இங்கேயும் பாருங்களேன்,,,

இலங்கை தமிழர் கண்ணீர் துடைப்பதில் தீவிரமாக அறிக்கைகள் ,குழு அனுப்புவதில் மும்முரமாக உள்ள நாம் இங்கு தமிழகத்திலேயே அடிப்படை வசதிகள் கேட்டு உண்ணாநிலை போராட்டத்தில் 8 நாட்களாக ஈடுபட்டுள்ள இலங்கை அகதிகளை கண்டுகொள்ளவில்லையே.
ஈழத்தமிழர்களுக்கு வசதிகளைக்கொடு-மீள் குடியேற்றம் செய் என்று அறிக்கை மேல் அறிக்கை விடும் வைகோ,சீமான்,நெடுமாறன் இந்த ஈழவர்களைக்கண்டு கொள்ள வில்லையே ஏன்?
முடியா ஈழமக்கள் பிரச்சினையை கையில் எடுத்தால் ஆண்டு முழுக்க அரசியல் நடத்தலாம்.ஆனால் இவர்கள் பிரச்சினையில் ஒன்றும் கதைக்குதவாது என்ற எண்ணமாக இருக்கும்.
முகாமை விட்டு வெளியே சென்று வர அனுமதிக்க வேண்டும்.போர்க்கைதிகளைப்போல்,தூக்குத்தண்டனை கைதிகளைப்போல் முகாமிற்குள்ளேயே சிறை வைப்பதை எதிர்த்தும்,முகாமில் சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் கேட்டும் 13 அகதிகள் செங்கல்பட்டு அகதிகள் முகாமில் நீர் கூட அருந்தாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் உண்ணாநிலை இருந்து வருகின்றனர்.
சுரன்

வட்டாட்சியர் எட்டிப்பார்த்து விட்டு ஆவன செய்வதாக சென்று விட்டார்.அரசியலை சேர்ந்தவர்களில் மல்லை சத்தியா மட்டும் வந்து ஆறுதல் கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதை பற்றி நம் ஊடகங்கள் ஒரு பெட்டி செய்தி கூட வெளியிடவில்லை.
இவர்களுக்கு தேவையானவற்றை செய்யும் அதிகாரம் படைத்த ஜெயா அரசும் ஈழத்தமிழர் வசதிகளை பற்றி அறிக்கை மட்டும் விட்டு,விட்டு அகதிகளை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்று சொல்லிவிடலாம்.ஆனால் 13 உயிர்கள் அல்லவா முடிவை எதிர் நோக்கி இருக்கிறது.அய்யா பழ.நெடுமாறன் ,சீமான்,வைகோ உங்கள் பார்வையை இந்த பக்கமும் திருப்பி ஏதாச்சும் அம்மாவிடம் குரல் கொடுத்து இவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.பிறகு பக்‌ஷேயுடன் போரிடலாம்.
________________________________________________________________________________-
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?