தேர்தல்தான் முக்கியம்.
விரைவில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக தொடங்கி உள்ளது. இதை பாஜக முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் புலம்பெயர்வு தொழிலாளர்கள் இரயில் பயணம் செய்யத்தேவையான நிதி மத்திய அரசிடம் இல்லை என்றும், மாநில அரசின் பங்கில்தான் புலம்பெயர்வு தொழிலாளர்களின் இரயில் பயணம் சாத்தியமாகும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் இந்த கரோனா காலத்திலும் தேர் தல் பிரச்சாரத்தில் இறங்கிய பாஜக சத்தியப் பேரணி (விருட்சுவல் ரேலி) என்ற பெயரில் இணையவழி பிரச் சாரத்தை தொடங்கியுள்ளது. இதற்காக பீகாரின் பல்வேறு இடங்களில் ஒருலட்சம் பிரமாண்ட எல்.ஈ.டி. எனப்படும் பெரிய மின்னணுத் திரைகள் அமைக்கப்பட்டன. அனைத் திற்கும் அதிநவீன இணைய இணைப்பு வேகமாக வழங்கப்பட்டது. இதற்கான தொகை குறைந்த பட்சம் ரூ.200 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். பீகார் முழுவதும் முக்கிய இடங்களில் இவ்வாறு பெரிய எல்.ஈ.டி. திரைகள் அமைக்க மூன்று தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கொடுக்கப்பட்டன.
இந்த எல்.ஈ.டி திரைகள் தேர்தல் வரை அங்கேயே இருக்கும் என்றும், கரோனா காரணமாக நேரடிப் பிரச்சாரம் சாத்தியமாகாத பட்சத்தில் இந்த எல்.ஈ.டி. திரைகள் மூலமே மோடி - அமித்ஷா மற்றும் இதர பாஜக பிரமுகர்கள் பிரச்சாரம் செய்வார்கள் என் றும் கூறப்பட்டுள்ளது. இதே போன்று திரைகள் இலட் சக்கணக்கில் பீகாரின் அனைத்துப் பகுதிகளிலும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பீகார் பாஜக பிரமுகர்கள் கூறியுள்ளனர். இதற்கான செலவும் ஆயிரம் கோடி வரை ஆகும் என்று கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் உலகெங்கும் பரவிய கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் முழுமையான ஊரடங்கு நிலவியது. இந்த ஊரடங்கின் போது உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு திட்டங்களை வகுத்து கரோனாவிலிருந்து தங்களுடைய மக்களை பாதுகாத்துக் கொண்டனர். அதே வேளையில் இந்தியாவில் ஊரடங்கு மே 18-ஆம் தேதிக்குப் பிறகு மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கரோனா தொற்று அபாயகரமான அளவு அதிகரித்து வருகிறது. ஒரு இலட்சம் கரோனா தொற்று நோயாளிகள் உருவாக 4 மாதங்கள் ஆயின.
ஆனால் தற்போது 10 நாட்களில் தொற்று ஒரு இலட்சத்தைத் தாண்டுகிறது அதே போல் மரணமும் ஜூன் மாதத்திலிருந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தியாவில் இந்தவார இறுதியில் 3 முதல் 4 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப் படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உயிரிழப்பின் வேகத்தைப் பார்த்து நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அனைத்துக் கட்சிகளும் மத்திய பாஜக அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகளை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளன. ஆனால் ஆளும் பாஜக தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கி உள்ளது. புலம்பெயர்வு தொழிலாளர்களின் இரயில் பயணத்திற்குப் பணம் இல்லை என்று கூறிய மத்திய பாஜக அரசு தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆயிரம் கோடிகளை வாரி இறைக்க முடிவு செய்துள்ளது. தற்போது பீகார் மாநிலத்தில் பாஜக பங்கு பெற்றுள்ள கூட்டணியே ஆட்சி நடத்தி வருகிறது.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல் அமைச்சருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது.
"பீகாரில் பிஜேபி கூட்டணி ஒருவர்மீது ஒருவர் அவநம்பிக்கைக் கொண்ட கூட்டணியாக மாறி விட்டது. ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பின் பீகார் மக்களும் தங்களுக்கு எதிராக உள்ளனர் என்பதைப் பிஜேபி தலைமை புரிந்து கொண்டுள்ளது. எனவேதான் எதிர்க்கட்சிகளின் மனவலிமையைக் குலைக்க ரூபாய் 150 கோடி செலவில் ஆன்லைன் பொதுக் கூட்டத்தை பிஜேபி நடத்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
கரோனா கடுமையாகத் தொற்றிய கால கட்டத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி யைக் கவிழ்க்கும் வேலையில் ஈடுபடும் பிஜேபியின் மதவாத அரசியல் - அதிகாரம் கரோனாவைவிட ஆபத் தானதே!
----------------------------------------------------+
உச்சம்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
தமிழகத்தில் இன்று மேலும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 30 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 36,841 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டுமே இன்று 1,392 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 25,937 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 17,675 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று வரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 6,38,846 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்று ஒரே நாளில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 19,333 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 17,179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையில் 16 பேர், செங்கல்பட்டில் 3 பேர் என இன்று 19 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.
+--------------------------------------------+
இதுவரை ஒன்பது ச.ம.உறுப்பினர்கள்
மரணம்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று (ஜூன் 10) காலை உயிரிழந்த நிலையில், தற்போது தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் 15வது சட்டப்பேரவையில் இதுவரை ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டுவரும் சட்டப்பேரவை, மாநிலத்தின் 15வது சட்டப்பேரவை. 2016ல் தேர்வுசெய்யப்பட்ட இந்த சட்டப்பேரவையில், அ.தி.மு.க. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஜெ.ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
ஆனால், இந்தச் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்து தற்போதுவரை சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மரணமடைந்துவருகின்றனர். தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனின் மரணத்தோடு சேர்ந்து இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.எம். சீனிவேல், வாக்கு எண்ணிக்கை நடந்த தினத்தன்றே காலமானார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர் வெற்றிபெற்றிருந்தபோதிலும், சட்டமன்றத்தில் உறுப்பினராகப் பதவியேற்பதற்கு முன்பே காலமானார்.
அதற்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா (சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி), ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம் தொகுதி), ஆர்.கனகராஜ் (சூலூர் தொகுதி) என அடுத்தடுத்து மரணங்கள் நடந்தன.
தி.மு.கவிலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்தனர். கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி (திருவாரூர்), கே.ராதாமணி (விக்கிரவாண்டி), கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), எஸ்.காத்தவராயன் (குடியாத்தம்) ஆகியோர் உயிரிழந்துவிட்ட நிலையில், ஐந்தாவதாக சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ. அன்பழகனும் உயிரிழந்திருக்கிறார். கே.பி.பி. சாமியும் எஸ். காத்தவராயனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர்.
விக்கிரவாண்டி கே. ராதாமணி, திருவொற்றியூர் கே.பி.பி. சாமி, குடியாத்தம் காத்தவராயன், சேப்பாக்கம் அன்பழகன் என தி.மு.கவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த ஓராண்டிற்குள் உயிரிழந்துள்ளனர்.
இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.கவின் பலம் 100ஆக உயர்ந்திருந்த நிலையில், கே.பி.பி. சாமி, எஸ். காத்தவராயன் மறைவுக்குப் பிறகு 98ஆகக் குறைந்தது. ஜெ. அன்பழகனும் உயிரிழந்திருக்கும் நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 97ஆகக் குறைந்துள்ளது.
234 எம்எல்ஏக்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் தற்போது 231 உறுப்பினர்களே உள்ளனர். இந்த சட்டப்பேரவையின் காலம் 2021 ஏப்ரல் வரையே உள்ளதா லும்,கொரோனா பரபரப்பு என்று ஓயும் என்று தெரியாத்தாலும் தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.
---------------------------------------------------+
இனி எப்போது பாச முகம் காண்பேன்?
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் ஜூன் 10 அன்று தனது பிறந்த தேதியிலேயே (10.06.1958)காலமானார்.
அவருக்கு வயது 62.
கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட ஜெ. அன்பழகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8 05 மணிக்கு உயிரிழந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் தான். தனது பிறந்த நாளான ஜூன் 10-ஆம் தேதியில் அவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் அவர் இருந்தார்.
கடந்த ஜூன் 2ம் தேதி முதல் மூச்சுத் திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவருக்கு கோவிட்-19 தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அன்பழகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், செயற்கை சுவாசம் அளிக்கும் வகையில் வெண்டிலேட்டர் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொரோனா பாதிப்பு இருப்பதால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் அவரை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன.
திமுக நிர்வாகி ஒருவர், ''அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளது. அதோடு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது குடும்பத்தார் அவரை சந்திப்பதற்குக் கூட அதிக கட்டுப்பாடுகள் இருப்பதால், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அவரை நலம் விசாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எங்களுக்கு இது வருத்தமான காலம்,'' என்றார்.
யார் இந்த அன்பழகன்?
திமுகவில் வெளிப்படையாக பேசும் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் ஜெ.அன்பழகன். ஃபேஸ்புக், ட்விட்டர் என தனது கருத்துகளை உடனடியாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வந்தவர்.
2001ல் தியாகராய நகர் தொகுதியிலும், 2011 மற்றும் 2016 தேர்தல்களில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.
அவர் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2001 தேர்தலில், தியாகராய நகர் தொகுதியில், அதிமுகவின் சுலோச்சனா சம்பத்தை 2,499 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு நேரத்தில், கடந்த மார்ச் மாத இறுதியில், நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்க சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.
அத்துடன் அவரது ஒரு மாத சம்பளமான ரூ.1,05,000-ஐ தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்
திமுக எம்.எல்.ஏ மற்றும் அரசியல்வாதியாக மட்டுமல்லாது தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார்.
2013ல் ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளராகவும், ''யாருடா மகேஷ்'' என்ற படத்திற்கு விநியோகஸ்தராகவும் அன்பழகன் இருந்துள்ளார்.
2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதில் சிக்கல் உண்டானது.
அப்போது அந்தப் படத்தின் குழுவினர் விரும்பினால் தனது 'அன்பு பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடத் தயார் என்று கூறியிருந்தார் அன்பழகன்.
இனி எப்போது பாச முகம் காண்பேன்?
"மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் அன்பழகனை எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாச முகம் காண்பேன்?" என முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
ஜெ.அன்பழகன் மறைவையொட்டி திமுக சார்பில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன்.
லாபம் அதானிக்குமக்களுக்கு இழப்பு.
இஇந்திய வானூர்தி நிலைய ஆணையத்திடமிருந்து (AAI) அதானி குழுமம் 50 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் கையில் எடுத்த விமான நிலையங்களை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள கூடுதலாக 6 மாத அவகாசம் கேட்டுள்ளது. கொரோனா முடக்கம் காரணமாக வானூர்திப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் தமக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று காரணம் கூறியுள்ளது அதானி குழுமம்.
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் மத்திய மோடி அரசு, 6 வானூர்தி நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்க முடிவெடுத்து அதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரியது. லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய விமான நிலையங்கள் இதில் அடங்கும். இது இவ்விமான நிலையங்களை அடுத்த 50 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான பொதுத்துறை – தனியார் கூட்டு (PPP) அடிப்படையிலான ஒப்பந்தத்திற்கான அழைப்பாகும்.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஆறு விமான நிலையங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்படுவதற்கு ஏற்ற வகையில் சட்டத்தை மீறி இந்த ஏலத்திற்கான பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதாக நியூஸ் கிளிக் எனும் இணையதளம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே மோடி அரசை அம்பலப்படுத்தியது. பிற அமைச்சகங்களும், அரசுத் துறைகளும் கொடுத்த ஆலோசனைகளை மீறியே, வானூர்தி நிலையத் தொழிலுக்குத் துளியும் சம்பந்தமில்லாத அதானி குழுமத்திற்கு 6 வானூர்தி நிலையங்கள் வழங்கப்பட்டன.
அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் என்ற தனி நிறுவனத்தை புதியதாக உருவாக்கி இந்தத் துறையில் கால் பதித்திருக்கிறது அதானி குழுமம். விமான தரையிறக்கம் மற்றும் நிறுத்துவதற்கான கட்டணம் ஆகியவற்றின் மூலமும், விமான நிலையத்திலேயே விடுதிகள், மால்கள் மற்றும் விமான நிலைய கிராமம் போன்ற கேளிக்கை அம்சங்களின் மூலமும் வரக்கூடிய பெருமளவிலான வருவாயைக் கணக்கில் கொண்டுதான் மோடி அரசின் உதவியுடன் இந்த ஒப்பந்தத்தை மும்முரமாகப் பெற்றது அதானி குழுமம்.
இதன்படி, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 180 நாட்களுக்குள் ரூ. 1500 கோடியைச் செலுத்தி முறைப்படி விமான நிலையத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சில விமான நிலையங்களின் மீதான வழக்குகள் இன்னும் முடியாமல் இருக்கும் நிலையில், லக்னோ, மங்களூரு, அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களை மட்டும் உடனடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள முடிவு செய்தது. கடந்த பிப்ரவரி 2020-ல் அதற்கான இறுதி ஒப்பந்தத்தை இந்திய வானூர்தி நிலைய ஆணையத்துடன் கையெழுத்திட்டது அதானி குழுமம். இதன்படி அதானி குழுமம் ஏப்ரல் மாதத்திற்குள் முழுத் தொகையையும் கொடுத்து இந்த மூன்று விமான நிலையங்களின் பொறுப்பையும் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் ஜூன் மாதம் முதல் வாரத்தில், தற்போது இருக்கும் கொரோனா நிலைமைகளைச் சுட்டிக் காட்டி வருமான இழப்பு ஏற்படும் என்பதால், இன்னும் 6 மாதம் கழித்து அந்த மூன்று விமான நிலையங்களையும் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்திருக்கிறது அதானி குழுமம்.
மேலும் தனது அறிக்கையில், வானூர்தித் துறையில் பெருமளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை ஒட்டி, இது குறித்து வல்லுனர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு முடிவெடுக்க இருப்பதாகவும், அதற்காக இன்னும் 6 மாதங்களுக்கு இத்திட்டத்தை தள்ளிப் போடப் போவதாகவும் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பாதிப்பு இருக்கும் என்பதைத் தாம் உணர்வதாகவும் தெரிவித்துள்ளது அதானி குழுமம்.
“எதிர்பாராத / கட்டுப்படுத்த முடியாத சூழல்களில்” ஒப்பந்தத்தை தள்ளிவைப்பது பற்றிய விதிப்பிரிவின் கீழ் இந்த திட்டத்தை இன்னும் 6 மாதங்களுக்குத் தள்ளி வைக்கும்படி இந்திய வானூர்தி நிலைய ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
ஒரு கடைக்கு முன்பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்த பின்னர், லாபம் குறைவாக வருவதால் வாடகை கொடுக்க முடியாது. 6 மாதம் கழித்து வாடகை கொடுக்க ஆரம்பிக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது, அதானி குழுமத்தின் இந்த வாதம்.
ஒரு கடைக்கு முன்பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்த பின்னர், லாபம் குறைவாக வருவதால் வாடகை கொடுக்க முடியாது. 6 மாதம் கழித்து வாடகை கொடுக்க ஆரம்பிக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது, அதானி குழுமத்தின் இந்த வாதம்.
ஒப்பந்தப்படி ஏப்ரல் மாதம் வானூர்தி நிலையத்தை கையில் எடுத்த பின்னர், வருவாய் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் குவியத் தொடங்கி இருந்தால், நான் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வருகிறது என திருப்பிக் கொடுத்திருப்பாரா அதானி ? லாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு ! இதுதான் பொதுத்துறை – தனியார் கூட்டு ஒப்பந்தங்களின் பின்னணி !
பொதுவாகவே, “நீ அவல் கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டுபேரும் சேர்ந்து ஊதி ஊதி தின்னலாம்” என்பதுதான் பொதுத்துறை – தனியார் கூட்டு ஒப்பந்தங்களின் நியதி. லாபமாக இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளையும், சொத்துக்களையும், ஒரு அற்பமான தொகையை ஈவுத்தொகையாகக் கொடுத்து விட்டு மீதி லாபத்தைக் கல்லா கட்டுவதுதான் இந்த பொதுத்துறை – தனியார் கூட்டுத் திட்டங்களின் அடிப்படையே.
இந்த நிலைமையில் கடந்த மே மாதம், வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஷ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சி ஆகிய 6 விமான நிலையங்களை ஏலத்திற்கு விடப் போவதாக அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
இந்த நிலைமையில் கடந்த மே மாதம், வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஷ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சி ஆகிய 6 விமான நிலையங்களை ஏலத்திற்கு விடப் போவதாக அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பையும், அதானி குழுமத்தின் 6 மாத அவகாச அறிவிப்பையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால், தற்போதைய கொரோனா மற்றும் பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி, அடிமாட்டு விலைக்கு விமான நிலையங்களை தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கு அரசு தயாராகி விட்டதையே காட்டுகிறது!