"எலுமிச்சை" - மருத்துவ பயன்கள்

suran


எலுமிச்சம் பழமானது மங்களகரமான பழம் மட்டுமல்லாமல் உடலுக்கும் சத்துக்களை தருகிறது.
இதோ எலுமிச்சை தரும் மருத்துவ பயன்கள்:
* கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும்.
* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.
* எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
* ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
* வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.
* எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
* எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தரும். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர்.
suran
இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்றவற்றிற்கு நல்லது. நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
* எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.
* எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
* எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
* மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
* மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.

==========================================================================
ஜவகர்லால் நேரு ...

நினைவு நாள்.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1889-ஆம் ஆண்டு நவம்பர் 14-இல் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார்.

சிறுவயதிலேயே ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெறவேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார்.

ஜவகர்லால் நேரு, ஹார்ரோவிலுள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பிளில் சட்டம் பயில பதிவு செய்து கொண்டார்.

ஹார்ரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாக தந்தையின் வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912இல் வெற்றி பெற்று, ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.

1916-ஆம் ஆண்டு கமலா கவுல் என்ற 16 வயது நிரம்பிய பெண்ணை மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோஸ் காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டார். ஆனால் 1936 இல் புற்றுநோயால் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.

suran நேரு நினைவு தினம்: மே 27, 1964
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளை சந்தித்தார். 1919 இல் ஜாலியன் வாலாபாக்கில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவை காங்கிரஸ் கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள காரணமாக இருந்தது. நேரு விரைவாக காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.

1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாக சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டி வந்தது.

சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததுடன், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது.

முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடதுசாரி தலைவரானார்.

நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது.  இவரை ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று குறிப்பிடுவதுண்டு.
suran

இவருடைய மகள் இந்திரா காந்தி மற்றும் பேரன் ராஜீவ் காந்தியும், இந்தியாவின் பிரதம மந்திரிகளாக இருந்திருக்கிறார்கள். தேர்தலில் நேரு காங்கிரசை மிகப்பெரிய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஆனாலும் அவருடைய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது.

உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப்போன நேரு பதவியை துறக்க நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார்.
1953 நேருவின் ஆரோக்கியம் குறைந்து வந்ததால் மாதக் கணக்கில் அவர் காஷ்மீரில் கட்டாய ஓய்வுக்காகத் தங்க வேண்டி வந்தது.

சில வரலாற்றாளர்கள் இதை சீன ஊடுருவலில் இருந்து தப்பிக்க நடத்தப்பட்ட நாடகமாக கதை கட்டி எழுதியதை, நேரு நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார்.
1964 இல் காஷ்மீரில் இருந்து திரும்பியதும் நேரு பக்கவாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார்.

அவர் 1964 மே மாதம் 27 ம் தேதி  அதிகாலை இயற்கை எய்தினார்.
 முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் அவர் உடல் எரியூட்டப்பட்டது.
நேருவின் சாம்பல் இந்தியா முழுக்க அவரது ஆசையின்படியே தூவப்பட்டது.
suran

=========================================================================

ஆம்வே மோசடி-
நிறுவன தலைவர்
மீண்டும் கைது.

உலகின் பிரபல மோசடி நிறுவனமான ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் பிங்க்னி  கைது செய்யப்பட்டுள்ளார்.
இது போன்ற ஆம்வே மோசடி பண சுழற்சி வியாபாரத்துக்காக இரண்டாம் முறை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான ‘ஆம்வே’ தனது கிளைகளை உலகமெங்கும் உருவாக்கி பலரையும் ஏமாற்றி தனது முறைகேடான பண ச்சுழற்சி வியாபாரம் மூலம் தனது வியாபரத்தை நடத்தி வருகிறது.இந்த ஆம்வேயின் மோசடி பற்றி முன்பே நமது சுரனில் செய்தி வந்துள்ளது.
இப்போது ஆம்வேயின்  இந்திய கிளை தலைவர்
வில்லியம் எஸ் பிங்க்னி-என்பவரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
suran
ஆம்வே நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புகள் என்று  தவறான முறையில் பண சுழற்சி செய்து வந்ததையடுத்து, பரிசுத் தொகை சீட்டுகள் மற்றும் பண பரிவர்த்தனை (தடுப்பு) சட்டத்தின் கீழ் ...அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வில்லியம் எஸ் பிங்க்னியை ஆந்திர காவல்துறையினர் குர்கான் நகரில் கைது செய்தனர்.

ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் இவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கர்நூல் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார்.

இதே முறைகேடுகள் செய்து வியாபாரம் செய்ததற்காக சென்ற  ஆண்டு கேரள காவல்துறையினர் இவரை கைது செய்து, நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்திருப்பது  பிணையில் இப்போது இருப்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் தமிழகத்தில் இன்னமும் ஆம்வேயின் முறைகேடான வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இவர் ஆம்வே மூலம் 5 கோடி சேர்த்துவிட்டார்,வெளிநாட்டு பயணம் சென்றார்.மாதம் 4லட்சம் இப்போது அவருக்கு கமிசன் வருகிறது என்று ஏமாற்றும் வேலை ஆம்வே தொடர்ந்து செய்துதான் வருகிறது.
 
ஆனால் அதில் தொடர்ந்து பணம் சம்பாதிப்பவர் ஒருவரும் இல்லை என்பதுதான் உண்மை.கடைக்காரர்களுக்கு கழிவுதராமல் விலையை குறைத்து வைத்திருப்பதாகக் கூறினாலும் ஆம்வே பொருட்களின் விலை அதே தரத்துடனான மற்ற பொருட்களைவிட  அதிகம் என்பதுதான் உண்மை.
--------------------------------------------------------------------------------------------------------------------------
suran 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?