புத்தாண்டு வசவுகள் உரித்தாகுக,,,
தமிழ்ப்புத்தாண்டு பற்றி அய்யா கருணாநிதிக்கு அம்மா ஜெயலலிதா பல உதாரணங்களுடன் "பதிலடி" கொடுத்துள்ளதாக சில நாள்மலர்கள் புளகாங்கிதமடைந்துள்ளன.
அன்றைய விழாவில் மக்களுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களைவிட கருணாநிதி மீதான வசைகள்தான் அதிகம்.
அன்றைய விழாவில் மக்களுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களைவிட கருணாநிதி மீதான வசைகள்தான் அதிகம்.
இதில் பதிலடி கொடுக்க இத்தனை நாள் தேடுதல் வேட்டையில் இறங்கி அமமையார் பதில் தயாரித்துள்ளார்.இல்லையென்றால் கபிலர்,அவ்வையார் விருத்து வாங்கிய தமிழறிஞர்கள் ஏன் இருக்கிறார்கள்.லட்சக்கணக்கில் ஏன் கொடுக்க வேண்டும்.?
ஆங்கில வழி கல்விக்கூடங்கள் நடத்தும் ,சமச்சீர் கல்வியை எதிர்த்து மேல்மட்ட மக்களுக்காகக் கல்வி வியாபாரம் செய்யும் ஒரு அம்மையாருக்கு தமிழ் வளர்க்கும் விருது அவ்வையார் பெயரில்.வேறு ஆட்கள் அகப்படவில்லையா?
இதில் இருந்தே தெரிகிறதே தமிழ்ப்புத்தாண்டை இவர்கண்டுபிடித்த லட்சணம்.
நாமக்கல்லையும்-பழைய பஞ்சாங்கங்களையும் ஆதாரமாக கொணர்கிறார்.
தமிழ்ப்புத்தாண்டு ஆய்வே பழைய பஞ்சாங்கம் வேண்டாம் என்றும் -அதில் உள்ள ஆர்ய மாயைகளை களைய வேண்டும் என்று தமிழறிஞர்களால் ஆய்வு மேற்கொண்டு கொணரப்பட்டத்துதானே?
நாமக்கல் தமிழ்ப்புத்தான்டு சித்திரையில் கொண்டாடப்படும் காலகட்டத்தில் இருந்தவர்தானே?
நாமும் கூட அப்படி இருந்தவர்கள்தானே,அப்போது சித்திரை மகள் சிரித்தாள் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறிக்கொண்டவர்கள்தானே.
இப்போது தை மகள் வழிதான் நமக்கு என்று சரி என்று ஆய்வின் மூலம் மாதம் மாறுகின்றோம்.
ஒரு ஆரியமாயை தனது வழியிலேயே தமிழ்ப்புத்தாண்டையும் பிறக்க வைக்க பழையவழியையே காட்டியுள்ளது.அவ்வளவுதான்.
தமிழ்ப்புத்தாண்டு தையில் பிறக்கிறதோ,சித்திரையில் பிறக்கிறதோ தமிழ் மக்களுக்கு நல்லதாக பிறக்க வேண்டும்.
ஆனால் ஜெயலலிதாவின் தமிழ்ப்பற்று நம்மை சில நேரம் சொரிய [புல்லரித்தால் வேறு என்ன செய்வது?]வைக்கிறது.
தமிழ்ப்புத்தாண்டு தொடர்பாக தமிழ் நாடு அரசு கொடுத்த ஒருபக்க விளம்பரத்தில் அவ்வையார் இருக்கிறார்.வ.வே.சா.இருக்கிறார்,கபிலர் இருக்கிறார்.ஏன் இவர்களை எல்லாம் பெற்ற தமிழன்னையும் கூட இருக்கிறார்.இவர்களின் அம்மா ஜெ "யும் இருக்கிறார்.ஆனால் தமிழ் இலக்கியத்தை வாழ்வியல் கோட்பாடுகளை உலகிற்குதந்து வான் புகழ் கொண்ட திருவள்ளுவரை மட்டும் காணோம்.
அவர் கன்னட இலக்கிய வாதி என்று அம்மையார் நினைத்து விட்டாரோ.
கபிலரை விட உலகம் முழுக்க தெரிந்தவர் வள்ளுவர்.அவர் காணாமல் போன அர்த்தம்.அவர் திமுக வைச்சேர்ந்தவர் என்ற தப்பான எண்ணமா?அல்லது
அவரை அய்யன் என்று கருணாநிதி கூறிவருவதால் அவர் கருணாநிதியின் அப்பா வழி சொந்தமாக இருப்பாரோ என்ற அய்யமா?
இது தமிழறிஞர்களை அம்மா கொண்டாடும் புரட்சி வழியா?
கன்னியாகுமரியில் கால் கடுக்க நிற்கும் வள்ளுவரின் சிலைக்கு உப்பு காற்றில் இருந்து பாதுகாக்கும் மூலிகைக்கலவையை பூச அனுமதிக்காமல் இருப்பதன் மூலம் வள்ளுவர் மீது ஜெயா கொண்டுள்ள அர்த்தமற்ற கோபத்தின் காரணம் புரிகிறது.
தமிழ் ப்புத்தாண்டை மாற்றியதின் காரணம் தமிழ் மீது கொண்ட பற்று அல்ல.கருணாநிதியின் மீது கொண்ட கடுப்புதான் காரணம்.அதை கூறி விட்டு செல்லாமல்.புலவர் ராஜமாணிக்கம் சொன்னார் .நாமக்கல் கவிஞர் சொன்னார்.பழைய பஞ்சாங்கம் சொன்னது என்பது சொத்தை வாதம்.
பஞ்சாங்கம்,மாதங்கள் அனைத்துமே அன்றைய அரச குருக்கள் சொன்னதின் அடிப்படையில் அமைந்தவைகள்தான் .அம்மாதங்களின் பெயரில்கூட மருந்துக்கும் தமிழ் இல்லை என்பதே அவை எங்கிருந்து,யாரால் உருவாக்கப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிடுமே.
அப்படி உருவான அக்கால வேதியர்களின் கணிப்புப்படி தயாரான மாதங்கள் 60 ஆண்டுகள் தமிழர்களுக்கு சொந்தமானதல்ல.அவர்கள் தலை மீது திணிக்கப்பட்டவைகள்தான்.
அந்தகால அரசர்களும் தங்கள் ராஜகுருக்கள்[அதாவது சாணக்கியன்]பரம்பரையினர் ,கடவுளிடம் தாங்கள் பேச-தொடர்புகொள்ள அவர்களால்தான் முடியும் என்ற கட்டாயத்தில் வாங்கிக்கொண்ட வைகள்.மக்களாலும் அதை கொண்டாடவும்-கும்பிடவும் வைக்கப்பட்டவைதான்.
மொத்தத்தில் அக்கால வேதியர்களால் தமிழர்கள் தலை மீது கடவுள்களும்,சம்பிரதாயங்களும்,பஞ்சாங்கங்களும் தூக்கி வைக்கப்பட்டது போல் தமிழே அல்லாத வார்த்தைகளைக்கொண்ட தமிழ்[?]மாதங்களும்,முற்றிலும் தேவநாகரி வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்ட தமிழ்[?]ஆண்டுகள் 60 ம் திணிக்கப்பட்டன.
திருவள்ளுவர் போன்ற தமிழறிஞர்கள் ஒத்துக்கொள்ளாத இன்றையா ஆட்சியாளர்களுக்கு தமிழ் ஆண்டு தையில் பிறப்பது மட்டும் ஒத்துக்கொள்ளுமா?
அவர்கள் தரும் தமிழறிஞர்கள் பெயரிலான விருதுகள் கூட தமிழைக்குழி தோண்டி புதைக்கும் ஆங்கில வழிக்கல்வி வியாபாரிகளுக்குத்தான் என்பதில் இருந்தே அம்மாவின் தமிழ் பாசம் புரிகிறதல்லவா?
முன்னாள் முதல்வர் 1990இல் கைதிகளை தமிழ்ப்புத்தாண்டு அன்று விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார் என்று மாபெரும் கண்டுபிடிப்புடன் குற்றம் சாட்டியுள்ளார்.

அன்றுவரை அல்ல.2010 இல் தானே தையை ஆண்டு பிறப்பாக அறிவிக்கப்பட்டது.அதுவரை பழைய பஞ்சாங்கம்தானே இருந்தது.அப்போது அதைத்தானே கடை பிடித்தோம்.அப்படி இருக்கையில் அவ்வாறு கூறியதில் என்ன தவறு.என்பதை அம்மையார்தான் கூறவேண்டும்.
மாறி,மாறி தமிழ்ப்புத்தாண்டை ஆட்சியாளர்கள் அறிவிப்பதில் மண்டை காய்ஞ்சி போய் அலைவது தமிழ் மக்களும்,நாட்காட்டி தயாரிப்பவர்களும்தான்.ஜெயலலிதா அறிவிப்பால்சித்திரை புத்தாண்டு என்றால் ஒரு நாள் விடுப்பு கூட கிடைக்கிறது [தைமுதல்நாள் என்றால் பொங்கல் விடுப்பில் கழிந்து விடுகிறதே?]
_________________________________________________________________________________

மீண்டும் அதிருகிறது....?
குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களில் காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மும்பை, சோலாப்பூர், கோலாப்பூர், நவிமும்பை மற்றும் புனே போன்ற முக்கிய நகரங்கள் அதிர்ந்தன.
குஜராத்தில் நில நடுக்கம் 4 ரிக்டர் அளவாக இருந்ததால் பெரும் அளவில் பாதிப்பு இருக்காது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சென்ற புதன்கிழமை இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை நாடு முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது. தமிழக கடலோரம் மற்றும் தென் கிழக்கு ஆசிய பகுதி மக்கள் அச்சம் கொண்டிருந்தனர்.
. இந்தியாவின் மேற்கு பகுதியில் இன்று காலையில் நிலநடுக்கம், நில அதிர்வு அந்தப்பகுதியில் உள்ள மக்களைளாச்சம் கொள்ள வைத்துள்ளது.
குஜராத்தில் கட்ச் பகுதியில் ரிக்டர் அளவு 4 ஆகவும், மும்பை மற்றும் சத்ராவில் 4. 9 ஆகவும் பதிவாகியிருக்கிறது. நில அதிர்வை உணர்ந்த மக்கள் அனைவரும் கட்டடங்களை விட்டு வெளியேறினர்.
கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது.
முந்தைய குஜராத் கஜ் பகுதி பூகம்ப அழிவு நினைவுக்கு வருகிறதா?
________________________________________________________________________
அ[மெரிக்க] வ மரியாதை?
மீண்டும் அந்த தவறையே அமெரிக்கா மட்டுமல்ல ஷாருக்கானும் செய்துள்ளனர்.
"மதியாதார் வாசல் மிதியாதே"இந்த தமிழ்ப்பழமொழி போல் வடக்கே இந்தியில் ஒன்றும் கிடையாதா?
முன்பே அமெரிக்கா சென்று அவமரியாதையை வாங்கிக்கொண்ட அனுபவம் ஷாருக்கானுக்கு இருக்கிறது .மீண்டும்,மீண்டும் வாங்க அது என்ன பிலிபேர் அவார்டா?
பின் ஏன் அங்கு மீண்டும் செல்ல துணிகிறார்.
இரட்டைக் கோபுர இடிப்புக்குப் பின் முசல்மான் பெயரில் வருபவர்களை அமெரிக்கா தனி [அவ]மரியாதை செய்கிறது.அப்துல் கலாம் .இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் என்ற மரியாதை கூட இல்லாமல் மேலாடையை கழற்றி சோதனை செய்துள்ளனர்.
அடுத்து நம்மவர் கமல்ஹாசனையும் அவர் பெயரில் ஹாசன் ஒட்டி இருப்பதால் காக்க வைத்து மரியாதை தந்துள்ளனர்.
ஏன் ஷாருக்கும் கூட முன்னனுபவம் இருக்கிறதே?
அப்படியும் அமெரிக்கா போக வேண்டிய கட்டாயம் என்னவந்தது?
அப்படி சென்ற பின் அவர்கள் காக்க வைத்து விட்டார்கள் என்ற புலம்பல் ஏன்?
தமிழ்ப்பழமொழியை ஷாருக் கிடம் யாரவது இந்தி தெரிந்தவர்கள் எடுத்து சொல்லுங்கள். _________________________________________________________________________________

அண்ணன் நித்தியானந்தாவின் காணொளி .
சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக வழங்குவோர்."சுரன்"
__________________________________________
_________________________________________________________________________________