முற்றுப் பெறா பட்டியல்
அன்னாஹசாரே குழுவைச்சேர்ந்த அரவிந்த் கேஜரிவால் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் எனப் 14 பேர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.ஆனால் ‘என்னிடம் இந்தக் குற்றச்சாட்டிற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஊடகங்களில் வெளியான செய்திகள்தான் இவற்றிற்கு அடிப்படை’ என்றார்.
ப.சிதம்பரம்: (2ஜி விவகாரம்).
. அஜித் சிங்: (நாடாளுமன்றத்தில் ஓட்டுக்குப் பணம் விவகாரம்). . பரூக் அப்துல்லா: ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி விவகாரம். . ஜி.கே.வாசன்: கண்ட்லா துறைமுகத்தைத் தனியாருக்குக் கொடுத்ததின் காரணமாக அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு. . கமல்நாத்: அரிசி ஏற்றுமதி ஊழல், ராடியா டேப்களில் திரு.15 சதவிகிதம் எனக் குறிப்பிடப்படுவது. . கபில் சிபல்: ரிலையன்ஸ் டெலிகாமிற்கு விதிக்கப்பட்ட தண்டத் தொகையில் 1.5 கோடி ரூபாய் குறைத்தது. சரத்பவார்: தெல்கி உண்மை கண்டறியும் சோதனையின்போது அவர் பெயரைக் குறிப்பிடப்பட்டிருப்பது, கிருஷ்ணா பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் அவர் குடும்பத்திற்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கியது. ஶ்பிரகாஷ்ஜெஸ்வால்11 லட்சம் கோடி ரூபாய் நிலக்கரி ஊழல். சுசில் குமார் ஷிண்டே: ஆதர்ஷ் வீட்டு ஊழல். . விலாஸ்ராவ் தேஷ்முக்: அரசு நிலத்தை மலிவு விலையில் தனியாருக்குக் கொடுத்த விவகாரம். விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் விதர்பாவில் உள்ள கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது. . மு.க.அழகிரி: ‘தினகரன்’ அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம். . வீர்பத்திரசிங்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியிடம் லஞ்சம் கேட்ட விவகாரம். . எஸ்.எம். கிருஷ்ணா: சுரங்க ஊழலில் அவர் பெயரை கர்நாடக லோக் ஆயுக்தா குறிப்பிட்டிருப்பது. பிரஃபுல் படேல்: 2004ல் அவர் பதவி ஏற்றபோது 105 கோடி ரூபாய் லாபத்தில் நடந்துகொண்டிருந்த ஏர் இந்தியா இப்போது 40 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருப்பது. பட்டியலில் இருப்பவர்கள் அரசு பொறுப்பில் இருப்பவர்கள் மட்டுமே என்றுள்ளார்.
இன்னும் இருவர் பட்டியலில் சேர்த்தால் முழுமை பெறும் என்பது என் எண்ணம்.
இவர்களும் அரசில் பொறுப்பான பதவியில் இருந்து முறைகேடுகள் செய்ததாக குற்றச்செய்திகள் உள்ளன.விசாரித்தால் நல்லதுதான்.
கிரண்பேடி:சலுகை கட்டணத்தில் விமானப்பயணம் செய்யும் போதும் மற்றவர்களிடம் முழு முதல்வகுப்பு கட்டணம் வாங்கிய முறைகேடு.
அரவிந்த் கேஜ்ரிவால்;அரசு பணத்தில் வெளிநாட்டில் பயிற்சி பெற்றுவிட்டு வந்தவுடன் பதவி விலகி அரசுக்கு பண இழப்பு செய்தது.
____________________________________________________________________________
|