என்னச் செய்யப் போகிறாரோ?
ஜனவரி 31ஆம் தேதி அன்று ஆதவ் அதிமுகவில் இணைய உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் தவெகவில் இணையச் சென்றிருக்கிறார்.
தவெகவில் அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணிகள் பார்க்க இருக்கிறார். இதற்காக அவருக்கு 240 கோடி ரூபாய் பேசப்பட்டிருக்கிறது. பிரசாந்த் கிஷோரை அதிமுகவுக்குள் கொண்டு வந்ததே லாட்டரி அதிபர் மார்ட்டின் தான் என்று கூறப்படுகிறது.
அப்படி இருக்கும்போது ஆதவ் அர்ஜூனா ஏன் அதிமுகவில் இணையாமல் தவெகவில் இணைகிறார். பழனிசாமியுடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
விசிகவில் கட்சி தலைமையை மீறி பல விசயங்களில் மூக்கை நுழைத்தது மாதிரியே அதிமுகவில் பேச்சுவார்த்தையிலேயே தலைமைக்கு அதிருப்தி தரும்படியாக வார்த்தைகள் விட்டிருக்கிறார் ஆதவ்.
இதில் எரிச்சல் அடைந்த எடப்பாடி, இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று முடிவெடுத்து, நிர்வாகிகளிடம் சத்தம் போட, ஆதவ் அதிமுகவில் இணையும் பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிவுக்கு வந்தது என்கிறார்கள்.
அதிமுகவின் ஐடி பிரிவு இணைச்செயலாளராக இருந்து வந்தாலும் பாஜகவில் இருந்தது போன்று தனக்கு அதிகாரம் இல்லை என்று ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில் இருந்து வந்த நிர்மல்குமார், பிரசாந்த் கிஷோர் அதிகவுக்கு தேர்தல் பணிகள் செய்ய வருவது குறித்து எடப்பாடியுடன் பேசியபோது சில கருத்து மோதல்கள் ஏற்பட, எடப்பாடி போட்ட சத்தத்தில் நிர்மல்குமாரும் விஜய்யை தேடி வந்திருக்கிறார்.
விஜய் கட்சியிலும் ஆதவ் அதிகநாள் தாக்குப்பிடிப்பார் என்பது ஐயமே.ஏற்கனவே புஸ்சி ஆனந்த் அங்கு தன்னிடமதான் அதிகாரம் என்றிருக்கிறார்.
ஆதவ் வாய் சும்மா இருக்காது.தலித்தை முதல்வராக்குவது அவர் லட்சியம்.திமுக வை அவர் எதிர்க்க காரணமே அதுதான்.
ஆனால. நடிகர் விஜய்,ஆனந்த் யாருமே தலித் இல்லை.அவரும் கூட.
என்னச் செய்யப் போகிறாரோ?
ஓமந்தூர் ராமசாமிவிடுதலைப் போராட்ட வீரரும், சென்னையின் முன்னாள் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1895ம் ஆண்டு பிப்ரவரி 01ம் தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தார்.
இவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947ம் ஆண்டு முதல் ஏப்ரல் 06, 1949ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.
முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு இவரது மனம் ஆன்மீகத்திலும், சமூக சேவையிலும் நாட்டம் கொண்டது. வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு, சமரச சுத்த சன்மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பல தொண்டு அமைப்புகளை நிறுவினார்.
நேர்மையும், துணிச்சலும் மிக்க அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர், 1970ம் ஆண்டு தனது 75வது வயதில் மறைந்தார்.