போடாதீங்க ஓட்டு.......

மகாராஷ்டிராமாநிலத்தை சேர்ந்த விவசாயி
, "காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்' 
சுரன்


என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார்,
.மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியை சேர்ந்தவர் கஜானன் கோதிகார்,45. சமீபத்தில், இவர் டிராக்டர் வாங்கியிருந்தார். இதற்கான கடனை, அவர் திருப்பி செலுத்தவில்லை.அதுமட்டுமல்லாது, மகள் திருமணத்திற்கு போதிய பணம் இல்லாததால் கவலையடைந்திருந்தார். 
சுரன்


இதனால் அவர் நேற்று, பூச்சி மருந்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்வதற்கு முன்னதாக, அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "இந்த நாட்டை காங்கிரஸ் அரசு நாசமாக்கி விட்டது. காங்கிரசோ, அதன் தோழமைக் கட்சியான தேசியவாத காங்கிரசோ, விவசாயிகள் விஷயத்தில் அக்கறை செலுத்தவில்லை.அவர்களுக்கு பெரும் முதலாளிகள்.பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் நலன்தான் முக்கியம்.இந்திய மக்கள்,விவசாயிகள் நல்வாழ்வு மீது அவர்களுக்கு கொஞ்சமும்அக்கறை கிடையாது.எனவே, இந்த கட்சிகளுக்கு இனி யாரும் ஓட்டு போடாதீர்கள்' என எழுதிவைத்துள்ளார்.
இந்த விவசாயியை தற்கொலை செய்வதற்கு தூண்டியதாகக் கூறி, இந்திய,மகாராஷ்டிராஅரசுகள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என, சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார்.
உண்மையிலேயே மத்திய அரசின் தவறான கொள்கைகள் முடிவுகளால் இந்திய விவசாயம் அழிவுக்கு செல்கிறது.
விளை பொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்யவில்லை.சில நிறுவனங்கள் உணவுப்பொருட்களை அடிமாடு விலைக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு கொள்ளை விலைக்கு விற்று பணம் குவித்து வருகின்றன.அதற்குதான் நமது பிரதமரும்,உணவு அமைச்சர் சரத்பவாரும் பகிரங்கமாக துணை போகின்றனர்.
சுரன்


எவ்வளவோ விவசாயிகள் விவசாயத்தில் எல்லாவற்றையும் இழந்து கடைசியில் தங்கள் உயிரையும் தற்கொலை மூலம் இழந்து வருகின்றனர்.ஆனால் இந்த கஜானன் கோதிகார் தான் தன் உயிரை இழக்க காரணமானவர்களை சுட்டிக்காட்டி கடிதம் எழுதி வைத்துள்ளார்.
ஆனால் இவை எல்லாம் இந்த அந்நிய மோகிகள் மன்மோகன் சிங்க்,சோனியா,ராகுல்,சரத்பவார் குழுவை திருத்துமா?அல்லதுஅவர்களின் மனசாட்சியை கொஞ்சமாவதுதொடுமாஎன்பதான் பெரிய கேள்வி?
________________________________________________________________________________
புத்தக தினம்"ஏப்ரல்-23"
புத்தகம் படிப்பதால் மூளை வளர்ச்சி இருக்கும் என்றும் அதில் மனதுக்கு தனி சுகம்-கவனம் உண்டாகுகிறது என்றும் இன்றைய ஆய்வுகள் கூறுகிறது.கணினி மூலம் படித்து காகிதம் இல்லா உலகை உருவாக்கும் காலமான இப்போது கூட புத்தக வாசிப்பு பெருகிதான் வருகிறது.யுனெஸ்கோ (UNESCO) என்ற உலக கல்வி நிறுவன அமைப்பு மக்களிடையே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கவும், அதற்காக அதிக புத்தகங்களை வெளியிடவும் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 1995 முதல் ஏப்ரல் 23, உலக புத்தக தினம் என்று அறிவித்தது. அன்று முதல் ஏப்ரல் 23 உலக புத்தக் தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சுரன்

முதலில் புத்தக தினம் தொடங்கப்பட்டபோது, லண்டனில் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கு ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை தந்தனர். அதனைக் கொண்டு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம் .
ஏன் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக உருவானது?


.அதற்கு ஓரு பின்னணி இருக்கிறது. உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில் பிறந்தும் மறைந்தும் இருக்கின்றனர். தலை சிறந்த சோக காவியமான லியர் அரசன், காதல் காவியம் ரோமியோ ஜுலியட்' ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும், மச் அடோ அபவுட் நத்திங் (Much Ado About Nothing) என்ற நகைச்சுவை நாடகத்தையும் எழுதிய இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர். இவர் பிறந்தது மட்டுமல்ல மறைந்ததும் ஏப்ரல் 23 தான்.
அது மட்டுமல்ல ஸ்பெயின் நாட்டில் (1923) ஏப்ரல் 23ம் நாள் இறந்த பிகுல்டி செர்வேண்டிசின் நினைவாகவும் புத்தக தினம் கொண்டாடுவதாக சொல்லப் படுகிறது.
சுரன்

1616, ஏப்ரல் 23ம் நாள் உலகின் புகழ் பெற்ற எழுத்தாளர்களான ஷேக்ஸ்பியர், செர்வேண்டிஸ், இன்கா கார்கிலாசோ போன்றோர் இறந்தனர். மாரிஸ் டிரியூன் , ஹால்டோர் லேக்சனஸ், விளாதிமிர் நபொகோவ், ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியாபோன்ற எழுத்தாளர்களும் பிறந்தது ஏப்ரல் 23 தான்..
எனவே ஒட்டு மொத்தமாக இலக்கியவாதிகளின் குறியீடாக ஏப்ரல் 23ஐ உலகப் புத்தக் தினமாகக் கொண்டாட யுனெஸ்கோ அமைப்பு முடிவு செய்தது. 
சுரன்

இன்றுமுதல் நீங்களும் மாதாமாதம் ஏதாவது உருப்படியான புத்தகத்தை வாங்கி படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.அதனால் அறிவு வளர்கிறதோ இல்லையோ வெட்டி வம்புகள் குறைந்து வீண் தராறுகள் ஏற்படும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். வீட்டிலும்தான்.
________________________________________________________________________
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?