கோட்டை விடுபவர் யார்?

புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைசார்ந்த முத்துக்குமரன் ஏப்ரல் 1ஆம் தேதி விபத்தில் சிக்கி பலியானதை அடுத்து புதுக்கோட்டையில் இடைத்தேர்தல் நடக்கிறது.
தற்போது புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு ஜூன் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 18 வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பமாகிறது.
சுரன்
புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக கார்த்திக் தொண்டமான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் தேதியை ஆணையம் அறிவிப்பதற்கு சிறிதுமுன்பு அதிமுக தமது வேட்பாளரை அறிவித்துள்ளது.
கருணாநிதி நேற்றுதானே சொன்னார்.புதுக்கோட்டையில் அதிமுக அரசு நிவாரணப்பணிகளை செய்துமுடித்தவுடன் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று.அவர் வாயில் அல்வாவைத்தான் போட வேண்டும்.
வேட்பாளர் அறிவிப்பும் -தேர்தல் நன்னடத்தையும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரன்


தங்கள் கட்சிக்காரர் எம்.எல்.ஏ.வாக இருந்ததால் இத்தொகுதி இடைத்தேர்தலில் தமக்கே ஒதுக்கப்படும் என தா.பாண்டியன் கட்சி கனவு கண்டு கொண்டிருந்தது.அதிமுகவை பொறுத்தவரை கூட்டணியாவது-தர்மமாவது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போதேஅதிமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.
சங்கரன் கோவில் நடைமுறை புதுக்கோட்டையில் முத்துக்குமரன் இறுதி ஊர்வலத்துக்கு முன்னரே ஆளுங்கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கார்த்திக் தொண்டமான் தற்போது புதுக்கோட்டை நகராட்சித் தலைவராக இருந்து வருபவர். புதுக்கோட்டை முன்னாள் அரச குடும்பத்தைச்சேர்ந்தவர்.
சுரன்

இந்தியமாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்ட மன்றத் தொகுதிகள் என காலியாக உள்ள 27 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில்  இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆந்திராவில் மட்டும் நெல்லூர் நாடாளுமன்றத் தொகுதி, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த இடைத் தேர்தலில் வாக்கு இயந்திரம் பயன்படுத்தப் படும் என்றும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  •  மே மாதம் 18-ம்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது.
  • மே 25 ந்தேதி வேட்பு மனுத்தாக்கலுக்கு இறுதி நாள்.
  •  வேட்பு மனுக்கள் பரிசீலனை மே மாதம் 26-ந்தேதி நடைபெறும்.
  • வேட்பு மனுவை திரும்பப் பெறும் கடைசி நாள் மே மாதம் 28ந் தேதி 
  •  வாக்குபதிவு ஜூன் 12-ந்தேதி நடைபெறும்.
  • வாக்கு எண்ணிக்கை ஜூன் 15 அன்று நடைபெறும்.



________________________________________________________________________________


1747 கொலைகள்


தமிழகத்தில் கடந்த ஆண்டு 1747 படுகொலைச் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
காதல் விவகாரம், பாலியல் தொந்தரவு, குடும்ப தகராறு உள்ளிட்ட காரணங்களால் 2011ம் ஆண்டில் தமிழகத்தில் 1747 கொலைகள் நடைபெற்றிருப்பதாக தமிழக அரசின் புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப தகராறில் 440 கொலைகளும், ரவுடிகள் விவகாரத்தால் 325 கொலைகளும், முன் விரோதம் காரணமாக 412 கொலைகளும், காதல் விவகாரம் மற்றும் பாலியல் தொந்தரவு காரணமாக 347 கொலைகளும் நடைபெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலைகளுக்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்புள்ள விபரங்களைக் கூற மறந்து விட்டாரே.
இக்கொலைகள் எல்லாம் தான் ஆட்சிக்கு வரும் முன் ஏப்ரலில்தான் நடந்துள்ளதா.திமுக ஆட்சியில் எத்தனை கொலைகள்.அதிமுக ஆட்சியில் எத்தனை கொலைகள் என்ற விபரமும் தெரிவிக்கப்படவில்லையே?.
_________________________________________________________________________________
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?