தரமற்ற மருந்துகள்

  ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஊசி மூலம் செலுத்தப்படும் 9 மருந்துகள் தரமற்றவை என தெரிய வந்துள்ளது என அமைச்சர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தையில் இருந்து திரும்பப் பெ

றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், தரமற்ற மருந்துகளை தயாரித்த நிறுவனங்களில் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் தினேஷ் குண்டுராவ் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இந்த நிறுவனங்கள் சரியான உற்பத்தி நடைமுறைகளை (GMP) பின்பற்றுகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனவரி 1 முதல் பிப்ரவரி 16 வரை கர்நாடக மாநில ஆய்வகங்களில் நடத்தப்பட்ட தரப் பரிசோதனைகளில் ஊசி மூலம் செலுத்தக் கூடிய 9 மருந்துகள் தரமற்றவை என்று தெரிய வந்ததை அடுத்து, தினேஷ் குண்டுராவ் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

suran
தரமற்றவை என கண்டறியப்பட்ட மருந்துகளின் விவரங்களையும், தொகுதி எண்களையும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தப் பட்டியலில், பெல்லாரி மாவட்டத்தில் ஐந்து இளம் தாய்மார்களின் மரணத்திற்கு காரணமாக மேற்கு வங்க மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பஸ்சிம் பங்கா பார்மாசூட்டிகல்ஸ் தயாரிப்புகள் இல்லை.

ஆய்வக அறிக்கைகளுக்குப் பிறகு, கர்நாடகாவில் உள்ள சந்தைகளில் இருந்து இந்த மருந்துகளை திரும்பப் பெறவும், அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டார். "இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பிற மருந்துகள் பிற மாநிலங்களில் விற்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த ஊசி மருந்துகள் தீவிர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன. எனவே நோயாளிகளுக்கு அதிக ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த நிறுவனங்களால் விற்கப்படும் அனைத்து தயாரிப்புகளையும் இந்தியா முழுவதும் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

suran

மேலும் இந்த நிறுவனங்கள் சரியான தயாரிப்பு நடைமுறைகளை பின்பற்றுகிறதா என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஆய்வு செய்யும் வரை இனி மருந்துகளை விற்க அனுமதிக்க கூடாது" என்று நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில் தினேஷ் குண்டுராவ் குறிப்பிட்டுள்ளார்.

தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகள், குறிப்பாக நோயாளிகளுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அனைத்து மாநிலங்களும் மத்திய ஆய்வகங்களும் ஒருவருக்கொருவர் எச்சரிக்கைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் மத்திய அமைச்சருக்கு முன்மொழிந்தார்.

தரப் பரிசோதனையில் தோல்வியடையும் மருந்துகள் குறித்து மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எச்சரிக்கை செய்ய ஒரு அமைப்பு தேவை என்றும் கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பரிந்துரைத்தார்.

செயற்கை இனிப்புகள் 



2023 ஆம் ஆண்டில் , உலக சுகாதார மையத்தின் இன்டர்நேஷனல் ஏஜன்சி ஃபார் ரிசர்ச் ஆன் கேன்சர் (IARC) நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்ட செயற்கை இனிப்பான அஸ்பார்டேம் 'மனிதர்களுக்கு சாத்தியமான புற்றுநோயை உண்டாக்கக்கூடியது ' என்று கண்டறியப்பட்டுள்ளது.

suranஇது ஃப்ளூக் என்பவரால் 1965 ஆம் ஆண்டில் அல்சர்களுக்கான சிகிச்சையை கண்டுபிடிக்கும் முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.அஸ்பார்டேம் ஆனது பொதுவாக டயட் சோடாக்கள், சூயிங்கம் மற்றும் டேபில்டாப் ஸ்வீட்டனர் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது இதய ஆரோக்கியம் குறித்து ஒரு புதிய ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.அஸ்பார்டேம் ஆனது ஃபைனிலாலனைன் மற்றும் அஸ்பார்டிக் ஆகிய இரண்டு அமினோ ஆசிட்களின் கலவையாகும், இது சர்க்கரையை விட 200 மடங்கு இனிமையானது மற்றும் நியூட்ராஸ்வீட், ஈக்வல் மற்றும் சுகர் ட்வின் என்ற பிராண்ட் பெயர்களில் விற்கப்படுகிறது. 

இருப்பினும், அதனை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உங்கள் இதய ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.விலங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில், இந்த செயற்கை இனிப்புகள் ஆனது இன்சுலின் அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. 

அதன் காரணமாக காலப்போக்கில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 12 வாரங்கள் எலியுடன் நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் 0.15% அஸ்பார்டேம் கொண்ட உணவுகள் எலிகளுக்கு வழங்கப்பட்டன, இதில் தினமும் மூன்று டயட் சோடா கொடுக்கப்பட்டுள்ளது.

அஸ்பார்டேம் கொண்ட உணவுகளை சாப்பிட்ட எலிகள், அவற்றின் ஆர்ட்டரிஸ்களில் அதிக அளவிலான ஃபாட்டி பிளேக்குகள் மற்றும் அதிக அளவு வீக்கத்தைக் கொண்டிருந்தன, இது இதய நோய்க்கு முக்கிய பங்களிக்கிறது. ஆர்ட்டரிஸ் வழியாக இரத்த ஓட்டம் சீராகவும், வலுவாகவும் இருப்பதால், இதயம் பம்ப் செய்யும் போது பெரும்பாலான இரசாயனங்கள் விரைவாக வாஷ் செய்யப்படும் என்று காவ் கூறியுள்ளார்.ஆச்சரியப்படும் விஷயமாக CX3CL1 ஆனது இரத்த நாளங்களின் இன்னர் லீனியரின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

 அது அங்கு நோயெதிர்ப்பு செல்கள் கடந்து செல்லும்போது அதனை பிடித்துக் கொள்ளும். இதில் சிக்கிய நோயெதிர்ப்பு செல்கள் இரத்த நாளங்களின் வீக்கத்தை தூண்டுவதற்கு காரணமாகின்றன.

 இதனையடுத்து அஸ்பார்டேம் கொடுக்கப்பட்ட எலிகளின் நோயெதிர்ப்பு செல்களில் ஒன்றில் இருந்து CX3CL1 ரீசெப்டர்கள் அகற்றப்பட்டபோது, ​​பிளேக் குவிப்பு ஏற்படவில்லை. 

இதனையடுத்து ஆராய்ச்சியாளர்கள் குழு இப்போது இந்த முடிவுகளை மனிதர்களிடம் ஆய்வு செய்து பார்க்க விரும்புகிறது.


பரபரப்பான உலகத்தில் பலரும் பிஸியாக இருக்கிறார்கள். சிலருக்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிற அளவுக்குகூட நேரமில்லாமல் இருக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் அரை மணி நேரமாவது நடை பயிற்சி செல்ல வேண்டும்.

 ஆனால், அரை மணி நேரம் கூட நேரமில்லை என்று சொல்பவர்கள் உண்டு. 

 நான் ரொம்ப பிஸியானவன், அதனால, ஒரு நாளைக்கு நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று சொன்னால் அது என்னால் முடியாது என்று சொல்கிறவராக இருந்தால், அமெரிக்க இருதயவியல் சங்கத்தினர் என்ன சொல்கிறார்கள், என்றால் ஒரு நாளைக்கு 10 நிமிடம் இதை செய்தால், நன்றாக செயல்படும் என்கிறார்கள்.

 அது என்ன உடற்பயிற்சி என்றால், அது வேறு ஒன்றும் இல்லை. ஸ்கிப்பிங்தான்.

 மூட்டு வலி இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு 10 நிமிடம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யுங்கள். லேசாக தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரியுங்கள்.

 முதலில் 10 எண்ணிக்கையில் ஸ்கிப்பிங் செய்யுங்கள். பிறகு, ரெஸ்ட் விடுங்கள். 

பிறகு, 10 என்ற எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 20, 30 என்று அதிகரியுங்கள். 

ஆனால், ஒரு நாளைக்கு 10 நிமிடம் செய்யுங்கள் போதும். உங்கள் இதயம்  நல்ல முறையில் இயங்கும். 
















இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?