{பீட்டா} காலிகளை குதறிய காளைகள்




தமிழகத்தின் தெருக்கு,தெரு ,மோடி அரசும்,சசிகலா அரசும்(?) ஜல்லிக்கட்டுபோராட்டங்களில்  திட்டு வாங்கிய பின்னர்தான் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் தமிழக அரசிடமே உள்ளது என்று பன்னிர்செல்வம்  உணர்ந்தார்.

அந்த அதிகாரம் மூலமாகத்தான் திமுக அரசு தமிழ் நாட்டில் 2011 வரை ஜல்லிக்கட்டை நடத்தி வந்தது என்ற உண்மை அதிமுக அரசுக்கு தெரிந்திருந்தாலும் ,கலைஞரின் வழியில் நடப்பதா என்ற தயக்கமும்,தனது புதிய முதலாளி பாஜக மோடியின் கண்ணசைவிற்கு காத்திருந்தும்தான் தமிழகத்தை போராட்டக் காலமாக்கி விட்டது.

தற்போது நிலை தலைக்கு மேல்.

இருந்தாலும் டெல்லி சென்று புதிய முதலாளி மோடியின் அனுமதியை பெற்று ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் உண்டாக்கி அனுப்பி வைத்தது.

ஜல்லிக்கட்டு  அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. 

தமிழகத்தில் காலூன்ற செய்த முயற்சிகள் அனைத்தும் இருக்கும்  பாஜகவுக்கும் பாலூற்றும் நிகழ்வுகளாகவே மாறிவிடுவதால் அதிர்ந்திருந்த பாஜக மோடி அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அடக்கி வாசிக்கவே முயல்கிறது.

தமிழக போன்.ராகி,தமிழிசை ஏற்கனவே ஜல்லிக்கட்டை அனுமதிக்க கூறியிருந்த போதும்,பசுவை வணங்கும் கும்பல்களின் பேச்சினால் மோடி அரசு கொஞ்சம்   குழம்பி விட்டது தமிழகத்தில் அதற்கு பெருத்த பின்னடைவை தந்து விட்டது.

வேறுவழியின்றி  காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கும் வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

  காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் காளையை முந்தைய காங்கிரசு அமைசர் ஜெயராம் ரமேஷ் தான் சேர்த்தார்.காரணம் அவரும் கோமாதா கும்பிடும் வர்ணத்தை சேர்ந்தவர் என்பதுதான்.
இந்த சேர்ப்பு கூட்டணி கட்சி திமுகவுக்கு மட்டுமல்ல,காங்கிரசு தலைவி சோனியாவுக்கும் கூட அப்போது தெரியவில்லை.


காரணம் இது ஜெயராம் ரமேஷ் துறை சார்பான வழக்கமாக வெளியிடும் பட்டியலில் சேர்த்து விடப்பட்டதுதான்.ஜல்லிக்கட்டு தடை விவகாரத்துக்குப்பின்னர்தான் இந்த சேர்ப்பு கண்டு பிடிக்கப்பட்டது.

அதுவரை வழக்கமான அரசானைதானே என்று கவனக்குறைவாக கண்டுகொள்ளப்படவில்லை.

பிரதமர் மோடி - முதல்வர் பன்னீர் செல்வம் இடையேயான சந்திப்பின்போது, தமிழக மக்களின் பெருகி வரவும் அமைதியான போராட்ட உணர்வுகளை,போராட்டங்களை  தமிழக முதல்வர் விளக்கி வேறு வழியில்லை என்ற பின்னர்தான்,தமிழக ஆளுநரும் அதை வழி மொழிந்த பின்னரே  பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் ஜல்லிக்கட்டு அவசர சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை யாக செயல்பட சமமதித்தார்.

இதன் வெளிப்பாடாக, தமிழகத்தில் நிலவும் சூழல் காரணமாக ஜல்லிக்கட்டு வழக்கில் அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்ப்பை வெளியிட கூடாது சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 


இந்த கோரிக்கை ஏற்கப்பட்டதாக அட்வகேட் ஜெனரல் முகுல் ரத்தோகி தெரிவித்தார்.மேலும், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசர சட்டம் பிறப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிருந்து காளையை நீக்கம் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய சட்ட வரைவை தமிழக அரசு தயாரித்து மத்திய அமைச்சகங்களின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. 

காரணம் அப்பட்டியலில் காளை இருக்கும் வரை பீட்டா போன்ற அமைப்புகள் ஜல்லிக்கட்டை எதிர்க்கும் வழக்குகளுக்கு உசச நீதிமன்றம் ஆதரவாகவே தீர்ப்பை தரும்.
இந்த சட்ட வரைவுக்கு முறையே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, சட்ட துறை, உள்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்தன. 



இதையடுத்து சட்ட வரைவு  குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது .

ஏற்கனவே "அந்தந்த பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காததால்தான் நாடு முழுக்க அமைதியில்லா சூழல் நிலவுகிறது" என்று கூறிய குடியரசுத்தலைவர்  பிரணாப் முகர்ஜி தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 குடியரசுத்தலைவர் அனுமதிக்கு பின்னர்,அதை மேற்கோள் காட்டி  தமிழகஆளுநர்  வித்யாசாகர் ராவ் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் வழங்குவார். 

இதற்காகவே  தமிழக ஆளுநர்(பொறுப்பு)  வித்யாசாகர்  சென்னை வருகிறார்.

அவசர சட்டம் நாளை அமலுக்கு வரும் நிலையில் இருநாட்களில்  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் .


தமிழக மக்கள் ,மாணவர்கள்  இளைஞர்களின் எழுச்சி போராட்டம் வெற்றிகோட்டை தொட்டுள்ளது.
ஆனால் இந்த உணர்வை காவிரி பிரசினை ,அந்நிய மயமாக்கல்,சரியான தயார்படுத்துதல் இல்லாமல் பணமதிப்பு நீக்கத்தால் உண்டான இறப்புகள்,வார,வாரம் பெட்ரோல் விலை உயர்வு,விவசாயிகள் தற்கொலைகளுக்கு எதிராக காட்டினால் நாடு எப்படியோ முன்னேறியிருக்கும்.

 ஆனாலும் இந்த ஒற்றுமை,வன்முறையற்ற அமைதியான  போராட்ட உணர்வு மேற்கண்ட உணர்வுகளால் பாதிக்கப்பட்டு  குமுறியவர்களின் வெளிப்பாடுதான் அது ஜல்லிக்கட்டாக பாய்ந்து வந்துள்ளது என்பதையும் உணர முடிகிறது.

மேலும் இந்த போராட்ட களம் ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனமான ,மக்கள் நலனுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை தரும் களமாக அமைந்து விட்டது என்பதை மறுக்க முடியாது.

======================================================================================
ன்று,
ஜனவரி-21.

  • க்யூபெக் கொடி நாள்
  • அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது(1925)
  • உலகின் முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது(1954)
  • இந்தியாவின் திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன தனி மாநிலங்களாக்கப்பட்டன(1972)

======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?