ஒரு லட்ச வணக்கங்கள்.
இணையத்தில் செய்தி களை வாசித்து விட்டு கருத்துக்களை பதிவு செய்துவந்தேன்.சில இதழ்கள் நமது கருத்துக்கள் அவர்களை இடிப்பது போல் இருந்தால் மதிப்பாய்வுக்கு பின் அதை வெளியிடாமலேயே குப்பையில் போட்டது.
அப்போதுதான் எல்லோரையும் போல் நாமும் ஒரு வலைப்பூவை உருவாக்கி உலவ விட்டால் என்ன என்ற நப்பாசை.யார் அதை படிக்கப்போகிறார்கள்.என்ற எண்ணமும் இருந்தது.அப்படி படிக்காததே நமது அரைவேக்காடு எழுத்துக்கும் நல்லது என்ற எண்ணமும் வர இந்த "சுரன்' உருவானது.
இப்போது 'சுரன்'உருவாகி கிட்டதட்ட 15 மாதங்கள் ஆகிவிட்டன.
இதுவரை 1,00,080 முறை சுரன் பார்வையிடப்பட்டுள்ளது.இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தரும் நிகழ்வு.
எனது கருத்துக்களைத்தான் இதுவரை தந்து வந்துள்ளேன்.பிற தளங்களில் இருந்து என்னை கவர்ந்த பிறர் படிக்க வேண்டும் என்று நான் எண்ணிய கட்டுரைகளை-செய்திகளை நன்றி: என்று குறிப்பிட்டு மறு பதிவிட்டுள்ளேன்.
அது மற்றவர்களை கவர்ந்ததா,படித்தார்களா என்பது வேறு விடயம்.அதை தொடர்ந்து செய்யவிருப்பம்.
சுரனில் கருத்திட்டவர்கள் கருத்தை அப்படியே வெளியிட்டு வந்துள்ளேன்.அதை எனக்கு ஆதரவாக திருத்தியமைக்கவில்லை.அதுவும் தொடரும்.
மற்றவை பின்னர்,
என்றும் அன்புடன்
சுரன் சுகுமாரன்
28-04-2012.
_________________________________________________________________________________