விலை போகும் விலையில்லா கணினி.
இலவச மடிக்கணினியை விலையில்லா மடிக்கணினி என்று பெயர்வைத்துக்கொடுத்தாலும் ஏற்கன்வே வச்சிருக்கிற கல்லூரி மாண்வர்களுக்கும் அரசு கொடுக்கிறது.ரெண்டு லேப்டாப் ஆகிவிடுவதால்.. புரோக்கர் மூலம் அரசு கொடுத்த லேப்டாப்ப வெளிமார்க்கெட்ல வித்துடறாங்க.. அதுவும் கம்மியான விலைக்கு. ஒரு லேப்டாப் அரசு கொள்முதல் விலை 12000 ரூபாய் தான்.என்பதால் அதை விட இங்ககுறைவாக விற்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதற்கு காரணம் அரசு இலவசமாக கொடுப்பதால் அதன் தரமும் அப்படித்தான் இருக்கும் என்ற எண்ணம்.இன்னும் சிலர் லேப்டாப்பின் தெரியாமல், பாட்டு கேட்பதற்கும், டி.வி.டி.ல படம் பார்ப்பதற்கும் மட்டும் உபயோகிக்கிறார்கள்.மாணவர்கள் வீட்டில் பிள்ளைகள் கணினி பார்த்து கெட்டுவிடுவார்கள் என்றும்,கணினி சார் கல்வி பயிலா மாணவர்களுக்கு கணினி தேவை இல்லாததால் அதைவிற்று விட பெற்றோர்களே தூண்டுகிறார்கள்.
மடிக்கணினியை நல்ல விதத்தில் பயன்படுத்தும் மாணவர்கள் வெகு சிலரே உள்ளனர்.அவர்கள் கணினி சார்ந்த கல்வி பயில்பவர்களாகவே உள்ளனர். இருக்கிறார்கள்.
தமிழகத்தின் மொத்த கடன் சுமை ரூ.90 ஆயிரம் கோடி என்றும், தனிநபர் கடன் ரூ.15000 என்றும் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இது சரியான புள்ளிவிபரம் கிடையாது என மறுத்திருக்கும் கலைஞர் தமிழகத்தின் மொத்தக் கடன் சுமை ரூ.74,858 கோடி என்றும் தனி நபர் கடன் சுமை ரூ.12,054 என்றும் கூறியிருக்கிறார். இந்த அளவுக்கு கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழக அரசு, எல்லோருக்கும் லேப்டாப் என்பதைத் தவிர்த்து விட்டு, தகுதியான கணினிசார் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இலவசமாகவழங்கிட வேண்டும். மேலும், அரசு வழங்கிய லேப்டாப் சந்தையில் விற்பனைக்கு வருவதைத் தடுக்கும் வகையில் கண்காணித்திட வேண்டும்.
,இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. இப்போது, அரசு வழங்கியிருக்கும்யைலவச மடிக்கணினியும் விற்பனைக்கு வர ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 68 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படவிருக்கிறது. இதற்கான செலவு ரூ. 10, 200 கோடி ஆகும். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 9.12 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. உலகத்தரத்துக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே மாணவர்களுக்கு “லேப்டாப்’ வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அதன் உண்மையான நோக்கம் முதல்வருக்கு வாக்குகள் வாங்க பயன் பட்டுள்ளது.அதுவே மடிக்கணினி வாங்கியவர்களுக்கு பணம் [விற்பதன் மூலம்] கிடைக்க பயன் படுகிறது.
அரசு கூறிய நோக்கம் குப்பைக்கே போயுள்ளது.!
அரசு வழங்கிய கணினி விற்பனைக்கே போகிறது.!!
_______________________________________________
வி"லை"யாடப்படும்ஹாக்கி மைதானம்
இந்தியா, ஒலிம்பிக்கில் எட்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. ஹாக்கி தேசிய விளையாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விளையாட்டுக்குரிய கட்டமைப்புகள் விரிவாக்கப்பட வேண்டும், வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. புதிதாக உருவாக்குவது ஒருபுறம் இருக்கட்டும். இருப்பதைத் தக்கவைப்பதில் அரசும், விளையாட்டுத் துறையும், மாவட்ட - மாநில ஹாக்கி அமைப்பும் தீவிரம் காட்டுவதில்லை என்பதற்கு கோவில்பட்டி ஹாக்கி மைதானம் ஒரு ‘சீரிய’ உதாரணமாகும்.ஹாக்கி மந்திரவாதி ன்று சர்வதேசப் புகழ்பெற்ற நாயகன் தயான்சந்த் ஆடிய தளம் இது. செந்தில், கணேசன் போன்ற எண்ணற்ற தேசிய வீரர்கள் விழுந்து எழுந்து ஓடியாடிய ஆடுதளம் இது. 1944ம் ஆண்டில் கோவில்பட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் உரு வானது. அது மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளை இங்கு நடத்தியுள்ளது.
1960ம் ஆண்டில் டாக்டர் துரைராஜ், துரைராஜ் நாயுடு, என்.பொன்னுச்சாமி நாடார் ஆகியோரால் பொதுக்காரியங்களுக்காக இந்த மைதானம் வாங்கப்பட்டது. அதற்கடுத்த ஆண்டுகளில் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தில் ஹாக்கி கொடிகட்டிப் பறந்த காலம் அது. ஜி.குப்புசாமி நாயுடு நினைவு போட்டிகள் அம்மைதானத்தில் நடத்தப்பட்டன.கோவில்பட்டி ஹாக்கி போட்டிகளுடன் லட்சுமி மில்ஸ் நிர்வாகம் தன்னை இணைத்துக் கொண்டது. லட்சுமி மில்ஸ் நிர்வாகம் இங்கு ஹாக்கியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. அப்போது ஜி.குப்புசாமி நாயுடு மெமோரியல் டிரஸ்ட் உருவாக்கப்பட்டு, அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டன. டிரஸ்டின் செயலாளராக இருந்த கே.செல்வராஜ் என்பவர் ஹாக்கி மைதானத்தை ரியல் எஸ்டேட்காரர்களிடமும் அரிசி ஆலை அதிபர்களிடமும் விற்க முயற்சித்து வருகிறார். இந்த மைதானத்தை துரைராஜும் அவருடைய நண்பர்களும் டிரஸ்ட்டுக்கு அன்பளிப்பாக அளித்தார்கள். ஹாக்கி நலனுக்காக மட்டுமே அந்த நிலம் பயன்பட வேண்டும் என்றும் அந்த தானப் பத்திரம் கூறுகிறது.
சிபிஎம் தலையீடு
வருவாய் அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் நில மோசடிக் கும்பலுக்கு துணையாக நிற்கின்றனர். 7.1.09 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மைதான மீட்புக் குழுவும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி மக்களிடம் நிலைமையை எடுத்துக் கூறின. அதற்குப்பின் கோவில்பட்டி மற்றும் மாவட்ட தலைநகர் தூத்துக்குடியிலும் சில இயக்கங்கள் நடத்தப்பட்டன.மைதானத்தைக் கையகப்படுத்தி விற்க முயலும் மோசடிக் கும்பல் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகரச் செயலாளர் சீனிவாசன் வீட்டில் வெடிகுண்டுகளை வீசி அவரைக் கொல்ல முயற்சித்துள்ளனர். காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டும் இன்றுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டது. கோவில்பட்டி ஹாக்கி வீரர்கள், தமிழகம் முழுவதும் உள்ள ஹாக்கி வீரர்கள், ஆர்வலர்கள், கோவில்பட்டி நகர பொதுமக்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவொன்று சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கோவில்பட்டி மக்கள் சார்பில் அளிக்கப்பட்டது.மைதானத்தைக் காப்பதற்காக சிபிஎம் நடத்தும் போராட்டங்களுக்கு நாங்களும் துணை நிற்போம் என்று கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ளோர் உறுதி அளித்துள்ளனர். ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்போவதாக பொதுமக்கள் கூறினர். மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியோடு போராடும் என்று ஜி.ராமகிருஷ்ணன் உறுதியளித்தார்.
அநீதிக்குத் துணைபோகும் அரசுத் துறைகள்
கோவில்பட்டி ஹாக்கி மைதானம் ஒரு டிரஸ்ட் சொத்தாகும். அது ஒரு தனிப்பட்ட டிரஸ்ட் அல்ல. அது ஒரு பொது மக்கள் டிரஸ்ட் . அதை யாரும் விற்கவோ, வாங்கவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கூறியுள்ளது.இந்த மைதானம் விளையாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று மைதானம் உருவாகும் போதே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதை இப்போது ஒரு கும்பல் அபகரிக்க முயல்கிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் எந்த வித நடவடிக்கையும் உறுதியாக எடுக்காமல் நில மோசடி செய்பவர்களுக்கு துணையாக இருக்கிறது.மாவட்ட நிர்வாகமும்-காவல்துறையும்நிலமோச்டிக்காரர்களுக்குதுணையாக நிற்கின்றன. அவர்களை பாதுகாக்க அவை விரும்புகின்றன.எம்பதுதான் இந்த நில அபகரிப்பில் இருந்து தெரிகிறது.ஓடி,ஓடி நில மோச்டிக்காரர்களை கைது செய்யும் அரசு இதில் வாயை-கையை சும்மா வைத்திருக்கக் காரணம் என்ன?அவை எல்லாம் அதிமுக எதிரிகளுக்கு மட்டும்தானா?
________________________________________________________________________
மாதவன் நாயரின் முறைகேடுகள்.
ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கடமை தவறியும், முறைகேடாகவும் செயல்பட்டார் என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாதவன் நாயர் இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறார்?
இத்தனை சட்ட -விதிமுறைகளை மீறி தனியாருக்கு லாபம் வரும் படி நடந்து கொண்டதற்கு பின்னணி ஏதாவது இல்லாமலா இருக்கும்.
அதன் பின்னரும் தன்னை உத்தமபுத்திரனாகக் காட்டிக்கொள்ள எப்படி மனசு வருகிறதோ?