கருந் துளையும்,ஈர்ப்பு சக்தியும்.



புகழ்பெற்ற நோபல் பரிசு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன்பே "பிரபஞ்ச வெளியில் கருந்துளை என்ற பிளாக் ஹோல் பிரபஞ்சத்தில் இருப்பதாகவும் அது மிகுந்த ஈர்ப்பு சக்தியுடன் கூடிய வெற்றிடமாக இருக்கும் எனவும்.அது தன்னை நெருங்கி வரும் கோள்கள் உடப்பட்ட விண் வெளிப்பொருட்களை தன்னுள் இழுத்துக்கொள்ளும்" என்றும் கண்டுபிடித்து சொன்ன புவி ஈர்ப்பு அலைகளை இதுவரை கறபனை உண்மை என்ற அளவிலேயே வைத்திருந்தனர்.
 கடந்த 1915ஆம் ஆண்டிலேயே விஞ்ஞானி ஐன்ஸ்டின் தனது கோட்பாடு ஒன்றில் இது குறித்த கணிப்பை அறிவியல் உலகின் முன்வைத்தார். 
தற்போது  விஞ்ஞானிகள் உண்மைதான் என ஆய்வின் மூலம் கண்டறிந்து  நிரூபித்துள்ளனர். 
 நம் பிரபஞ்சவெளியில் 'பிளாக் ஹோல்' என்ற கருந்துளைகள் ஆங்காங்கே இருப்பதை முன்பே  விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஐன்ஸ்டின் தத்துவத்தை சரி என கூறினாலும் அந்த கருந்துளைகளுக்கு  ஐன்ஸ்டின் கூறியது போல் 
  ஈர்ப்பு அலைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.இந்த ஆய்வில் சர்வதேச விஞ்ஞானிகளுடன் இந்திய விஞ்ஞானிகளும் இணைந்திருந்தனர். 
அப்போது சுமார் 26 ஆண்டுகளுக்கு பின் இயங்க ஆரம்பித்துள்ள கருந்துளை  ஒன்று விண்வெளியில் மாபெரும் பிளாஸ்மா வெடிப்பு ஒன்றை நடத்தியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் இந்த குறிப்பிட்ட கருந்துளை ஆனது சூரியனை விட 12 மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
  கடந்த சில ஆண்டுகளாக தனது நட்சத்திர அமைப்பில் இருக்கும் நட்சத்திரங்களிடம் இருந்து இந்த கருந்துளை பிளாஸ்மாக்களை அமைதியாக உறிஞ்சு கொண்டுருந்தும் ,அதன் விளைவாக இக்  கருந்துளை தன்னை சுற்றி அளவுக்கு அதிகமான வெப்ப வாயு சுருளாயமைந்து (hot gas spiraled) கொண்டதால் வெடிப்பை நிகழ்த்தியுள்ளதும் கண்டறியப்பட்டது.

சென்ற  2015 செப்டம்பர் 15ஆம் தேதி அமெரிக்காவில்  லூசியானா மாகாணத்தில் உள்ள லிவிங்ஸ்டன் என்ற இடத்தில் 'லிகோ டிடேக்டர்ஸ்'  என்ற கருவி  மூலம்   கருந்துளை ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 
மேலும், இரு பிளாக் ஹோல்கள் மோதிக்கொள்ளும் போது  மாற்றங்களையும் இந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. அப்போது, நிகழும் சப்தத்தையும்  பதிவு செய்துள்ளனர் . 

நாசாவுடன் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்ட புனேவில் உள்ள சர்வதேச வானியற்பியல் மற்றும் வானவியல் பல்கலைக்கழகத்தில் இந்திய விஞ்ஞானிகள் இது குறித்த அறிவிப்பை முறைப்படி அறிவித்துள்ளனர்.
இந்த கருந்துளை['பிளாக் ஹோல்']  உள்ளதா? இல்லையா?என்ற    கேள்வி உலகில் உள்ள அறிவியலாளர்கள் முன்   பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. 
தற்போது ஐன்ஸ்டின் கணிப்புப்படி  கருந்துளைகள்,அதன்  ஈர்ப்பு அலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால்  இது பற்றிய  மர்மம் விலகியுள்ளது..இனி கதைகளில் ,திரைப்படங்களில் வரும்  "கால எந்திரம்"( டைம் மெஷின்) போன்ற கருவிகளை உண்மையிலேயே உருவாக்க இயலுமா,அதன் மூலம் காலம் கடந்த பயணங்கள் சாத்தியப்படுமா என்ற ஆய்வுகளில் இறங்க வாய்ப்புகள் உருவாக்கி யுள்ளது.
காலஎந்திரம் மூலம் 1915 க்கு பயணித்து "ஆல்பர்ட் ஐன்ஸ்டின்"அவர்களை சந்தித்து இக்கண்டு பிடிப்புகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததற்கு ஒரு நன்றியை சொல்லி வர வேண்டும் .
========================================================================
E = MC square என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐயன்ஸ்டின் உணர்தினார்.
E = MC square என்ற சமன்பாட்டில் மிகச் சிறிய துகள்களில் இருந்து கூட பெரும் சக்தியைப் பெறலாம் என்பதை புரிந்து கொள்ளலாம், அதேபோல மிகப் பெரிய சக்தியை சிறிய துகள்களில் அடைக்கவும் முடியும். என்பதை E = MC square என்ற சமன்பாட்டின் மூலம் ஐன்ஸ்டின் விளங்கப்படுத்தினார்.
ஐன்ஸ்டைன் கோட்பாடுகள் மிகவும் புரட்சிகரமானவை. எந்த அளவுக்கென்றால், இதன் காரணமாக நாம் அதுவரை வெளி மற்றும் காலத்துக்கிடையேயான உறவு குறித்து பேணி வந்த பல கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டியாதனது.
ஐன்ஸ்டைனின் தத்துவம் " ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒருவரின் கடிகாரம் சாதாரணமாக இருக்கும் ஒருவரின் கடிகாரத்தை விட மெதுவாகச் செல்லும்" என்று அடித்து கூறுகிறது.
இதன் காரணமாக தூரமும் பாதிக்கப்படும் . ஒளியின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு காரை ஒருவர் ஒட்டிச் சென்றால், அவர் செல்லும் தூரம் குறைவாக இருப்பதாக சாதாரணமாக இருப்பவருக்குப் படும். ஆனால் கார் ஒட்டிச் செல்பவர் தூரம் அதிகமாக இருப்பதாகவே உணருவார்.
முரண்பாடுகள் போல தோன்றினாலும் இதுதான் உண்மை.
உண்மை என்பது கற்பனை கதைகளை விட சுவாரசியமானது
E = MC square என்ற சமன்பாடுதான் அணு ஆயுதங்கள் உருவாக்கப்படுவதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
'ஜெர்மனியில் ஹிட்லர்  அணு ஆயுதங்களை உருவாக்க முயலலாம்.அதனால் மனித இனத்துக்கு கேடு வரும் " என்று அப்போதைய அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்டிடம், ஐயன்ஸ்டின் தெரிவித்தார். 
ஆனால் ஐன்ஸ்டின் கூறிய அணு ஆயுதங்களுக்கு எதிரான  எச்சரிக்கையே  அமெரிக்காவை அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய வைத்தது. 
இதனால்  அமெரிக்கா அணு குண்டு செய்து அதை   பயன்படுத்தப்பட்டவுடன், இது குறித்து ஐயன்ஸ்டின் மிகவும் வருத்தப்பட்டார். மீண்டும் அணு ஆயுதங்கள் தயாரிக்க ,உபயோகப்படுத்தக் கூடாது என்பதற்காக அவர்அனைத்து உலக தலைவர்களையும் வேண்டிக்கொண்டார்.
சார்பியில் தத்துவம் காரணமாக மிக மிக மோசமான ஒரு அழிவு ஆயுதம் உருவாக்கப்பட்ட போதிலும், அத்தத்துவும் தான் நவீன இயற்பியலின் துவக்கத்துக்கு அடித்தளமாக உள்ளது. அதுதான் நமது தற்கால  சமூதாய வாழ்வை மேம்படுத்தும் பொருட்களை கண்டறியவும் பயன் படுகிறது.
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?