ஈழம் சென்ற குழு,,,,,,.
இலங்கை சென்ற இந்திய மக்களவை உறுப்பினர் குழு தேவை இல்லை .அவர்கள் போய் வருவதால் எந்த பயனும் அங்கு அகதிகளாக வாடும் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.இதுதான் பெரும்பான்மையோர் கருத்து.நடைபெறும் உண்மையும் கூட .
ஆனால் அந்த குழுவினர் இந்தப்பயணத்தில் சந்தித்த இடையூறுகள்.சோதனைகள்.துன்பங்கள் மற்றும் இது போன்றவைகள் ஏராளம்.அதை படித்தால் உங்கள் கண்கள் நீரால் நிரம்பிவிடும்.
அவர்களின் பயணக்கதையை -சந்தித்த துயரங்களைபங்கு பெற்ற தியாகி சொல்கிறார் .பகிர்ந்து கொள்ளுங்கள்.
"கடந்த நான்கு நாட்களாக இந்தியப் பாராளுமன்றத் தூதுக்குழுவைச் சேர்ந்த நாங்கள் காலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையில் எவ்வித ஓய்வும் இன்றி எமது இலங்கை விஜயத்தின் போது சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தியதுடன் பல பொது நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டோம்.
எங்களுக்கு நாடு திரும்பும் போது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சிறிய பரிசில்களைக் கூட கடைத் தெருவுக்குச் சென்று வாங்குவதற்கு நேரம் இருக்கவில்லை" என்று பத்திரிகையாளர்களிடம் திருமதி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
[இதில் தனியே தனது மகளுடன் சென்று ராஜபக்ஷேவுடன் விருந்துண்டதை சொல்ல மறந்து விட்டார்.அவர்கள் கட்சிக்கே உரிய 'செலக்டிவ் அம்னீசியா"வா.]
எனது தூதுக்குழுவில் உள்ள ஒரு உறுப்பினருடன் இந்தியாவில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது மனைவி நீங்கள் கொழும்பு மாநகரத்தைச் சுற்றிப் பாத்தீர்களா என்று கேட்டார்.
அதற்கு அந்த உறுப்பினர் நான் ஹோட்டல்களை மாத்திரம்தான் பாத்திருக்கிறேனே தவிர கொழும்பு மாநகரத்தைச் சுற்றிப் பார்ப் பதற்கு எனக்கு நேரம் இருக்கவில்லை என்று பதிலளித்திருக்கிறார்.[ஹோட்டல்களை எதற்காக பார்த்தார்.விருந்து வகைக்காத்தானே?] இவ்விதம் தான் நாம் அனைவரும் எங்கள் இலங்கை விஜயத்தின் போது ஒரு நிமிடத்தைக் கூட[?] வீணாக்கவில்லை என்று சுஸ்மா சுவராஜ் கூறினார்.
ஒருசெய்தியாளர் "தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி தமிழ் ஈழம் ஒன்றை ஏற்படுத்துவது பற்றி மக்களிடையே ஒரு அபிப்பிராய வாக் கெடுப்பை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாரே, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்றுகேட்டபோது போது, அவரைப் பார்த்து திருமதி சுஸ்மா சுவராஜ் ஏளனமாக நான் கருணாநிதி அல்லவே? இந்தக் கேள்வியை நீங்கள் கருணாநிதியிடம் அல்லவா கேட்க வேண்டும் என்றார். அப்போது அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர் மத்தியில் கொல் என்று சிரிப்பொலி கேட்டது.யாரைக்கொல் என்றுதான் தெரியவில்லை.
ஈழம் என்றாலே எரிச்சல் அடைகிறவர்களும் ,பிரபாகரன் மீது கோபம் உள்ள ரங்கராஜன் மற்றும் காங்கிரசு கட்சியினர் போன்றவர்கள் உள்ள குழு ஈழத்தமிழர் உண்மை நிலையை எப்படி சரியாக உணர்ந்து ,தார்மீக கோபத்துடன் அதை அப்படியே இங்கு அறிக்கையாக வெளியுலகுக்கு தருமளீழத்தமிழர் கொன்று குவிக்கப்பட்டதாக கருணாநிதி கூறு கின்றாரே என்று கேட்டாலும்அதற்கும் கருணாநிதியை போய் கேள் என்றுதான் பதில் சொல்வார்கள்.
இதை விட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர் ரங்கராஜன் இலங்கைக்குழுவில் சேர்ந்தது அநியாயம்.அந்த கட்சியில் வேறு மக்களவை உறுப்பினர்களே இல்லையா?
அவரின் மனநிலையை அவர் இலங்கை அமைச்சர்கள் கூட்டத்தில் கதை சொல்வதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்ரங்கராஜன், ஒரு கதை சொல்லப் போவதாக ஆரம்பித்தார் “எனது மகனுக்கு 12 வயதாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை அவர் தனது புத்தகத்தில் வைத்திருந்தான்.
எதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாய் என்று கேட்டபோது அதற்கு அவர்தான் தமிழ் மக்களின் தலைவர் என்று எனது மகன் பதிலளித்தான்.சிலகாலங்களுக்குப் பின்னர் அந்தப் படத்தைக் காணவில்லை.
அதற்கு என்ன நடந்தது என்று மகனிடம் கேட்டபோது, அவர் ஒரு கதாநாயகன் அல்ல என்று புரிந்து கொண்டதால் தான் அதை அகற்றி விட்டதாக மகன் கூறினான்.என்று ரங்கராஜன் கூறினார்.
அந்தக் கதையை ரங்கராஜன் கூறி முடித்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடங்கினார்.”போர் முடிவடைய முன்னதாக பிரபாகரனைச் சந்தித்தபோது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்களை வலியுறுத்தினேன்.
முதலாவது அரசியல் தீர்வு. இரண்டாவது மனிதஉரிமைகள். இந்த இரண்டையுமே அவர் கவனத்தில் கொள்ளவில்லை” என்றார் இரா. சம்பந்தன்.
இவர்கள் இருவரும் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச, ரங்கராஜனைப் பார்த்து, “விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் முதலாவதாக இருந்தது யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
“அவர்களின் கொலைப்பட்டியலில் முதலில் இருந்த்து எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச தான். அதற்கடுத்ததாக இருந்தது யார் என்று தெரியுமா? அது சம்பந்தன் தான்.” என்றார்.
“அதை நீங்கள் அறிவீர்களா?” என்று இரா.சம்பந்தனைப் பார்த்துக் கேட்டார் பசில் ராஜபக்ச. அதற்கு அவர் தனக்குத் தெரியும் என்று பதிலளித்தார். இந்தக் கதையை கொழும்பு ஆங்கில வாரஇதழ் வெளியிட்டுள்ளது.
இவர்கள் கலந்தாலோசனை எந்த மாதிரி இருந்துள்ளது என்று புரிகிறதா?
இதுதான் இவர்கள் ஈழத்தமிழர் துயரை பற்றி கலந்தாலோசித்து.இலங்கை அரசுக்கு ஈழ மக்கள் துயர் துடைக்க ஆலோசை வழங்கிய லட்சணம்.
குழுத்தலைவர் ராஜபக்ஷேயுடன் ரகசிய விருந்தில் கலந்து கொண்டு பரிகளை வாங்கியுள்ளார்.ஒன்று பட்ட இலங்கைதான் தேவை என்று சொல்லுகிறார்.ஒன்று பட்ட இலங்கையில் தமிழர்களுக்கு உரிமைகளை பிரித்துக்கொடுங்கள் என்று சொல்ல முடியவில்லையே சுஷ்மாவால் அது ஏன்?
மற்றவர் பிரபாகரனை பற்றி கதை சொல்கிறார்.அதன் மூலம் பிரபாகரன் தமிழர்களின் தலைவர் அல்ல என்று இலங்கை கொடுங்கோலர்களில் ஒருவரான பசில் பக்ஷேவிடம் சுட்டிக்காட்டுகிறாராம் ரங்கராஜன்.இந்த கதை இப்போது தேவையா? அதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது.பரிசை மேலே கொஞ்சம் போட்டுக்கொடுங்கள் என்பதற்காகவா.
ஈழத்தில் தமிழர்களின் இப்போதைய நிலை -அவலம் பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டால் அவர்கள் ஆய்வை விட்டு விட்டு தனி ஈழம் அவசியம் இல்லை.பிரபாகரன் தமிழர்களின் தலைவனில்லை என்று கட்டுரை வாசித்து விட்டு வந்துள்ளார்கள்இதில் ரங்கராஜன் தாம்சந்தித்தவர்களில் ஒருவர் கூட தமிழீழம் தேவை என்று இவர்களிடம் மனு கொடுக்கவில்லையாம்.ராஜபக்ஷே அரசு தேர்ந்தெடுத்து இவர்களை சந்திக்க வருபவர்கள் அப்படி அரசுக்கு எதிராக சொல்வார்களா?இந்த அடிப்படை அறிவு கூட மார்க்ஸை [உண்மையிலேயே]படித்திருந்தால் தெரிய வேண்டாமா?
பக்ஷேக்கள் இவர்களை சந்திக்க பிள்ளையான்,டக்ளஸ்,சம்பந்தம் என்ற அடிவருடிகளைதானே தேர்ந்தெடுத்திருப்பார்கள்.பிரபாகரன்,கிட்டு,தமிழ்செல்வன்,திலீபன் போன்றவர்களையா சந்திக்க செய்வார்கள்.
பக்ஷேக்கள் இவர்களை சந்திக்க பிள்ளையான்,டக்ளஸ்,சம்பந்தம் என்ற அடிவருடிகளைதானே தேர்ந்தெடுத்திருப்பார்கள்.பிரபாகரன்,கிட்டு,தமிழ்செல்வன்,திலீபன் போன்றவர்களையா சந்திக்க செய்வார்கள்.
ஆனால் இப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய இந்திய அரசுதான் .அதன் நோக்கத்தை இக்குழு நல்ல முறையில் நிறைவேற்றியுள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம்.
இந்திய குழுவின் இலங்கை ஆய்வுகுறித்த செய்திகளையும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் தற்போதைய நிலைவரங்கள் குறித்தும் இங்கிருந்து நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சன்.டி.வியின் செய்தியாளர் சிலர் இலங்கை வந்திருந்த நிலையில் இவர்களை விமானநிலையத்தில் சோதனைக்குட்படுத்திய சுங்க அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த தொலைத்தொடர்புக் கருவிகள், மற்றும் ஒளி பரப்பு சாதனங்களை முகாம்களுக்குள் எடுத்துச்செல்லக்கூடாது என அறிவித்து கைப்பற்றி திரும்பி செல்லும்போது வாங்கிச்செல்ல கூறி விட்டனர்.
சுங்க அதிகாரிகளின் இந்தக் கண்டிப்பான உத்தரவால் வெறுங்கையுடனேயே இந்திய ஊடகங்கள் சென்றுள்ளனர்.இலங்கை அரசு தந்த புகைப்படங்களைத்தான் வெளியிடவேண்டிய கட்டாயம் ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ளது.இரும்புத்திரைக்குள்தான் குழுவின் இன்பச்சுற்றுலாவும் 45 ஆயிரம் விதவைகளைப்பார்த்து கதறி அழுத தும் நிகழ்ந்துள்ளது.