குறைகள்

நமது குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் பதவி காலம் முடியும் போது ஒரு மன்க்குறையுடன் இருப்பதாக தெரிகிறது .இன்னமும் மூன்று நாடுகளுக்கு செல்ல வேண்டும் கால அவகாசம் இல்லை.பதவிகாலம் முடிகிறது.வெளிநாடுகளுக்கு அதிகமாக சுற்றுப் பயணம் செய்வதாக, என் மீது புகார் கூறப்படுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. என்னுடைய சொந்த விருப்பத்துக்காகச் செல்லவில்லை. மற்ற நாடுகளுடன், இந்தியாவின் உறவை மேம்படுத்த வேண்டும் என்றே செல்கிறேன். அரசு தரப்பில் இன்னும் மூன்று நாடுகள் சுற்றுங்கள் என்று வற்புறுத்தப்படுகிறது. ஆனால்போதிய கால அவகாசம் இல்லாததால், இது சாத்தியமில்லை என்றுள்ளார்.
சுரன்


இன்னமும் மூன்று நாடுகளை அவர் சுற்றிப்பார்த்து விட்டு வரும் வரை குடியரசுத்தலைவர் தேர்தலை ஒத்திப்போட சட்டத்தில் வழியிருக்கிறதா என்று ஆய்வு செய்ய ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தால் என்ன?
குடியரசுத்தலைவர் போட்டிக்கு தாங்கள் ஆளை கூறவில்லை என்று இலங்கைப்பயணம் புகழ் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.ஆனால் அமீது அன்சாரி,பிரணாப் என்று யாராவது கூறினால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.
முலாயம் -ஜெயலலிதா கூறுவது போல் அப்துல் கலாம் என்றால் சரிதான் என்று கூடுதலாகக் கூறியும் இருக்கிறார்.
அதுதான் அப்துல் கலாம் என்று கூறி விட்டு நாங்கள் யாரையும் முன்னிருத்தவில்லை என்ற பேச்சு.
சுரன்


அப்துல் கலாமை விட அமீது அன்சாரி.இப்போதைய துணை கு.தலைவர் தான் பொருத்தமானவர்.மக்கள் நலன் பற்றி கொஞ்சம் கவலை கொண்டவர்.சுற்று சூழல்,விலைவாசி பற்றி மக்கள் நலன் பேணும் கருத்துடையவர்.
இது போன்ற நல்ல குணங்கள் இருப்பதாலும் கொஞ்சம் இடது சாரி உள்ளம் கொண்டவர் என்பதாலும் அவர்தான் இந்திய இன்றைய நலனுக்குகந்தவர்,ஆனால் இதுதான் அவருக்கு பாஜக ,காங்கிரசு உட்பட பல கட்சிகளின் ஆதரவை பெறமுடியாத அளவுக்கு பலவீனமும் கூட.
அப்துல்கலாம் அணு உலை பற்றிய கருத்துக்களும்,விலைவாசி உயர்வுக்கு ஆதரவான பேச்சுக்களும் இக்கட்சிகளின் ஆதரவை பெற்றுத்தரும் பலமாக உள்ளது.
சுரன்


அப்துல் கலாம் நல்ல அறிவியல் நிபுணர்.ஆனால் சிறந்த நிர்வாகியல்ல.இதைதான் சென்ற குடியரசுத்தலைவர் பதவிகாலத்தில் நிருபித்துள்ளார்.ஆனால் ஆளுங்கட்சிக்காரர்களுக்கு தலையாட்டுபவர்கள்தானே வேண்டும்?


இத்தாலிக்கப்பலை சோனியா அரசு விடுவிக்க முழு ஒத்துழைப்பைக்கொடுத்தாலும் உச்ச நீதிமன்றம் விடுவிக்க தடை கல்லாக ஆணையிடும் என்றே தெரிகிறது.
சுரன்


கேரள உம்மன் சாண்டி அரசு சோனியா வழிக்கட்டுதலில் இத்தாலியக்கப்பலை விடுவிக்க தடை இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் அசிங்கப்பட்டுள்ளது.
"இத்தாலியர்கள் இந்திய சட்டமைப்புடன் விளையாடுகிறார்களா?கப்பலை விடுவிக்க கேரள அரசு எந்த முறையில் தடையின்மை சான்று தருகிறது.இது நம் இந்திய சட்டத்தை மட்டுமல்ல பாதுகாப்பையும் கேலிக்குரியதாக்கும் செயல்"என்று நீதிபதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இனியாவது இத்தாலி என்றவுடன் காங்கிரசார் தமிழக அமைச்சர்கள் போல் குனிந்து சுருங்காமல் இருக்கட்டும்.

ஈழமக்கள் ஒழிப்புபோரின் இறுதிக்கட்டங்களில் தாம் உண்ணா நோன்பு மேற்கொண்டும் மஹிந்த ராஜபக்ச அரசால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.
சுரன்

அவர் ஏமாற்றப்பட்டது பக்‌ஷேவால் அல்ல.அவரின் படுகொலைகளுக்கு துணை போன காங்கிரசு அரசால்.அப்போது கருணாநிதி எடுத்த தவறான முடிவுகள்தான் அவருக்கு இலங்கை பிரச்னையில் கறையை ஏற்படுத்தி விட்டது.போர் நடக்கும் போது இந்திய படைகள் உதவுகிறது என்று பகிரங்கமான பின்னும் 2ஜி பயத்தில் காங்கிரசை பகைக்காமல் பாலுக்கும் பூனைக்கும் காவல என்ற நிலையில் இருந்ததுதான் அவர் செய்த மகாதப்பு.ஆனால் அதே நேரம் புலிகளை எதிர்த்து வந்த ஜெயலலிதா சரியான முறையில் அறிக்கைகள் மட்டும் விட்டு நல்ல பெயரை பெற்று விட்டார்.சட்டமன்றத்தேர்தல் முடிவுகளுக்குஈழமும் ஒருகாரணி.
முகத்தில் கரியை பூசிகொண்டு இலங்கைதமிழர்கள்-ஈழ ஆதரவாளர்களிடம் துரோகிக்கொப்பான பெயரை பெற்றுக்கொண்டு இப்போது டெசோ அமைப்பதும் தனி நாடு வாக்கெடுப்பும்சரியான செயலாகத்தெரியவில்லை.இன்றைய நிலயில்முகாம்களில்கைதிகள் போல் ராணுவக்காவலில் இருக்கும் தமிழர்களால் தன்னிச்சையாக வாக்களிக்க இயலுமா?தாய்லாந்து முன்பு நடத்திய வாக்கெடுப்பு போல்தானே இருக்கும்.
[ஹிட்லர் நடத்திய வாக்கெடுப்புதான் இப்போது ஞாபகம் வருகிறது.தேர்தல் அறிவித்த ஹிட்லரை புகழ்ந்து கொண்டு வாக்குச்சீட்டு வாங்கியவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாம்.சீட்டில் நாஜி சின்னம்மட்டும்தான் அச்சாகியிருந்ததாம்.பின் என்ன அனைத்து வாக்குகளும் ஹிட்லருக்குத்தான்.சூப்பர்-டூப்பர் வெற்றி.எதிர்த்தவர்கள்[?]சங்கரன்கோவில் போல் காப்புத்தொகை இழந்துவிட்டார்கள்.வேறுவழி?]
அதுவும் இப்போது மரண அமைதியில் உள்ள தனி ஈழம் அங்குள்ள தமிழர்கள் அவசரத்தேவையாக இல்லை.
சொந்த இடத்தில் மீள குடியமர்த்திடலும்-முகாம்கள் முற்றிலும் முடிவுக்கு வந்து இயல்பு வாழ்க்கையுமே அவர்களின் இன்றைய தேவை.அதற்கு டெசோ வழி செய்யட்டும்.வாக்கெடுப்பு பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
_________________________________________________________________________________
சுரன்
இந்தியா வல்லரசாகிறது.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?