இம்சை அரசி
மம்தா பானர்ஜியின் கட்சி தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரையும் திரிணாமுல் கட்சியினர்திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று தமது கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினரை திருமணம் செய்யாதீர் என்று மம்தா ஆணை யிட்டுள்ளதாக மேற்குவங்க உணவு அமைச்சர் ஜோதிப்பிரியா முல்லிக் கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியினருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம். ஒரு டீக்கடையில் அவர்களை சந்தித்தால்கூட அவர்களிடம் பேச்சு வைத்துக்கொள்ள வேண்டாம்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தையே முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்துவிட்டோம். சபதமும் எடுத்துவிட்டோம். எனவே அந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்களுடனோ, அல்லது ஆதரவாளர்களுடனோ எந்தவொரு திருமண உறவையும்நமது கட்சியினர் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. அப்படி ஒரு உறவு தேவையில்லைமென்றும் அவர் கூறியுள்ளார்.
தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்துவதே மம்தாவின் வேலையாகப்போய்விட்டது.
கட்சி உறுப்பினர்களின் சொந்த வாழ்வில் கூட தலையிட்டு முட்டாள்தனமாக ஆணைகள் பிறப்பிக்கும் இவர் எந்த வைகையில் தலைவராவார்.
ஒரு குடும்பத்தில் அண்ணன் திரிணாமுல் தம்பி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டாக இருந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்.இதே முறை அப்பா-மகன்,கணவன் -மனைவி என்றிந்தால் என்ன செய்வது விவாகரத்து வாங்கிட வேண்டுமா?
திரிணாமுல் காங்கிரசில் உள்ளவர்கள் எல்லோரும் அரசியல் தொண்டர்களா? அல்லது திரிணாமுல் பண்ணையின் கொத்தடிமைகளா?
அவர்களுக்கென்று தனிப்பட்டஉணர்ச்சி,விறுப்பு ,குடும்பம் சொந்தம்-பந்தம் இருக்காதா?
மம்தா பானர்ஜி போகிற போக்கும், ,வேகமும் இம்சை அரசன் புலிகேசியை விட கொஞ்சம் அதிகமாகத்தெரிகிறது.
நல்லவேளை நமக்குஅவர் முதல்வராக ஆக வில்லை.
ஆனால் பிரதமராகும் ஆசை அவருக்கு நம் முதல்வருக்கு உள்ளது போல் உள்மனதில் உள்ளது.அந்த ஆசை நிராசையாக போயிடட்டும்.
இந்திய பிரதமராக மம்தா வந்தால் பின்னர் இந்தியா சோவியத் நாடு போல் சிதறிவிட்டது என்ற செய்திதான் வரும்.
_______________________________________________________________________________
11-04-2012 சியோலில் மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்டிருந்த வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் சுவரொட்டிகள்.இதுவே நம்ம ஊராயிருந்தால்?
_________________________________________________________________________________
மூங்கிலில் மின்சாரம் எடுப்போம்
___________________________________
ஒரு மாற்று மின்ஆக்கம்
---------------------------------
தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்வெட்டு, மின்பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு போன்ற வார்த்தை பயன்பாட்டை அடிக்கடி காணமுடியும். மின்வெட்டால் மக்கள் படும் அவதியை சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழகத்தின் அரசியலை நிர்ணயிக்கும் அளவுக்கு மின்வெட்டு பிரச்னை தலைத்தூக்கியிருக்கும் நிலையில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முனைந்திருக்கிறார் ஓசூர் நகரில் இயங்கிவரும் குரோமோர் உயிரிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் என்.பாரதி. இவர் கண்டுபிடித்திருக்கும் பீமா என்ற மூங்கில், மின் உற்பத்தியில் உயிரி எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
அப்படியானால், ஆண்டின் 52 வாரங்களில் 7 ஆயிரம் மெகாவாட் முதல் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். வழக்கமாக ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு ரூ.5.40 ஆகிறது. ஆனால் மூங்கில் விறகில் தயாராகும் மின்சாரத்தின் அடக்கவிலை ரூ.1.50 மட்டுமே. மாற்று எரிசக்திக்காக ஏங்கும் இந்தியாவில் மாற்று சிந்தனையால் உருவானதுதான் பீமா மூங்கில்.
மூங்கில் விறகால் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை, மின் தேவையிலும் தன்னிறைவு அடையமுடியும். ஒரு ஏக்கரில் மூங்கில் பயிரிட்டால் ஆண்டுக்கு ஒருலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டமுடியும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு, கிராம பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். இதுகனவு போல தோன்றினாலும், நடைமுறை சாத்தியமானது என்பதை இந்தியா தவிர, தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிரூபித்துள்ளேன். கடந்த 8 ஆண்டுகளில் இந்நாடுகளில் 14 லட்சம் பீமா மூங்கில் செடிகளை நட்டுள்ளோம். இந்தியாவில் மட்டும் 1.5 லட்சம் மரக்கன்றுகளை விநியோகித்துள்ளேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
மூங்கில் மரச்செடி தவிர, இதனை பயிடுவதற்கான முறை மற்றும் அறுவடை தொடர்பான பயிற்சியை அளிக்கிறோம். தரிசுநிலம், வறண்டவானிலை போன்ற எந்த இயல்புள்ள சூழலிலும் பீமா மூங்கில் வளமாக வளரும். மூங்கில் பயிருக்கு உரம், ஊட்டச்சத்து, பாசனம் அவசியம்.
வழக்கமாக ஒருடன் மரவிறகு ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மூங்கில் விறகு ஒருடன் ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மின் உற்பத்திக்கு ஆகும் செலவு குறைகிறது. விவசாயிக்கும் உற்பத்திச்செலவு கிடைத்துவிடும். இதன்விளைவாக ஒருஏக்கர் நிலத்தில் மூங்கில் பயிரிட்டால் ஓராண்டில் விவசாயிகள் ஒருலட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
தமிழகத்தில் இயங்கிவரும் 12 சர்க்கரை ஆலைகளில் மூங்கில் விறகு மற்றும் கரும்புச் சக்கை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெள்ளோட்டமாக, 15 மாவட்டங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் பீமா மூங்கிலை பயிரிடுமாறு தமிழக அரசு எங்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதேபோல, கர்நாடகத்திலும் பீமா மூங்கில் பயிரிடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஊக்கம் அளிக்க திட்டமிட்டுள்ள இந்திய அரசு, உயிரி எரிசக்தி (எனர்ஜி பிளான்டேஷன்) என்ற திட்டத்தை வகுத்துள்ளது. விறகு மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுவதை ஊக்குவிப்பதற்காக மத்திய திட்டக்குழு உயிரி எரிசக்திக்கான துணைக்குழுவை அமைத்துள்ளது. அதில் என்னையும் உறுப்பினராக சேர்த்துள்ளனர்.
எதிர்வரும் காலத்தில் உயிரி எரிசக்தி பிரபலமடையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் பீமா மூங்கில் முக்கியப் பங்காற்றும். இந்தியாவின் மின் தேவைக்கு மூங்கில் விறகின் பங்கு மகத்தானதாக அமையும்'' என்றார் பாரதி.
நன்றி[கொண்டாட்டம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------