உடைக்க எண்ணி உடைந்தவர்கள்,,,,.
திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தை[பெப்சி]உடைக்க நினத்து செயல் பட்ட திரைப்பட தயாரிப்பாளர்களின் சங்கம்தான் இரண்டாக உடைந்துள்ளது.
படங்களின் உயிர்மூச்சாக நின்று உழைக்கும் தொழிலாளர்களுக்கு கொஞ்சம் சம்பளத்தை உயர்த்த மூக்கால் அழும் தயாரிப்பாளர்கள்.ஒரு படம் ஓடிய நடிகருக்கு மட்டும் கோடிக்கணக்கில் கொடுப்பது ஏன்?அந்த நடிகரை அழகாக் காட்டுவதும்.அவர் ஒருவரே பத்துபேரை தரையில் கால்படாமல் தாக்குவதையும் இத்தொழிலாள்ர்களின் உழைப்புதானே சாத்தியமாக்குகிறது.
ஊதிய உயர்வு தொடர்பாக ஃபெப்ஸி அமைப்புக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பிரச்னை நீடித்து வந்தது. பல கட்டப் பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இரு தரப்புக்கும் ஓரளவு சமரசம் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்களின் நலனுக்கு எதிராக எஸ்.ஏ. சந்திரகேசகரன் செயல்பட்டார் என தயாரிப்பாளர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
ஃபெப்ஸி அமைப்புக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் தலையிட்டு தீர்வுகாண உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அதன்படி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர் செல்லபாண்டியனுக்கும் நன்றி.
சிறப்புப் பொதுக்குழு எடுத்த முடிவின்படி தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்புத் தலைவராக இப்ராஹிம் ராவுத்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஃபெப்ஸி அமைப்பினரின் ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முக்தா சீனிவாசன், ஏ.வி.எம். சரவணன், கேயார், ஆர்.பி.செüத்ரி, டி.சிவா, கே.முரளிதரன் உள்பட 24 உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால கமிட்டி அமைக்கப்படுகிறது.
தயாரிப்பாளர் சங்கத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்ட தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பொருளாளர் தாணு, செயலாளர் தேனப்பன் ஆகியோர் அந்தப் பொறுப்பிலிருந்து 6 மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார்கள். புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த 4 மாதங்களுக்குள் நடத்தப்படும். தயாரிப்பாளர் சங்கத்தின் செலவுகளை நிர்வகிக்கும் பொறுப்பு இப்ராஹிம் ராவுத்தருக்கும், கே.முரளிதரனுக்கும் வழங்கப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளை, இதுபோன்று தீர்மானத்தை நிறைவேற்றி நீக்க முடியுமா என சிறப்புப் பொதுக்குழுவில் பங்கேற்ற மூத்த தயாரிப்பாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு எதிராக இருக்கிறார்கள். தவிர, சங்கங்கள் என்று வரும்போது பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது.
தயாரிப்பாளர் சங்கத்தில் 6 மேல்நிலை பொறுப்பாளர்கள், 21 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 27 பேர் உள்ளனர். இதில் 20 பேர், எஸ்.ஏ. சந்திரசேகரன் தரப்பினரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் ராஜிநாமா செய்துள்ளனர்.
பொதுக்குழு நடத்த மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 27 பேரில் 9 பேர் இருக்க வேண்டும். எஸ்.ஏ.சந்திரசேகரன் தரப்பில் உள்ள 7 பேரால் தனியாகக் கூட்டம் நடத்த முடியாது. தயாரிப்பாளர் சங்கத்தின் சட்ட திட்டப்படியே இந்த சிறப்புப் பொதுக்குழு கூடி மேற்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது. தவிர, வாக்களிக்க உரிமையுள்ள 650 தயாரிப்பாளர்களில் 350-க்கும் மேற்பட்டோர் சிறப்புப் பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு ஏகமனதாக ஆதரவளித்துள்ளனர் என்றனர்.
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
ஆப்கான் தாக்குதல்.
ஆப்கன் தலைநகர் காபூலிலும் இன்னும் சில மாகாணங்களிலும் தாலிபன் இயக்கத்தினர் ஒருங்கிணைந்த தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
வெளிநாட்டுத் தூதரகங்கள், நேட்டோவின் தலைமையகம், ஆப்கன் நாடாளுமன்றம் என முக்கிய பல இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல்கள் கடந்த ஆறுமாதங்களில் அங்கு நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் இது.
இந்தத் தாக்குதல்களில் 14 தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ள 23 பேரில் ஆப்கானிய காவல்துறையினர் 14 பேரும் 9 பொதுமக்களும் அடங்குகின்றனர்.
காபூலிலும் லோகார், பாக்டியா மற்றும் நங்கார்ஹார் ஆகிய மாகாணங்களிலும் தமது தற்கொலைபடையினர் பலர் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தாலிபன் அறிவித்துள்ளது.
காபூலில் மட்டும் 7 இடங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் தூதரகத்தின் காவலாளிகள் கண்காணிப்பு கோபுரத்தின்மீது இரண்டு ராக்கெட்டுகள் தாக்கியுள்ளதாகவும் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளின் வீடொன்றின்மீது இன்னொரு ராக்கெட் குண்டொன்று வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிழக்கு காபூல் பகுதியில் பிரெஞ்சுப் படை வாகனத் தொடரணியின் மீதும் கிரேக்க இராணுவ படைத் தளமொன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பதிலுக்கு பிரான்ஸ் மற்றும் கிரேக்கப் படைகளும் சரமாரியான இயந்திரத் துப்பாக்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
மத்திய காபூலில் கடுமையான பாதுகாப்புக் கெடிபிடிகள் மிக்க வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள வளாகத்தில் பல திக்குகளிலிருந்தும் தாலிபன் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு 7 பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன.
மேற்கு காபூலில் நாடாளுமன்றக் கட்டடம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தைத் தாக்கமுற்பட்ட போது, அங்கிருந்த எம்பிகளும் படையினருடன் சேர்ந்துகொண்டு பதில் துப்பாக்கித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்யத் தூதரகத்தின்மீதும் ராக்கெட் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஜெர்மனி தூதரகத்தின் மேலாக புகை கிளம்பிக்கொண்டிருப்பதாக சிலர் கூறியுள்ளனர்.
அமெரிக்கத் தூதரகத்தின் மிக அருகில் தாக்குதல் நடந்தால் தூதரகம் இழுத்து மூடப்பட்டது..
ஜலலாபாத் மாகாணத்தில் கிழக்கு நகரொன்றில் தற்கொலை படையினர் விமான நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதாக காவல்துறை கூறுகிறது. அங்கு அமெரிக்க விமானப் படைத்தளம் தாக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஹமீது கர்சாயின் மாளிகை அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வளாகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தாலிபன் கூறுகிறது. ஆனால் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
'மேற்குலக சக்திகளின் மீது தாலிபனின் தாக்குதல் ஆரம்பம் தான் இது' என்று தாலிபன் பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆப்கன் எல்லையில் - பாகிஸ்தானின் வடமேற்கே சிறைச்சாலை ஒன்றின் மீது இன்று ஞாயிறு அதிகாலை தமது போராளிகள் 100 பேர் தாக்குதல் நடத்தி சுமார் 400 கைதிகளை விடுவித்துள்ளதாகவும் தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.