கொள்கை உறுதி


'இலங்கை வந்துள்ள இந்தியக் குழுவாலோ அல்லது இந்திய தேசத்தில் இருக்கின்ற கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரினாலேயோ இலங்கை அரசை அசைக்க முடியாது. நம்மை அசைப்பதற்கு அவர்களுக்குத் தகுதி இல்லை. நாம் கொண்ட கொள்கையில் உறுதியுடன் நிற்கின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா.இலங்கை வந்துள்ள இந்தியக் குழு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களின் விருப்பத்தின்படிதான் தீர்வைக் கொடுக்கும் அரசு. ஏனெனில், இந்த நாட்டில் சிங்கள மக்களே பெரும்பான்மை இனத்தவர்.
இலங்கை அமைச்சர்

அவர்களின் விருப்பத்துக்கு அமைவாகவே சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும். இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
இந்தியாவுக்கு அடிபணிந்து நாம் செயற்படமாட்டோம்.கருணாநிதி ஐயாவும், ஜெயலலிதா அம்மையாரும் பாடும் பாடல்களுக்கு நாம் ஆடமாட்டோம். எம்மை இந்திய தேசத்தால் அசைக்க முடியாது. இலங்கை வந்துள்ள இந்தியக் குழு இங்குள்ள மக்களை பார்வையிட்டு போகலாம். ஆனால், தீர்வை உடன் வழங்குமாறு எம்மை நிர்ப்பந்திக்க முடியாது” என்று கூறினார் அமைச்சர் மேர்வின் சில்வா.
இப்படி கூறும் இலங்கை அமைச்சர்களைக்கொண்ட ராஜபக்‌ஷே அரசு ஈழத்தமிழர்களுக்கு என்ன நன்மையை செய்து விடும்?இலங்கை சென்ற குழுவினால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி விளங்கி விட்டதா?இக்குழு தேவை இல்லை.மத்திய அரசு கண்டிப்புடன் அலுவலர்களை அனுப்பி அவர்கள் மூலம் நிவாரணத்துக்கான பணிகளைகண்காணித்து செய்தால்தான் இந்திய அரசு கொடுக்கும் நிதி உதவி-நிவாரணங்கள் உண்மையான ஈழத்தமிழர்களை சென்றடையும்.
மக்களவை குழுவை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. நாம் அனுப்பும் குழுவினர் நடந்து கொள்ளும் முறையும் அவ்வாறே.
பக்‌ஷே காட்டும் இடத்தையும்,அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட காருணா,டக்ளஸ் போன்றவர்களை தமிழர்கள் என்று சந்தித்து குறை கேட்பதும்.
விருந்தைப்பற்றி கேலிகள் வந்தாலும் தின்று விட்டு வருவதும் எப்படி நாம் அனுப்பும் குழு மீது பயத்தைக்கொண்டு வரும்.குறைந்த பட்சம் மதிப்பை யாவது தரும்?
அவர்களின் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.அது என்ன கொள்கை? தமிழர்களை கொத்தடிமையாக்குவதுதானே?
____________________________________________________________________________________________

டைம் இதழின் முதல் 100 பேர்கள் பட்டியல்.


உங்கள் பெயர் இருக்கிறதா என்று பஆர்த்துக்கொள்ளுங்கள்.
Read more: http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2111975,00.html#ixzz1sjkdnto1
____________________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?