கோடை சுற்றுலா...

ராஜபக்‌ஷே விருந்துக்கு வரலையா?
இந்தியாவில் இருந்து மக்களவை குழு ஒன்று இலங்கைக்கு செல்கிறதாம்.
என்ன நோக்கம் என்று தெரியவில்லை.
ஏற்கனவே சென்ற குழு ராஜபக்‌ஷேயின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு அவர் கொடுத்த பரிசுகளை கை நிறைய வாங்கிக்கொண்டு நாடு திரும்பியது.
இவர்கள் அங்கு செல்வதால் அங்குள்ள தமிழர்களுக்கு இதுவரை என்ன நடந்துள்ளது.என்ன கிடைத்துள்ளது?

மக்களவை உறுப்பினர்கள் இலங்கை சுற்றுப்பயணம் செல்ல மட்டுமே இது உதவும்.
இவர்களுக்கு ராஜபக்‌ஷே தான் செல்ல வேண்டிய -பார்க்க வேண்டிய இடங்களை முடிவு செய்வார் .அதன் படி கண்ணில் கவசமிட்ட குதிரைகளைப்போல் அவர் காட்டிய திசைகளை மட்டும் பார்த்துவிட்டு வருவார்கள்.
திருமா இங்கு பேசிய பேச்சுகளுக்கு பக்‌ஷே தேநீர் விருந்தில் நக்கலடித்தார் முன்பு.இப்போது அதேதான் நடக்கும்.கூடுதலாக ஐ.நா வில் அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தற்கு நக்கலடிப்பார்.
மக்களவை உறுப்பினர்கள் செல்வதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.அங்குள்ள முகாம்கள் 5 நட்சத்திர வரிசையில் சேரப்போவதில்லை.
சுற்றுலா மட்டுமே


கிடைக்கும் ஒரே நன்மை.பக்‌ஷேயின் விருந்தும்-பரிசும்தான் .அதற்குத்தான் இந்த கோடை காலசுற்றுலாவான இலங்கை சுற்றுப்பயணம் உதவும்.
ஜெயலலிதா எடுத்தது போல் மற்ற கட்சியினரும் தங்கள் ஆட்களை அனுப்ப மறுப்பதுதான் சரியாக இருக்கும்.
மற்றப்படி காங்கிரசுக்காரர்கள் செல்வதை நாம் தடுக்க முடியாது.அவர்கள் தமிழர்களை சந்திக்க செல்லப்போவதில்லையே?
____________________________________________________
"டைம்" சரியில்லையா மோடிக்கு?
உலகின் 100 சக்தி வாய்ந்த மனிதர்களை முடிவு செய்வ தற்காக அமெரிக்க நாட்டு டைம்ஸ் இதழ் நடத்திய  வாக் கெடுப்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 2,66,684 (நோ வே) வாக்குகள் எதிராக பெற்று பின்தங்கிய நிலையில் உள்ளார்.
2012 ஆம் ஆண்டின் உல கின் 100 சக்தி வாய்ந்த மனிதர் களை முடிவு செய்யும் வாக் கெடுப்பை பிரபல அமெரிக்கப் பத்திரிகையான டைம்ஸ் நடத்தியது. இதில் குஜராத் பிரதமர் மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்த வாக்கெடுப்பில் 2,66,684வாக்குகள் பெற்று எதிர்ப்பு வாக்குகள் பெற்றகள்வர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. 2,56,792 ஆதரவு வாக்குகள் பெற்று ஆமோ திக்கப்பட்டவர் பட்டியலில் மூன் றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

மோடி முதலில் ஆமோதிக்கப்பட்டவர் பட்டியலில் முதலிடத்தைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு லட்சக் கணக்கான மின்னஞ்சல் அனுப் பப்பட்டுள்ளதாகவும், அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்குத் தனக்காக வாக்களிக்கும்படி மோடி கேட்டுக் கொண்டிருந்தார் என் பதும் தெரியவருகிறது.
உலகில் வேறு எந்தத் தலைவரும் இது போன்ற மோசடி செய்ததில்லை என்று குஜராத் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா குற்றம் சாட்டியுள்ளார்.அவருக்கு சென்ற ஆண்டு ராஜபக்‌ஷே இந்த முறை கேடுகளுக்கு லட்சக்கணக்கில் செலவழித்திருந்தது தெரியாது போல் தெரிகிறது.


. குஜராத் கலவரத்திற் குப் பிறகு அமெரிக்காவுக்கு வருவதற்கு மோடிக்கு அமெ ரிக்க அரசு விசா வழங்க மறுத்து விட்ட பிறகும், வெளிநாடுகளில் தனது செல்வாக்கை மேம்படுத்த மின்னணு சாதனங்கள் மூலம் மோடி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
உலக அளவில் தனது பெயரை உயர்த்தி பிடித்து அடுத்த பிரதமர் நாற்காலிக்கு தன்னை ஒரு போட்டியாளராக்கிக் கொள்ளும் முயற்சியில் டைம் இதழ் விவகாரம் ஒரு பின்னடைவைத்தந்துள்ளது.
மோடி வித்தையை காங்கிரசு தன்னால் முடிந்த அளவு தடுத்துப்பார்க்கிறது.
_______________________________________________________________________-

பேருந்துகளின் வடிவமைப்பை பார்த்தீர்களா?



























இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?