சுஷ்மாவை கலக்கிய பக்‌ஷேயின் விருந்து.

இலங்கை சென்ற மக்களவை உறுப்பினர் குழு தான் சென்ற காரியத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பி விட்டது.
இலங்கை பக்‌ஷேக்கள் செய்த காரியங்கள் திருப்தியாக உள்ளதாக வயிறும்-மனமும் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.
சுரன்

காங்கிரசு உறுப்பினர்கள் ஏற்கனவே மத்திய ஆளும் காங்கிரசின் வழிகாட்டுதலில் பக்‌ஷேக்கு ஆதர்வாகவே பேசுவார்கள்.
சுஷ்மாவோ தாங்கள் என்றாவது மத்திய அரசை கைப்பற்றுவோம் அப்போது இலங்கை தமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.அவர்கள் கட்சி பாஜக வில் பொன் ஜி யைத்தவிர தமிழர் நலத்தில் அக்கறை காட்டும் தலைவர்களும் கிடையாது.
ரங்கராஜனோ மார்க்சிஸ்ட் கடசி இலங்கைத்தமிழர் பிரச்னைக்கு போராட்டம் நடத்திய போது இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து கட்சியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டவர்.
இப்படிஈழத் தமிழர் மீது உண்மையிலேயே அக்கறை இல்லாத கூட்டம்தான் கோடை சுற்றுலா சென்று வந்துள்ளது..
பசில் ராஜபக்‌ஷே இந்தியக்குழு தன்னிடம்"போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியமர்த்துவதிலும் உள் கட்டுமான வசதிகளை செய்துகொடுப்பதிலும் இலங்கை அரசின் நடவடிக்கை குறித்து, இந்திய நாடாளுமன்ற குழுவினர் திருப்தியடைந்ததாக"
கூறி சென்றதாக மகிழ்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஈழம்


குழுத்தலைவி சுஷ்மா சுவராஜ் இன்னும் சில படிகள் மேலே ஏறியுள்ளார்.
பக்‌ஷே விருந்தை தமிழ் நாட்டில் உள்ள்வர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்பதால் விருந்து இம்முறைநிரலில் நீக்கப்பட்டிருந்தது.தேயிலையும்தான்.
இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்திய நாடாளுமன்ற குழு தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு இன்று காலை தனியாக விருந்தளித்துள்ளார்.

மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை.
முன்னதாக, நாளை ராஜபக்சேவுடன் நடப்பதாக இருந்த காலை விருந்தை நீக்கிட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதால் விருந்து நீக்கப்பட்டு  ராஜபக்சே சந்திக்க திட்டம் வெளியானது.ஆனால்இலங்கை அதிபர் மாளிகையில், இன்று காலை விருந்து தயார் செய்யப்பட்டு. அதில், சுஸ்மா சுவராஜ் மற்றும் அவரது மகள் பன்சூரி சுவராஜ் ஆகியோர் பங்கேற்று வயிரார சாப்பிட்டுள்ளனர்.
சுரன்

 
இன்று பக்‌ஷேவை சந்திக்கும் போது வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கான அதிகாரப்பகிர்வு குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட கருத்துத் தொடர்பாகவும், இலங்கை அதிபரிடம் குழுத்தலைவர்சுஸ்மா சுவராஜ் எடுத்துக் கூறுவார் என்று குழுவினர் கூறிக்கொண்டிருந்தனர்.ஆனால் விருந்தின் போது சொந்தக்கதைகள்தான் பேசப்பட்டதே தவிரஈழத்தமிழர் இன்னல்களைப்பற்றிப் பேசப்பட்டதாக தகவல்கள் ஏதும் பக்‌ஷே அலுவலகம் வெளியிடவில்லை. 

இந்நிலையில், சுஸ்மா சுவராஜ்-அவர் மகள் இருவரும் இலங்கை அதிபரை தனிப்பட்ட முறையில்சந்தித்து சாப்பிட்டு பரிசுகள் வாங்கியது இக்குழுவினர் பயணத்தையே அசிங்கப்படுத்தி உண்மை நிலையை வெளியுலகிறகு காட்டிவிட்டது.

இக்குழுவில் சுஷ்மா மகள் இடம் பெற்றதே இது கோடைகால இன்ப சுற்றுலா.அதுவும் இந்திய மக்கள் வரிப்பணத்தில் என்பதை உண்மையாக்கி விட்டது.
சுரன்


இது பழைய விருந்து.நிருபமா ராவ் அமெரிக்க தூதுவராக நியமனம் செய்யப்பட்டு செல்லும் முன் தனிப்பட்ட பயணமாக இலங்கை சென்று பக்‌ஷே விருந்தை சாப்பிட்டுவிட்டு சென்றார்.
இவர்கள் எல்லாம் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.சொல்வார்கள்.செய்வார்கள் என்று கனவிலும் நம்ப இயலுமா?


ஈழத்தமிழர் துன்பம் கிடக்கட்டும் சுஷ்மா சுவராஜ் அவர்களே.
விருந்து நன்றாக இருந்ததா?
சுரன்

அப்படி வெளியே சொல்லாமல் ரகசியமாக மகளுடன் பக்‌ஷேவிடம் என்ன கதைத்தீர்கள்?
சரி.மறக்காமல் சிலோன் தேயிலை பொத்தல் வாங்கினீர்களா?நல்ல சுவையான தேநீர் மணக்க போடலாம்.கொடுக்காமல் ஏமாற்றிவிடப்போகிறார் பக்‌ஷே.ஈழத்தமிழர்களை ஏமாற்றி வருவது போல.
_____________________________________________________________
வித்தியாசமான சில விபத்துக்கள்.

















--------------------------------------------------------------------------------------------------------
சுரன்

































இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?