலர்கள் துணையோடு பணம் கொடுத்து வாங்கியதுதான்.இத்தனைக்கும் மேல் மாநில தேர்தல் ஆணையத்தின் பூரன ஆசி.பணத்துக்கு செய்தி போடும் வியாபார பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள் ஒத்துழைப்பு.
கடைசியில் ஒரு தகவல் :
முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை செயற்கைக்கோள் மூலம் நமக்கு சார்பாக செயல்படுமாறு கட்டுப்படுத்தலாம்.தேர்தல் ஆணையம் தரும் மென்பொருளிலேயே குளறுபடி செய்யலாம் என்று சொல்லியுள்ளாரே?
உண்மையானால் தொகுதிக்கு 100 கோடிக்கு மேல் வாக்கு வாங்க செலவழிக்கும் சில கட்சியினர் இதை ஒருகை பார்த்துவிடமாட்டார்களா என்ன ?
.சும்மா .பொதுவா சொன்னேன்.
"தமிழ்நாட்டில் மக்கள வைத் தேர்தல் அமைதியாக நடக்க பொது மக்கள் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தனர். அதே போல பணம் வாங்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்."
- பிரவீன்குமார், தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு
...
பணப்பட்டுவாடா நடக்கவேன்றே 144 ஐ போட்டது யாருங்க ?நீங்கதானே?