ஊழலாய்வு


ஊழல் பற்றிய விவாதங்கள் அனைத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் மோசடிகளைப் பற்றி மட்டுமே நடக்கின்றன. சமூக ஆர்வலர்கள் குழு என்ற பெயரில் அண்மைக்காலமாக ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் என்று நடத்திக் கொண்டிருக்கும் அன்னா ஹசாரே குழுவினரும் இந்த இரண்டு பிரிவினரைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். தனியார் பெரு நிறுவனங்களின் பெருஊழல்கள் மக்கள் மன்றத்தில் விவாதத்திற்கு வருவதை இவர்கள் விரும்புவதில்லை.
இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே விதிவிலக்காக கோதாவரி படுகை எரிவாயு மற்றும் 2ஜி அலைக்கற்றை உள்ளிட்ட விவகாரங்களில் தனியார் நிறுவனங்களின் பாத்திரங்களை அம்பலப்படுத்தி வருகின்றன. ஊடகங்களும் தனியார் நிறுவனங்களின் பெரு ஊழல்களைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் முதன்முறையாக டிரான்ஸ்பரசி இன்டர்நேஷனல் இந்தியா என்கிற அமைப்பு தனியார் துறையின் மோசடிகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டது.


 இந்த ஆய்வு விபரங்கள் மத்திய ஊழல்தடுப்பு ஆணையத்தின் செய்திக்கடிதத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் நிறுவங்களுக்கு இடையிலுள்ள கொள்ளைக்கூட்டை இந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதில் அமைச்சராக இருந்த ஆ.ராசாவுடன் இவர்கள் எப்படி கூட்டுச் சேர்ந்தனர் என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்* ஊழலால் இந்தியத் தனியார் துறை பாதிக்கப்படுகிறது என்றெல்லாம் இல்லை. சொல்லப்போனால், அரசில் உள்ளவர்களோடு கூட்டுக்களவாணிகளாக இருந்து ஊழலை செய்பவர்களாக மாறிவிட்டனர். இந்த ஊழலில் பொதுத்துறையில் உள்ள அதிகாரிகளும், தனியார் துறையில் உள்ளவர்களும் கைகோர்த்துக் கொள்கிறார்கள். குறிப்பாக, மின்னுற்பத்தி, கனிம வளம் மற்றும் எண்ணெய் ஆகிய துறைகளில் இத்தகைய மோசடிகள் பெருமளவில் நடைபெறுகின்றன.* தனியார் துறையில் நிகழும் ஊழல்களைத் தடுப்பதற்காக ஒரு வலுவான தடுப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். லஞ்சம் கொடுப்பதில் நாட்டின் தொழிலதிபர்கள் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.* தனியார் துறை நிர்வாகிகள், பொதுத்துறையில் உள்ள தங்களின் சகாக்களுக்கு லஞ்சம் தருகிறார்கள். மற்ற தனியார் நிறுவனங்களிலிருந்து தங்களது வேலையைச் செய்து தரவும் இத்தகைய லஞ்சம் வழங்கப்படுகிறது.டிரான்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஊழலுக்கு எதிராக சர்வதேச அளவில் இயங்கி வருகிறது. ஜெர்மனியின் பெர்லின் நகரிலிருந்து இந்த அமைப்பினர் இயங்குகிறார்கள்.இவர்களுக்கு இந்தியாவிலும் கிளை உள்ளது. அந்தக் கிளைதான் தனியார் துறையின் ஊழல் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. சரக்குகளை வாங்குவதில் எப்படி அரசுத்துறைக்கு சில கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளனவோ, அதேபோல் தனியார் துறைக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். இதில் நேர்மையான அணுகுமுறை என்பது ஒரு திட்டமாகும். 1990களில் இந்தத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றால் ஊழல் தடுப்புக்காக இது கொண்டு வரப்பட்டது. இத்தகைய அணுகுமுறை தனியார் நிறுவனங்களுக்கும் விரிவடைய வேண்டும். குறிப்பாக, ஒப்பந்தப்புள்ளி கோருதலில் தீவிரமான கண்காணிப்பு தேவைப்படுகிறது.ஆலோசனைகள் கேட்கிறோம் என்ற பெயரில் அரசு பல்வேறு பரிந்துரைகளைக் கிடப்பில் போட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இடதுசாரிக்கட்சிகள் தொடர்ந்து தனியார் நிறுவனங்களின் ஊழல் மோசடிகளை விசாரிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. மத்திய அரசோ, மாநிலங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம் என்று கூறுகிறது.இத்தனைக்கும் 22 மாநிலங்கள் பதில்கூட அனுப்பிவிட்டன. இதில் கொடுமை என்னவென்றால், தனியார் துறையில் லஞ்சம் கொடுப்பதை குற்றம் என்று இந்தியக் குற்றவியல் சட்டம் சொல்லவில்லை. அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால்தான் அதைக் குற்றம் என்றும், பின்னர் அந்தக் குற்றங்களை விசாரித்து தண்டனை தருவது என்றும் நடவடிக்கைகள் எடுக்க முடியும். இதைச் செய்ய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
மக்கள், இடது சாரிகள் நிர்ப்பந்தம்
இடதுசாரிகள் நிர்ப்பந்தம் கொடுத்து வருவது ஒருபுறம். இந்தப் பிரச்சனையைக் கைகழுவிவிடாமல் இருக்க வேண்டிய கட்டாயம் எழுந்ததற்கு மற்றொரு காரணமும் உருவாகியுள்ளது. ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தனியார் துறை ஊழலை குற்றவியல் சட்டத்தில் குற்றமாகக் கருத வேண்டும்.

இந்த நிர்ப்பந்தம் எழுந்ததால்தான் நடவடிக்கை எடுப்பதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த நாசகர அணுசக்தி ஒப்பந்தத்திற்கே பொதுக்கருத்து என்று பேசாத மத்திய அரசு, ஒரு மாநிலம் பதில் அனுப்பாமல் இருந்தால்கூட இது பற்றிப் பேசாமல் இருந்து விடுவது என்றிருக்கிறது. ஆனால் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. நீண்ட நாட்களுக்கு இப்படிக் காலம் கடத்திவிட முடியாது என்பதைத்தான் மக்களின் கருத்துகள் காட்டுகின்றன. அந்தக் கருத்தையே டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்தியா அமைப்பின் ஆய்வு பற்றிய அறிக்கை பிரதிபலிக்கிறது.
-------------------------------------------------------------------------------....

............................................................................................................................
இது நம் இந்தியாவில் மும்பையில் உள்ள ஒரு ஆடமபர கட்டிடம்தான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2ஜி ஸ்பெக்ட்ரம்
மத்திய அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரிய நிறுவனங்களுக்கு அவர் சாதகமாக இருந்திருக்கிறார் என்பது நீதிமன்றத்தின் முன்னால் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். மத்தியப் புலனாய்வுக்குழு தயாரித்துள்ள குற்றப் பத்திரிகையில் ரிலையன்ஸ் டெலிகாம், யுனிடெக் வயர்லெஸ்(தமிழ்நாடு) மற்றும் ஸ்வான் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர். பின்னர், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கைதானார். அதைத்தொடர்ந்து குசேகான் நிறுவனத்தின் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத் தின் இயக்குநர் கரீம் மொரானி ஆகியோர் கைது செய்யப்பட் டார்கள்.
டிசம்பர் மாதத்தில் எஸ்ஸார் நிறுவனத்தின் ரவி ருயா மற்றும் அன்சுமன் ருயா, லூப் டெலிகாம் நிறுவனத்தின் ஐ.பி.கய்தான் மற்றும் கிரண் கய்தான் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டன.
----------------------------------------------------------------------------------......
.........................................................................

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?