ஒரு சாதனை - ஒரு வேதனை

________________________________________________________________________
ஆப்பிள் சாதனை.


உலகின் முதல் 1 டிரில்லியன் டாலர் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மட்டும் 1000[ரூ50000] டாலருக்கு விற்பனையாகி இருக்கிறது. உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் உள்ளது. 


காலத்திற்கு ஏற்றவாறு புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு,கணினி சார் பொருட்கள் உலகெங்கும் விறுவிறுப்பாக விறபனையாகி வருகிறது.
இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் இந்திய விலைவாசிபோல் அதிகரித்து வருகிறது.

சென்ற வாரம் 633.38 டாலர் விலைக்கு விற்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்குவிலை, இந்தவாரம் மளமள வென உயர்ந்து 1000 டாலராகியுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயர்ந்து இருக்கிறது. இதன்மூலம் உலகில், 1 டிரில்லியன் டாலரை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெயரை -பெருமையைஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது. 
________________________________________________________________________
மக்களைப் பிழியும் மின் கட்டண உயர்வு
                                                                                                     -                காண்டீபன்,
  
                         
 
தமிழ்நாட்டில் அன்றாடம் பேசக்கூடிய பொருளில் மின்சாரம் ஒன்றாகிவிட்டது. ஒரு பக்கம் கடுமையான மின்வெட்டு, மறுபக்கம் மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள தாங்க முடி யாத மின் கட்டணம். மின் வெட்டின் காரண மாக தமிழகமே கிளர்ந்தெழும் வகையில் மக்கள் ஆங்காங்கே தன்னிச்சையாக மின் வெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடக் கின்றன. தமிழக அரசு மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கிக் கொண்டு இருக்கின்றது. 6 மணி நேரம், 8 மணி நேரம், 12 மணி நேரம் என்று மின்வெட்டுக்கு கால அளவே இல்லாமல் உள்ளது. மின் வெட்டி னால் பாதிக்கப்படும் மக்கள் மின்வெட்டு அமல்படுத்துவதற்கு கால நிர்ணயம் செய் தாவது தொலையுங்கள் என்று புலம்பும் நிலை. அதற்கான எந்த ஏற்பாடும் மின் வாரியத்திடம் இல்லை. தமிழக அரசும் மின்சார விடுமுறை விட்டுப் பார்த்தும் பலனில்லை.


இதற்கு என்ன காரணம்? சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 2012ல் மின் தேவை கூடி யுள்ளது. போன வருடம் 2700 மெகாவாட் மின் பற்றாக்குறை என்றால் இந்த ஆண்டு 3500 மெகாவாட் ஆக பற்றாக்குறை கூடியுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்க வேண்டுமென்றால் மின்வாரியத்திடம் பண மில்லை. 2012ம் ஆண்டு மின்வாரியத்தின் வருவாயில் 11 ஆயிரம் கோடி துண்டு விழுந் துள்ளது. ஒட்டுமொத்த கடன் 53000 கோடி ரூபாயைத் தாண்டும் என்பது மின்வாரியத் தின் கணக்கு ஆகும்.

இவைகளையெல்லாம் மனதில் கொண்டு தமிழக அரசின் ஆலோசனையின் பேரில் மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் மின்வாரியத்தின் காலி கஜானாவை நிரப்ப லாம் என்று மின் வாரியம் முடிவு செய்தது. தமிழ்நாடு மின்துறை ஒழுங்குமுறை ஆணை யத்திடம் மின் கட்டண உயர்வு வேண்டு மென்று விண்ணப்பித்தது. தமிழக மின்வாரி யம் மின் கட்டண உயர்வு செய்வதற்கு விண் ணப்பித்த பொழுது மின்கட்டண உயர்வின் மூலம் ரூ.9500 கோடியை திரட்டுவதற்கு உண்டான ஆலோசனையை முன்வைத்தது.

100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் ரூ. ரூ.70 மின் கட்டணமாக செலுத்துவது இப் பொழுது ரூ. 120 ஆக உயர்ந்துவிட்டது. 200 யூனிட் பயன்படுத்துவோர்கள் ரூ.240க்குப் பதிலாக தற்பொழுது ரூ.320 வரை மின் கட் டணமாக செலுத்த வேண்டியுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்ட அறிவிப்பு செய்த பின்னர் சட்டசபையில் முதல்வர் அவர்கள் சிறிதளவு கட்டணக் குறைப்பை செய்துள்ளார்.

மின்வெட்டுப் பிரச்சனையிலும் சரி, மின் கட்டண உயர்விலும் சரி. அதிமுகவின் நிலை பாட்டுக்கு இணையாகவே திமுகவின் நிலை பாடு உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் மின்பற்றாக்குறையே இல்லாத மாநிலமாக இருந்தது என்றும், திமுக ஆட்சிக் காலத்தில் புதிய மின் திட்டங்கள் ஏதும் கொண்டுவரப் படவில்லை; அதனால்தான் இந்த நிலை. அதேபோன்று மின்வாரியம் கடன் வலையில் சிக்கிக் கொண்டுள்ளது. கடன் தரவேண்டிய வங்கிகள் எதுவும் கடன் தர முன்வரவில்லை. எனவே தான் இந்த மின் கட்டண உயர்வு என் றும் மின் வாரியத்தை பாதுகாப்பதற்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக் கப்பட்டது. இதற்கு கலைஞர் மறுப்பு தெரி வித்துள்ளார். அதிமுக ஆட்சியில் புதிய தொழிற்சாலைகள் ஏதும் வரவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் 2000ஆம் ஆண்டில் 1180 மெகாவாட் வரை உற்பத்தி அதிகமானதாகவும் குறிப்பிட்டுள்ளார். 7 தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடம் மின்சாரத்தை பெறுவதற் காக தனது அரசு தான் ஒப்பந்தம் போட்டதாக குறிப்பிட்டுள்ளார்.


மின்சாரத்தை வாங்குவதற்கே மின்வாரி யத்தின் வருவாயில் 80 சதவீத வருமா னத்தை செலவழிக்கின்றது. தமிழக மின் வாரியம் மூன்று விதமான வகைகளில் மின் சாரத்தை விலை கொடுத்து வாங்குகின்றது.

நாம் உற்பத்தி செய்கின்ற மின் உற்பத்திக் கான விலை சராசரியாக 230 காசுகள். மத்திய தொகுப்பில் இருந்து பெறுகின்ற மின்சாரத் தின் விலை சராசரியாக 1 யூனிட்டிற்கு ரூ.310 காசுகள்.

7 தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வாங்குகின்ற மின்சாரத்தின் விலை சராசரியாக 1 யூனிட் ரூ.8 ஆகும்.

காற்றாலை மின்சாரத்தின் 1 யூனிட் ரூ.3.39 என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதில் 7 தனியார் மின் உற்பத்தி நிலையங் களில் இருந்து தினந்தோறும் நாம் பெறுகின்ற மின்சார அளவு 980 மெகாவாட் அல்லது 2 கோடி யூனிட்கள் ஆகும்.

1 யூனிட் மின்சாரம் ரூ.8 என்றால் தினம் இரண்டு கோடி யூனிட் மின்சார விலை 16 கோடி ரூபாய் ஆகும்.

தமிழ்நாடு மின் உற்பத்திக்கழகம், மின் சார கட்டண உயர்வு அளித்திட வேண்டும் என்ற விண்ணப்ப மனுவினை மின் துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் உள்ள விவரத்தின் அடிப் படையில் 7 தனியார் மின் நிலையங்களி லிருந்து வாங்குகின்ற மின்சார கட்டண விகிதம் அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ளது.

2011-12 , 2012-13

1 யூனிட் 1 யூனிட்

விலை(ரூ) விலை(ரூ)

ஜி.எம்.ஆர்.வாசவி 11.35 13.98

சாமல்பட்டி (தர்மபுரி) 11.79 12.84

மதுரை ஜெனரேசன் 12.32 14.46

பிள்ளை பெருமாள் நல்லூர்

(திருவாரூர்) 7.48 9.49

எஸ்.டி.சி.எம்.எஸ்.

(நெய்வேலி) 3.93 4.28

அபான்(இராமநாதபுரம்) 3.20 3.22

பென்னா(இராமநாதபுரம்) 3.42 3.43

வீடுகளுக்கு மின் இணைப்பு அளிக்க மீட்டர்கள் இருப்பில் இல்லை என்று மின் வாரியம் மின் இணைப்பு கொடுப்பதற்கு தாம தம் செய்கிறது என்று பில்டர்ஸ் அசோசி யேஷன் கொடுத்த புகாரின் மீது தமிழக மின் துறை ஒழுங்குமுறை ஆணையம் அப்பு காரையே வழக்காக எடுத்துக்கொண்டு, தனி யாரிடமும் மீட்டர்கள் வாங்கி மின் வாரியத் திடம் கொடுத்தால் மின் இணைப்பு கொடுக் கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. அதே தமிழ் நாடு மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் கூடுதலாக விலை கொடுத்து 7 தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சா ரத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ஏன் மாற்றி அமைக்கக்கூடாது.

அதேபோன்று மத்திய அரசினுடைய நிதி நிறுவனங்களிடமிருந்து மின் வாரியம் வாங் கிய கடன்களுக்காக மாதந்தோறும் வட்டியாக செலுத்தும் தொகை ரூ.460 கோடி ஆகும். நாள் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ.15.33 கோடியாகும்.

தில்லியில், ரிலையன்ஸ், டாடா போன்ற தனியார் நிறுவனங்கள்தான் மின் விநியோ கத்தை மேற்கொண்டிருக்கின்றன. இந்த நிறு வனங்கள் தேசிய அனல் மின் கழகத்திட மிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கி விநியோகம் செய்கின்றன. மின்சாரம் வாங்கிய தொகையான ரூ.3000 கோடியை தேசிய அனல் மின் கழகத்திற்கு வழங்க இந்நிறு வனங்கள் மறுத்தபோது, ரிலையன்சும் டாடா வும் வழங்க வேண்டிய தொகையை தில்லி காங்கிரஸ் அரசே தானே முன்வந்து தேசிய அனல் மின் கழகத்திற்கு வழங்கியது. அதே போன்று தமிழக மக்கள் மீது சுமக்க முடியாத மின் கட்டணத்தை சுமத்தியபோது மத்திய அர சானது தனது நிதி நிறுவனங் களுக்கு வழங்க வேண்டிய வட்டித் தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டுமல்லவா?



மின் கட்டண உயர்வினால் தினந்தோறும் மின்வாரியத்திற்கு கிடைக்கின்ற கூடுதல் வருவாய் 21 கோடி ரூபாயாக உள்ளது.

காற்றாலை மின்சாரத்தை வாங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1 யூனிட் மின் சாரம் ரூ.3.39 ஆகும். அதேபோன்று தன் தேவை பூர்த்தி செய்து கொள்ளும் (சிபிபி) மின் நிலையங்களிடமிருந்து மின்சார வாரியம் வாங்கும் விலை 1 யூனிட்டிற்கு ரூ.3.60 காசு கள். ஆனால் 7தனியார் மின் உற்பத்தி நிலை யங்களிடமிருந்து மட்டும் சராசரியாக ரூ.8 விலை கொடுத்து வாங்க வேண்டும். 7 தனி யார் மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து வாங்கும் மின்சார ஒப்பந்தத்தை மறுபரி சீலனை செய்து ரூ.3.30 என்று மாற்றினாலே தினம் 8 கோடி ரூபாய் மின்வாரியத்திற்கு கூடுதலாக கிடைக்கும். வட்டி கொடுப்பதை நிறுத்தினாலே தினம் கிடைக்கும் தொகை ரூ.15 கோடியாகும். இதன் மூலம் மின்வாரி யத்தை நஷ்டமின்றி நடத்திச் செல்லமுடியும்.


மத்திய அரசானது தமிழகத்திற்கு ஒப்புக் கொண்ட அடிப்படையில் தற்போது அளித் துக் கொண்டிருக்கக்கூடிய 2300க்கு பதிலாக 3100 மெகாவாட் மின்சாரம் அளித்திருந்தால் மின்வெட்டு சற்று குறைந்திருக்கும் என்று மின்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கூறி யிருக்கின்றார்.

அதேபோன்று தமிழக மின்நிலையங் களுக்கு தரவேண்டிய நிலக்கரியை வழங் காமல் இருந்த காரணத்தினால் நமது மின் நிலையங்கள் நிலக்கரியின்றி தவித்தன. உள் நாட்டு நிலக்கரி இல்லாத நிலையை சமா ளிக்க வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதாயிற்று. இதன் காரணமாக மின்வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெறாமல் மக்கள் மீது மின் கட்டணத்தை சுமத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை. 7 தனியார் மின் நிலையங்களை தன்னுடைய ஆட்சிக்காலத் தில் தான் கொண்டுவந்ததாக பெருமை பேசும் கலைஞர் அவர்கள்,அந்த தனியார் மின் நிலை யங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை திருத்தி அமைத்திட தன்னுடைய ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை. அதே நிலையை அதிமுக பின்பற்றாமல் தனியார் ஒப்பந் தங்களை திருத்தி அமைத்தால் தினம் 8 கோடி ரூபாய் மின்வாரியத்திற்கு கிடைக்கும்.

சாதாரண மக்களையும் மத்திய தர மக்களையும் வாட்டி வதைக்கும் மின் கட் டண உயர்வின் மூலமாக தினமும் கிடைக் கும் ரூ.21 கோடியை மக்கள் மீது திணிக்காமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப் புண்டு. ஆனால் அவைகளை பற்றியெல்லாம் சிந்திக்காமல் மக்கள் மீது சுமத்தும் மின் கட்டண உயர்வு நியாயமல்ல.
                                                                                                                                                                                  நன்றி:தீக்கதிர்,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?