"விட்டோடி"

 மருத்துவக் கட்டமைப்பு

தமிழ் நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.


தமிழ்நாடு மருத்துவ சேவை கழக அலுவலகத்தில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரகாஷ்ஜி அபித்கர், சுகாதாரத்துறை இணை அமைச்சர் மேகனா போர்டிகர் மற்றும் குழுவினர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து தமிழ்நாடு மருத்துவத்துறை கட்டமைப்பு பற்றி கேட்டறிந்தனர்.

பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-


மகாராஷ்டிரா மாநிலத்தின் பொது சுகாதாரத்துறையின் அமைச்சரும், இணை அமைச்சரும், பெரு மதிப்பிற்குரிய பிரகாஷ்ஜி அபித்கர், மேகனா போர்டிகர் ஆகிய இரு அமைச்சர்களும் அம்மாநிலத்தின் சிறப்பு பொது சுகாதாரத் துறையின் அலுவலர்கள் பெருமதிப்பிற்குரிய மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்ரீகர் பர்தேசி போன்ற பன்னிரெண்டு உயர் அலுவலர்களோடு தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.


இரு நாள்கள் பல்வேறு இடங்களில் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு என்பது 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் 2 பன்னோக்கு மருத்துவமனைகளையும், 8,713 துணை சுகாதார நிலையங்களையும், 500 நகர்புற நலவாழ்வு மையங்களையும் கொண்டிருக்கிற ஒரு மகத்தான மருத்துவக் கட்டமைப்பு.

இந்த கட்டமைப்புகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருடைய சீரிய வழிகாட்டுதலின்படி, கடந்த 4 ஆண்டுகளாக மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48, இதயம் காப்போம், பாதம் பாதுகாப்போம், நடப்போம் நலம்பெறுவோம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், மக்களைத்தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் குறித்தான விளக்கங்கள் எல்லாம் அவர்களுக்கு நம்முடைய துறையின் உயர் அலுவலர்கள் விளக்கியிருக்கிறார்கள்.


2 அமைச்சர்கள் கொண்ட இந்த குழுவானது, நேற்றைக்கு நந்திவரத்தில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்த்திருக்கிறார்கள். தொடர்ந்து காஞ்சிபுரத்தின் மாவட்ட தலைமை மருத்துவமனையை பார்த்திருக்கிறார்கள். இன்று சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் மருத்துவ சேவையை பார்த்திருக்கிறார்கள். அதேபோல் தற்போது தாய் மற்றும் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனை எழும்பூரில் அதையும் பார்த்திருக்கிறார்கள்.


TNMSC என சொல்லப்படுகிற தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் இதனுடைய செயல்பாடு குறித்தும் கேட்டறிந்திருக்கிறார்கள். அந்த வகையில் இரு அமைச்சர்கள் தலைமையிலான இந்த குழுவினர் தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பினை கடந்த 2 நாட்களாக சுற்றிப்பார்த்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார அமைப்பு, கொள்முதல், விநியோகம் மற்றும் மருத்துவ சேவையை வலுப்படுத்தும் விதம் போன்ற சிறந்த நடைமுறைகள் மருத்துவ திட்டங்களை பற்றிய தொகுப்புகளை பெற்றும் அவர்களது மாநிலத்தில் நடைமுறை படுத்தவிருக்கிறார்கள்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வேங்கைவயல்  "விட்டோடி"
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர் முரளி ராஜா வீட்டில் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை வேங்கைவயலில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

suran
அதில், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த காவலர்கள் முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பஞ்சாயத்து தலைவரின் கணவரைப் பழிவாங்கும் பொருட்டு, வதந்தியைப் பரப்பிவிட்டு பின்னர் குடிநீரில் மனித கழிவு கலந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் முதல் குற்றவாளி என சேர்க்கப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, அதன் பின்னர் பணிக்கு வராமல் தலைமறைவானதால் அவரை விட்டோடி என அறிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

அதன்படி, காவலர் முரளி ராஜா வீட்டின் வாசலில் குறிப்பு ஆணையை போலீசார் ஒட்டி உள்ளனர். 


இந்தியைத் திணிக்கவே 

இந்(தி)க் கல்விக் கொள்கை !

தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கம் இந்தியைத் திணிப்பது அல்ல என்றும், தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டம் என்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாட்டு மக்கள் காதில் பூ சுற்ற நினைக்கிறார். வேண்டுமென்றே தமிழ்நாட்டில் சிலர் அரசியல் செய்கிறார்களாம். மாணவர் மத்தியில் சமச்சீரான போட்டித் தளத்தை அவர் உருவாக்கப் போகிறாராம். இந்தி மட்டுமல்ல; எந்த மொழியையும் யார் மீதும் திணிக்க மாட்டார்களாம். இப்படி எல்லாம் சொல்வதன் மூலமாக 'தர்மேந்திரராக' தன்னைக் காட்டிக் கொள்ள நினைக்கிறார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசானது கல்வியை வளர்க்க தேசியக் கல்விக் கொள்கையைக் கொண்டு வரவில்லை. இந்தியைத் திணிக்கவே அதனைக் கொண்டு வருகிறது.

“புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, “கல்விச் சிறந்த தமிழ்நாட்டை” நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூக நீதி மற்றும் சம நீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை!” என்று இப்படி ஒரு கல்விக் கொள்கை வரப் போகிறது என்பதை உணர்ந்து 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதியன்று அறிக்கை கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கல்வியாளர் குழுவை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்தனர். இக்குழுவின் அறிக்கை 28.7.2019 அன்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக நேரில் கொண்டு வரப்பட்டது. சென்று தரப்பட்டது. 'தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது' என்று அப்போதும் பொய்யாக நடித்தது ஒன்றிய அரசு.

இப்படி வாய் வார்த்தைக்குச் சொல்வதைக்கூட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் எதிர்த்தன. ஏனெனில் அவை முழுக்க முழுக்க இந்தியாவில் செயல்படுபவை. உடனே, “ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி என்பது கட்டாயமில்லை. மாநில அரசுகள் விருப்பத்துக்கு ஏற்ப முடிவு செய்யலாம்” என்று அப்போதைய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறினார். தாய்மொழிக்கு முக்கியத்துவம் என்பதை தொடக்கத்திலேயே மறுத்துவிட்டது ஒன்றிய அரசு.

2021 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்ட பா.ஜ.க. அரசு, தமிழில் முதலில் வெளியிடவில்லை. இதுதான் தமிழுக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவம் ஆகும்.

இந்தக் கல்விக் கொள்கையில் தமிழ் வழியிலான வகுப்புகள் பற்றிக் கூறப்படவில்லை. தமிழ் மொழி சிறப்புப் பாடமாகவோ, முக்கியப் பாடமாகவோ பள்ளிகளில், கல்லூரிகளில் கற்பிக்கப்படும் என்றும் கூறப்பட வில்லை. 'அடிப்படையிலான தமிழ்' என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல் மும்மொழிக்கொள்கை என்ற சொல் 7 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மும்மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், மாநிலங்கள் பிராந்தியங்கள், மற்றும் மாணவர்களின் விருப்பப்படி பள்ளி மாணவர்களுக்கும்மொழிக் கொள்கை அடிப்படையில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் என்றும் - மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மும்மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் - மாணவர்களிடையே பலமொழி ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் - பள்ளி மற்றும் உயர்கல்வி நிலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் மும்மொழிக் கொள்கையில் ஒருமொழியாக சமஸ்கிருதம் இருக்கும் என்றும் அது இருக்கிறது.

ஆங்கிலத்தை அகற்றி அந்த இடத்தில் இந்தியை உட்கார வைப்பதே பாஜகவின் திட்டம் - அம்பலப்படுத்திய முரசொலி !

இந்தியை வளர்க்கத் தடையாக இருப்பது ஆங்கிலம்தான். ஆங்கிலத்தை அகற்ற அவர்களுக்கு ஒரு திட்டம் தேவை. அதற்காகத்தான் தாய்மொழியை வளர்க்கிறோம் என்று கிளம்புகிறார்கள். ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியை உட்கார வைப்பதும், இந்தியை உட்கார வைத்த இடத்தில் சமஸ்கிருதத்தை உட்கார வைப்பதும்தான் அவர்களின் நோக்கம். ஆங்கிலத்தை அகற்றுவதற்கு ஒரு தந்திரம் தேவை. அதற்குத்தான் தாய்மொழி பம்மாத்து. தாய்மொழியில் படிக்கலாமே என்று சொல்லி ஆங்கிலத்தை அகற்றுவது இதன் சதித்திட்டம் ஆகும். தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்கிறார்கள். தாய் மொழிக் கல்வியைக் கற்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறார்களா? இல்லை.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பாடம் உள்ளது. உண்மைதான். ஆனால் தமிழ் கற்பிக்க தமிழாசிரியர்கள் கிடையாது. இப்படித்தான் இருக்கிறது அவர்கள் தாய் மொழியை வளர்த்தெடுக்கும் லட்சணம். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி ஆகியவை கட்டாய மொழிகளாகவும், 6 முதல் 3 ஆகிய வகுப்புகளில் அந்தந்த மொழிகள் விருப்பப் பாடமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் தமிழ் கற்றுத் தர ஒரு தமிழாசிரியர் கூட இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தி ஆசிரியர்களாக 100 பேர் உள்ளனர். சமஸ்கிருத ஆசிரியர்களாக 53 பேர் உள்ளனர். தமிழ் ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. தர்மேந்திர பிரதான் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?