ஏராளமான கடன்

தோல்வியில்  ஹாட்ரிக்

டெல்லியில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத காங்கிரஸ், பூஜ்ஜியத்தில் ஹாட்ரிக் அடித்துள்ளது.

டெல்லியில் தொடர்ந்து 3 முறை ஆட்சி அமைத்த காங்கிரஸ், தற்போது தொடர்ந்து 3-வது முறையாக வொயிட் வாஷ் ஆகியுள்ளது. 1998-ஆம் ஆண்டு இறுதியில் டெல்லி முதலமைச்சராக ஷீலா தீட்சித் பதவியேற்றார். 

suran
அவர் 2013 வரை பதவி வகித்தார். 2010-ஆம் ஆண்டு ஷீலா தீட்சித்தின் 3-வது ஆட்சிக் காலத்தில் தான் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. உலகத் தரத்தை மிஞ்சும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தாலும், ஊழல் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெறும் 8 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது.

இந்தத் தேர்தல் தான் காங்கிரஸ் டெல்லியில் வெற்றி பெற்ற கடைசித் தேர்தல் ஆகும். அதன்பின்னர் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நிறுத்தியது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியையே சந்தித்தது. காங்கிரசின் வாக்கு சதவிகிதம் 9.7 சதவீதமாக குறைந்தது. இதேபோல் 2020-ஆம் ஆண்டிலும் 66 தொகுதிகளில் வேட்பாளர்களை காங்கிரஸ் களம் இறக்கியது.

அப்போதும் அக்கட்சியின் வேட்பாளர்கள் 63 பேர் டெபாசிட் இழந்தனர். வாக்கு சதவிகிதமும் 4.26-ஆக சுருங்கியது. தற்போதைய தேர்தலில் 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால், ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றாமல் ஹாட்ரிக் தோல்வியை காங்கிரஸ் பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் வாக்கு சதவிகிதம் மட்டும் 6.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆனால் இங்கு அதைவிட ஒரு கட்சி சாதனை செய்துகொண்டே ருக்கிறது .

ஒரே இடத்தில்
ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக ஐநா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
suran

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கும், அரசுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இதில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் ஒடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றனர். மேலும் சரண் அடைந்தவர்களை அரசு சிறைக் கைதிகளாக அடைத்து தண்டனை கொடுத்து வருகிறது.

இருப்பினும் கிளர்ச்சி குழுக்கள் அவ்வப்போது அதிரடி தாக்குதல்களை நடத்தி அரசுக்கு தொடர்ந்து பிரச்னை கொடுத்து வருகிறது. 

 இந்நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி எம் 23 என்ற கிளர்ச்சி குழுவினர் கோமா என்ற நகரத்தை கைப்பற்றினர்.அப்போது அங்கிருந்த மிகப்பெரும் சிறை உடைக்கப்பட்டதில் அதிலிருந்த ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பிச் செல்லத் தொடங்கினர். அந்த நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் சிறைக் கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

150க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆண் கைதிகள் சிறையை தீயிட்டு கொளுத்தியதில் அதில் இருந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உயிருடன் தீயில் எரிந்து கருகினர். இந்த விபரங்களை ஐநா வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோமா நகரில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். இந்த நகரை எம் 23 கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றுவதற்கு ரூவாண்டா நாடு உதவி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோமா நகரத்தை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலின்போது மொத்தம் 2900 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 2000 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மற்ற 900 சடலங்கள் ஆங்காங்கே சிதைந்து கிடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏராளமான கடன் 

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரின் திருமண விஷயத்தில், அவரது சிபில் ஸ்கோர் (CIBIL Score) வில்லனாக மாறிவிட்டது.

மணமகளின் மாமா ஒருவர் மணமகனின் CIBIL ஸ்கோர் என்ன என்று பார்க்க விரும்பியுள்ளார். திருமணத்தை இறுதி செய்வதற்கு சற்று முன்பு சிபில் ஸ்கோரைப் பார்க்க வற்புறுத்தியுள்ளனர். இதனால், நடக்க இருந்த கல்யாணமே நின்றுபோனது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் முர்திசாபூரில் நடந்தது.
இரு தரப்பினரும் திருமண பந்தத்தில் இணைய உடன்பட்டனர். மற்ற விவரங்களைப் பற்றி விவாதிக்க விரும்பினர். அந்த நேரத்தில் பெண்ணின் மாமா மணமகனின் CIBIL ஸ்கோரைக் பார்க்க வேண்டும் என்று கேட்டதும் நிலைமையை தலைகீழாக மாற்றிவிட்டது.
article_image4

மாமா பார்த்ததில் மணமகனின் சிபில் ஸ்கோரைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். மணமகனின் பெயரில் வெவ்வேறு வங்கிகளில் பல கடன்கள் இருந்ததைக் கண்டு பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த இளைஞரின் CIBIL ஸ்கோரும் குறைவாக இருந்திருக்கிறது. குறைந்த CIBIL ஸ்கோர் மோசமான கடன் வரலாற்றைக் குறிக்கிறது. பொதுவாக இது நிதி சார்ந்த உறுதியற்ற தன்மையைக் குறிக்கிறது.

article_image5

இந்த கட்டத்தில், மணமகளின் மாமா திருமணத்திற்கு எதிராகப் பேச ஆரம்பித்தார். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவர், தனது வருங்கால மனைவிக்கு நிதிப் பாதுகாப்பை வழங்க முடியாது. எனவே தனது மருமகளுக்குப் பொருத்தமான ஜோடியாக இருக்க மாட்டார் என்று அவர் வாதிட்டார். பெண் வீட்டார் அனைவரும் அதையே கூறி, திருமண சம்பந்தத்தை முறித்துக்கொள்வதாகத் தெரிவித்துவிட்டனர்.

CIBIL ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் மூன்று இலக்க எண்ணாகும். இது 300 முதல் 900 வரை இருக்கும். அதிகமாக இருந்தால் நல்ல நிதி நிர்வாகத்தைக் குறிக்கும். அதே வேளையில், குறைந்த ஸ்கோர் இருந்தால் மோசமான நிதி நெருக்கடியில் இருப்பதைக் குறிக்கும். ஒரு நபரின் கடன் தகுதியை தீர்மானிக்க வங்கி அதிகாரிகள் சிபில் (CIBIL) ஸ்கோர் எவ்வளவு இருக்கிறது என்பதை முக்கியக் காரணியாக பயன்படுத்துகின்றனர். கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது போன்ற காரணங்களால் சிபில் ஸ்கோர் குறைகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?