எம்.ஜி.ஆர் எல்லாம்

 சும்மா!

சென்னையில் கடும்  பனிமூட்டம் காரணமாக 25 விமான சேவைகள் பாதிப்பு6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டனசெங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் ரயில்கள் தாமதம்.

எங்கள ஆன்டி இந்தியன் -னு சொல்றீங்க.. கும்பமேளாவில் உண்மெயில்எத்தனை பேர் செத்தாங்க? -கனிமொழி.எம்.பி,










எம்.ஜி.ஆர் 

எல்லாம் 

சும்மா!

மிழின விடுதலைக்காகப் போராடியவர் தந்தை பெரியார்  என்று நேற்று வரையிலும் வீரவணக்கம் செலுத்திக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி இன்று  தமிழின விரோதி என்று பெரியாரை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறது.

  அடுத்து, தமிழீழ விடுதலைக்காக போராடியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்று வீரவணக்கம் செலுத்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது MGR  ஜுஜூபி என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஈழத்தமிழர் பிரச்சனையை முன் வைத்துதான் தொடங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி.  அதனால்தான்  ’ஈழத்தமிழர் நலன் காக்க உதவிக் கரம் நீட்டியவர் மக்கள் திலகம்’ என்று எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டத்தில் மணிக்கணக்கில் பேசினார் சீமான்.  

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பிரச்சாரமும் செய்தவர் சீமான்.  

இப்போது அவர் பெரியாருக்கு எதிராக பேசி வருவது ‘டெல்லி அசைன்மெண்ட்’ என்கிறார்கள் அரசியல் தலைவர்கள்.  சீமானின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக உள்ளார் ரவீந்திரன் துரைசாமி என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.  

தீவிர பாஜக ஆதரவாளரான ரவீந்திரன் துரைசாமி, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி ஒதுங்கிச்சென்ற ரஜினிகாந்தை வம்படியாக அரசியலுக்குள் இழுத்து அதன் மூலம் பாஜகவுக்கு பலம் சேர்க்க பலவித முயற்சிகள் செய்து வந்தார்.  

கட்சி வேண்டாம் ஆளை விடுங்க சாமி என்று ரஜினிகாந்த் சொன்னதும், பாஜகவுக்கு ஆதரவுக்குரலாவது கொடுங்க என்று ரவீந்திரன் துரைசாமி குட்டிக்கரணம் அடித்துப்பார்த்தும் பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது.

இப்போது சீமானை பாஜக பக்கம் தள்ளிக்கொண்டு போயிருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி.  பாஜகவில் கொடுத்த  அசைன்மெண்ட் படிதான் பெரியாரை எதிர்த்துக் கொண்டிருக்கிறார் சீமான் என்று சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

 இவர்தான் சீமானை அழைத்துச் சென்று ரஜினியை சந்திக்க வைத்து சலசலப்புகளை ஏற்படுத்தினார். பிரதமர் மோடியே எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசி வீடியோவே வெளியிட்டார்.  

ஆனால், ரவீந்திரன் துரைசாமியோ ’’MGR  ஜுஜூபி – NTR தான் பெரிய ஆள்’’

தவெகவுடன்  கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற சீமான் கனவில் விஜய் மண்ணை அள்ளிப்போட்டு  விட்டதால்தான் தவெகவின் கொள்கைத் தலைவராக இருக்கும் பெரியாரை அதிகம் விமர்சிக்கிறார் சீமான் என்ற விமர்சனமும் உள்ளது.   

அதற்கேற்றார் போல், எம்.ஜி.ஆரை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறார் விஜய்.  இதனால்தானோ என்னவோ தெரியவில்லை நாம் தமிழர் கட்சிக்கு அடுத்த எரிச்சல் எம்.ஜி.ஆர்.  வந்திருக்கிறது.


’’MGR  ஜுஜூபி – NTR தான் பெரிய ஆள்’’ என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.  எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி  சாதித்ததை பார்த்துதான் கட்சி தொடங்கினார் என்.டி.ஆர்.    கட்சியின் பெயரை தெலுங்கு தேசம் என்று வைக்கச்சொன்னதும் எம்.ஜி.ஆர்.தான்.  

 எம்.ஜி.ஆர்தான் தனக்கு அரசியல் முன்னோடி என்று சொன்னவர் என்.டி.ஆர்.  ஆனால், ரவீந்திரன் துரைசாமி MGR  ஜுஜூபி – NTR தான் பெரிய ஆள் என்று பேசுவது அபத்தம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

டி.ஜி.பி. விளக்கம்!

 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNUSRB) குளறுபடிகளைச் சுட்டிக்காட்டியதற்காகவே, தன்னை கொலை செய்ய தன் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது என ஏ.டி.ஜி.பி.  கல்பனா நாயக் பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “இந்த சம்பவம் நடந்த அன்றே எப்2 எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


இது தொடர்பாகத் திருவல்லிக்கேணி துணைக் காவல் ஆணையர், தடயவியல் நிபுணர்கள், மின்சார வாரியம் (TANGEDCO), தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதிக் கழக நிபுணர்கள், புளூ ஸ்டார் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விரிவான விசாரணை நடத்தினர்.


இதையடுத்து, இந்த வழக்கு சென்னை நகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, கூடுதல் டி.சி.பி., விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 31 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.


மேலும் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறியத் தடய அறிவியல், தீயணைப்பு சேவைகள் மற்றும் மின் துறைகளின் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. தற்போது நிபுணர்களின் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.


அதில் செப்பு கம்பிகளில் ஷார்ட் சர்க்யூட் இருப்பதற்கான ஆதாரங்கள் காணப்பட்டதாக தடயவியல் நிபுணர்களின் அறிக்கையில்கருத்துதெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், வேண்டுமென்றே தீ வைப்பதற்கான சதிச் செயல் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது”எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பரப்புரை ஓய்ந்தது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஒய்ந்தது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

அதிமுக போட்டியிடவில்லை. களத்தில்46 வேட்பாளர்கள் உள்ளனர்.


பிரசாரம் செய்து வந்த நிலையில் இன்று மாலையுடன் இந்த தொகுதியிலும் பிரசாரம் ஓய்ந்தது.


டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தம் 70 தொகுதிகளுக்கு பிப்.,5 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 


பிப். 8 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.


இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 


இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், காங்கிரஸ் எம்.பி.ராகுல் மற்றும் பிரதமர் மோடி மற்றும் பிற தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர்.


இந்நிலையின் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?