வரி விலக்கு
கேளிலிக்கை வரி
உதயநிதி தயாரித்து நடித்த ஒரு கல்,ஒரு கண்ணாடிக்கு தமிழக அரசு வழங்கும் கேளிக்கை வரி விலக்கு தர மறுக்கப்பட்டுள்ளது.
இது அரசின் நியாயமற்ற செய்கை .
கேட்டால் ஒ.கே,ஒ.கே என்று பெயர் என்கிறார்கள்.படப்பெயர் ஒரு கல் ,ஒரு கண்ணாடி தானே.அதை ஆங்கிலத்தில் ஒ.கே என்று அதையும் மறை முகமாக போட்டுள்ளனர்.
இதை நொண்டி சாக்கு வைத்து விலக்கு அளிக்க மறுப்பவர்கள் 3 படத்துக்கு எந்த வகையில் வரி விலக்கு அளித்தார்கள்.3 என்பது தமிழ் எழுத்தா?ஆங்கில எண் குறீயிடுதானே?
ங வின் கையை வெட்டினால் வரும் அடையாளம்தானே தமிழ் 3.
அது மட்டுமா? பாட்டு முதல் வஜனங்கள் வரை ஒரே தமிழ் கொலைவெறிதானே?
அதற்கு மட்டும் என்ன வரி விலக்கு?
அரசையும் அதன் சலுகைகளையும் கொஞ்சம் நியாய நிலையுடன் நடத்துங்கள்.
காழ்ப்புணர்ச்சி அரசியல் அரசு செயல்களில் தலைகாட்டாமல் செயல்படுங்கள்.
ஒன்று கேளிக்கை வரி ரத்தை கைவிடுங்கள்.அல்லது நியாயமான முறையில்
செயல் படுத்துங்கள்.
அல்லது எதிர்கட்சியை சார்ந்தவர்களுக்கு அடியோடு கிடையாது என்ற விதியை கொண்டுவாருங்கள்.
மம்தா பானர்ஜி போல் திமுக காரர்களுடன் பேசாதே,பழகாதே,அவன் சொல்வது எதையும் கேட்காதே என்று தைரியமாக கட்டளையிடுங்கள்.
நீங்கள் ஒன்றும் பகிரங்கமாக சொல்லாமல் இருக்கும் போதே அதிமுக காரர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேறு விடயம்.
முதலில் இந்த கருணாநிதி கொணர்ந்த தமிழ் பெயருக்கு வரி விலக்கு சமாச்சாரத்தை எடுங்கள்.
படம் எடுப்பவர் எல்லாம் கஷ்டஜீவிதர்களா?
நடிகருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பேசும் தனவான்கள்தானே.
தயாரிப்பு முதல்-வியாபாரம் வரை பல கோடிகளில்தானே.பின் எதற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
அட அப்படி அளிக்கு வரி விலக்கினால் 80,100 விலையில் உள்ள டிக்கெட் விலையை எந்த திரையரங்கிலும் மறந்தும்குறைத்து விற்க வில்லை.பின் இந்த விலக்கு யாருக்காக?
திரையரங்குகாரன் பணத்தை அள்ளி கொள்ள மக்கள் வரிப்பணம் வீணாகுகிறது.
எனவே ஒன்று ஒருகல்,ஒரு கண்ணாடிக்கு வரி விலக்கு கொடுங்கள்.அலலது வரி விலக்கை எடுங்கள் என்று சொல்ல வரவில்லை.இந்த கேளிக்கை வரி விலக்கால் திரையரங்கு டிக்கெட் விலை குறைக்கப்படவில்லை. எனவே மக்களும்[பணக்காரர்களைத்தவிர] திரையரங்குக்கு வர முடியவில்லை.
அதன் நோக்கமே அடிபட்டு போன பின் வரி விலக்கு எதற்கு ?அதை கைவிடுங்கள்.ஒகே.
இது போன்ற குற்ற சாட்டுகளும் வராது.ஒகே.
__________________________________________________
தூக்கம்-ஒரு குட்டி ஆய்வு..
=============================மதிய வேளையில் நாற்காலியில் அமர்ந்தபடி 10 அல்லது 15 நிமிடம் தூங்குகின்ற அலுவலகவேலைபார்ப்பவர்கள் உண்டு. அத்தகைய குட்டித் தூக்கத்திற்கு பின்னர், மிகுந்த வேகத்தோடு தங்கள் பணிகளை செய்ய முடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். நவம்பர் 25 ஆம் நாள் உலக சியஸ்டா நாள், அதாவது உலக 'குட்டி' தூக்க நாளாக கொண்டாடப்படுகிறது.
சியஸ்டா என்றால் இலத்தீன் மொழியில் குட்டி தூக்கம் என்று பொருள். 'ஹோரா செக்ஸ்டா' என்ற இலத்தீன் சொல் தான் சியஸ்டா என வழங்கப்படுகிறது. சியஸ்டா என்றால் ஆறாவது மணி என்ற பொருளும் உண்டு. அதாவது, சூரியன் உதித்த பின்னர் 6 வது மணி நேரத்தில் பொதுவாக எல்லோருக்கும் தூக்கம் வரும் என்பதை குறிப்பதாகவும் இதை கொள்ளலாம். இதை அன்றாட வாழ்க்ககையில் பகல் தூக்கம் என்கிறோம். பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நாடுகளில், உடல் வேகமாக சோர்வடைகிறது. அந்த வேளையில் குட்டித் தூக்கம் போடுவது நல்லது தான் என்று பல ஆய்வுகளும் பரிந்துரைக்கின்றன.
குறைவான மற்றும் தடைப்பட்ட துக்கம் நிவனவாற்றலை கடுமையாக பாதிக்கிறது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்ற அதேவேளையில், குட்டித் தூக்கம் நினைவாற்றலை அதிகமாக பெருக்குவதோடு, படைப்பாற்றல் மிக்கவர்களாக நம்மை மாற்றுவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு நாளில் 7 முதல் 8 மணிநேரம் வரை தொடர்ந்து தூங்க வேண்டுமென பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் இவ்வாறு நீண்ட நேர தூக்கம் பெறுபவர்கள் மிகவும் குறைவு. சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது சிற்றுந்து மோதல்களுக்கு மட்டுமல்ல, எல்லா வகையான விபத்துகளுக்கும் காரணமாக அமைகிறது. தொடர்ந்து குறைவான நேரம் தூங்குபவர்களாக நாம் இருந்தால் இதய, நீரிழிவு மற்றும் பிற நோய்களுக்கு இட்டு செல்லும். வயது முதிர்கின்றபோது வருகின்ற தூக்கமில்லாமை, மூச்சு விட துன்பப்படுவது ஆகிய நோய்கள் அவர்களின் உடல்நல நிலைமையை இன்னும் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது.
தற்போது, அறிவியலாளர்கள் ஒருவர் தூங்குகின்ற நேர அளவைவிட அதன் ஆழ்ந்த நிலையை தான் அதிகமாக ஆய்வு செய்கின்றனர். தூங்குகின்றபோது, நாம் மிகவும் ஆழ்ந்த தூக்கம் பெற வேண்டும் அத்தகைய ஆழ்நிலை தூக்கத்தால் தான் நினைவாற்றலை தக்க வைத்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட ஆழ்நிலையை குட்டித்தூக்கமும் அளிக்கலாம் என்றும், குட்டித் தூக்கத்திற்கு பின்னர் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு புதிய தீர்வுகளை காணமுடியும் என்றும் நியூயார்க் நகர பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் மருத்துவர் William Fishbein நம்புகிறார். இது தொடர்பான ஆய்வில் ஆங்கிலம் பேச தெரிந்த 20 இளைஞர்களை தேர்ந்தெடுத்து சகோதரி, அம்மா, வேலைக்காரி என்ற இரண்டு அசை சீன சொற்களை கற்றுக்கொள்ள செய்தார். பின்பு இந்த இளைஞர்களில் பாதிபேர் குட்டித் தூக்கம் பெற அனுமதிக்கப்ட்டனர். கனவில்லா ஆழ்ந்த தூக்கமே நல்ல நினைவாற்றலை தந்து சுறுசுறுப்பாக இயங்க செய்யும் என்பதால், கனவு காண்கின்ற விரைவு விழியசைவு தூக்க நிலைக்கு போகாதவாறு அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். எழுந்தவுடன் பல சோதனைகள் அவர்களிடம் நடத்தப்பட்டன. குட்டி தூக்கம் போட்டவர்கள் கற்றுக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டியதை கண்ணுற்றனர்.
இது தொடர்பான ஆய்வில் மாடிசன் Wisconsin பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இரவு நேரத்தில் ஆழ்நிலை தூக்கம் பெற்றிருந்தவர்கள், எழுந்து அமர்ந்து விடாத அளவுக்கான ஒலி எழுப்பி, தூக்கத்தை கலைத்தனர். இவ்வாறு சிலர் தடைப்பட்ட தூக்கத்தை பெற்றனர். சோதனையின்போது முந்தைய நாளின் கடமைகளை அவர்கள் மறந்திருந்தனர். ஆழ்ந்த தூக்கம் பெற்று சீராக தூங்கியவர்கள் எல்லா கடமைகளையும் நினைவில் கொண்டிருந்ததை ஆய்வாளர்கள் அறியவந்தனர்.
தடைப்படுகின்ற தூக்கம் மூளையில் நினைவை பதிவு செய்கின்ற புதிய உயிரணுக்களை பாதிக்கிறது. இதுவே அக்காலத்தில் நடைபெறுகின்ற அனைத்தையும் மறக்க செய்கிறது என்று லாஸ்ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவர் Dennis McGinty எச்சரிக்கிறார். இதனை அவர் சோதனை எலிகள் மூலம் ஆய்வு செய்தார். மூளை கண்காணிப்பு கருவியோடு இணைக்கப்பட்ட எலிகளை Treadmill எனப்படும் ஓடுபொறியில் அவர் தூங்க வைத்தார். அந்த சோதனை எலிகள் 30 வினாடிகள் தூக்கம் பெற்றதை கண்காணிப்பு கருவியில் பார்த்தவுடன் ஓடுபொறியை மெதுவாக ஓட வைத்தார்.
இவ்வாறு 12 நாட்களாக தடைபட்ட தூக்கத்தை தான் அந்த எலிகள் பெற்றன. பின்னர் அவற்றை 2 வாரங்கள் நீண்டநேரம் தூங்க வைத்தார். இதற்கு பிறகு அவைகளின் செயல்பாடுகள் ஆராயப்பட்டன. 12 நாட்கள் தடைப்பட்ட தூக்கமும், 2 வாரங்கள் நீண்டநேரமும் தூங்கிய எலிகள், தாங்கள் தப்பி செல்வதற்கான வழிமுறைகளை சரியாக நிறைவேற்றாமல் திண்டாடின. ஆனால் அவற்றை தவிர தொடர்ந்து தடையின்றி தூங்கிய பிற எலிகள் தாங்கள் தப்பி செல்வதற்கான வழிமுறைகளில் வெற்றி பெற்றன.
சரி விடுங்க மிச்சத்தை பிறகு பார்ப்போம்.தூக்கம் கண்ணை கட்டுது.ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு வரலாம்._________________________________________________________________________________