ராணுவம்-பீதி


 கடந்த ஜனவரி மாதம் அரியானாவில் இருந்து டெல்லியை நோக்கி ராணுவம் நகர்த்தப்பட்டதாக வெளியான செய்தியை பிரதமர் மன்மோகன் சிங்கும் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 16 மற்றும் 17 ம்தேதி இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில் அரியானாவில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் இருந்து கனிசமான ராணுவ வாகனங்கள் டெல்லியை நோக்கி நகந்ததாக ஒரு பத்திரிகை செய்தியில் கூறப்பட்டது.

இதேபோல ஆக்ரா ராணுவ தளத்தைச் சேர்ந்த 50 துருப்புகளும் தங்களது வாகனங்களுடன் டெல்லியை நோக்கி நகர்த்தப்பட்டதாகவும் ஒரு செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ராணுவ வாகனங்களை டெல்லியை நோக்கி முன்னேற விடாமல் அவற்றை பின்னோக்கி செல்லுமாறு கட்டளை இடப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் தனது வயது பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுகிய நாள் அன்றுதான் இந்த ராணுவ நடமாட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கேட்டதற்கு இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று அதனை நிராகரித்தார். நேற்று டெல்லியில்  ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், அதன் புற நிகழ்வாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது மேற்கண்டவாறு கூறினார். 


இதேபோல ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் இதுகுறித்து கேட்டதற்கு இந்த செய்தி முழுக்க முழுக்க அடிப்படை ஆதாரமற்றது என்றார். ஜனநாயகத்திற்கு குழிதோண்டும் எந்த காரியத்திலும் இந்திய ராணுவம் ஈடுபடாது என்றும் அவர் கூறினார். அன்றையதினம் நடைபெற்றது வழக்கமான நடவடிக்கைகள் தானே தவிர மற்றபடி வழக்கத்திற்கு மாறானது எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்திய ராணுவத்திற்கு தேசப்பற்று அதிகம் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.  ராணுவத்தினரின் தேசப்பற்று குறித்து கேள்வி எழுப்ப தேவையில்லை. அவர்கள் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் கூறினார். விசாகப்பட்டினத்தில் ஐ.என்.எஸ்.சக்ரா அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை அந்தோணி நேற்று துவக்கிவைத்தார். அப்போது அவர் இந்த கருத்தை கூறினார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?