14 நாடுகளை கடக்கும் நெடுஞ்சாலை

 ஒரு வளைவு கூட கிடையாது... 14 நாடுகளை கடந்து செல்லும் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை எங்க இருக்கு தெரியுமா?

ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் நமக்கு பிடித்த பாடலை கேட்டபடி வாகனத்தில் செல்வது எவ்வளவு ரம்மியமாக இருக்கும்.


இதுபோன்ற பயணங்களை அனுபவிக்க விரும்பும் நபர்களுக்கு ஏற்ற நெடுஞ்சாலை ஒன்றைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம்.

பான்-அமெரிக்க நெடுஞ்சாலை என்பது மெக்ஸிகோ, குவாத்தமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா மற்றும் பனாமா போன்ற வட அமெரிக்காவின் முக்கிய நாடுகளின் வழியாக செல்லும் தொடர்ச்சியான பாதை ஆகும். 

இது கொலம்பியா, ஈக்வடார், பெரு, சிலி மற்றும் அர்ஜென்டினா போன்ற தென் அமெரிக்க நாடுகளின் வழியாகவும் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறது. குறிப்பாக, பான்-அமெரிக்க நெடுஞ்சாலை உலகின் மிக நீளமான மோட்டார் சாலையாக கின்னஸ் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையாக கருதப்படும் இந்த பான்-அமெரிக்க நெடுஞ்சாலை பற்றிய அனைத்து விவரங்களையும் இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

அலாஸ்காவின் ப்ருதோ பேயிலிருந்து தொடங்கும் பான்-அமெரிக்க நெடுஞ்சாலை, பயணிகள் செல்லும் பாதையைப் பொறுத்து சுமார் 30,000 கிமீ நீளம் கொண்டது.

 அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் அதிக பரப்பளவு மற்றும் சாலைகளின் எண்ணிக்கை காரணமாக இந்த நெடுஞ்சாலைக்கு பல ஆப்ஷன்கள் உள்ளன. அடர்ந்த காடுகளில் இருந்து வறண்ட பாலைவனங்கள் வரை பல்வேறு காலநிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் வகைகளைக் கடந்து செல்லும் பான்-அமெரிக்க நெடுஞ்சாலை உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையாக இருப்பதுடன், உலகின் மிகவும் பிரபலமான நெடுஞ்சாலைகளில் ஒன்றாகவும் உள்ளது. 

இந்தச் சாலையில் பயணம் செய்யும் போது பல்வேறு வானிலை மற்றும் சுற்றுச்சூழலை நாம் அணுபவிக்க முடியும்.

நமக்கு கிடைத்த செய்தி அறிக்கைகளின் படி பார்த்தோமென்றால், பான்-அமெரிக்க நெடுஞ்சாலை முழுதும் சுறி வந்து ஒரு பயணத்தை முடிக்க தனிநபர்களுக்கு பொதுவாக 60 நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

 இருப்பினும் ஒருவருடைய வாகனத்தின் வேகத்தின் அடிப்படையில் இந்தக் கால அளவு மாறுபடவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக, கார்லோஸ் சான்டாமரியா என்ற நபர் இந்த நெடுஞ்சாலை பயணத்தை முடிக்க 117 நாட்கள் எடுத்துக்கொண்டார்.

மேலும், பெரும்பாலான பான்-அமெரிக்க நெடுஞ்சாலை பாதைகள் ஸ்பானிய மொழி பேசும் நாடுகளின் வழியாக செல்கிறது. 

ஆகவே இந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் பயணிகள், சங்கடமில்லாமல் பயணிக்க வேண்டுமென்றால் ஸ்பானிஷ் மொழியைக் கொஞ்சம் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1923-ல் கட்டப்பட்ட பான்-அமெரிக்க நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதன் நோக்கம் வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மாநிலங்களை இணைப்பதாகும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சுமார் 30,000 கிமீ நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில் யு-டர்ன் அல்லது வளைவும் எதுவும் இல்லை என்று சில அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?