படிப்பு அவசியம்

 குளோபல் பிஸினஸ் சம்மிட் 2025 நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக லண்டன் யுனிவெர்சிட்டி காலேஜ் தலைவர் டாக்டர் மைக்கேல் ஸ்பென்ஸ் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன..

குறிப்பாக மைக்கேல் ஸ்பென்ஸ் பேசுகையில், 'நம்முடைய மாணவர்களுக்கு மூன்று விஷயங்களை கற்று கொடுக்க வேண்டும். இயந்திரங்கள் தாமாகவே கொண்டிராத திறன்கள், இயந்திரங்களை எப்படி பயன்படுத்துவது, இயந்திரங்களால் என்னென்ன செய்ய முடியும். சமீபத்தில் ஐஐடி டெல்லி, எய்ம்ஸ் ஆகியவற்றுடன் லண்டன் யுனிவெர்சிட்டி காலேஜ் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
suran

இது மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டு வருவது தொடர்பானது. இதன்மூலம் புதிய சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது. ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. எதை பற்றி கேட்டாலும் பதில் கிடைத்துவிடும். வருங்காலத்தில் எல்லா விஷயங்களையும் செயற்கை நுண்ணறிவு மூலமே கற்று கொள்ளலாம்.

அப்படி இருக்க எதற்காக படித்து பட்டம் பெற வேண்டும் என்று கேட்கின்றனர். அது தவறு. அனைவரும் படித்து பட்டம் பெற வேண்டும். 
எலான் மஸ்க் உடன் பல்வேறு விஷயங்களில் நான் முரண்பட்டு நிற்கிறேன். அதில் ஒன்று தான் பட்டப்படிப்பும், அதுசார்ந்த அறிவும்.


கால்குலேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது, யாரும் கணக்கு பாடம் சொல்லி கொடுப்பதை நிறுத்தி விடவில்லை. 
அதுபோல தான் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கப்பட்ட உடன் நாம் மேலும் கற்க வேண்டும். இயந்திரங்கள் என்ன செய்ய முடியாது, அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று கற்க வேண்டும்.


இப்படித் தான் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகவும் ஆழமாக சிந்திக்கும் திறன்களை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமே நம்மை தொடர்ந்து எல்லா துறைகளிலும் தக்க வைத்து கொண்டே இருக்கும். எல்லைகளை கடந்து சிந்திக்க வேண்டும் என்று மைக்கேல் ஸ்பென்ஸ் தெரிவித்தார்.

மும்மொழிக் கொள்கை
ஏன்  வேண்டாம்?
ஒன்றிய  பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்வி டெல்லியில் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை வலியுறுத்த வேண்டும் என்ற அழுத்தமும் பல்வேறு விதங்களில் அளிக்கப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு அரசிற்கான கல்வி நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு முரண்டு பிடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.


இதன் பின்னணியில் கூட மும்மொழிக் கொள்கையை முன்வைத்து அரசியல் செய்யப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இருமொழிக் கொள்கையில் இன்று வரை உறுதியாக நின்று பல்வேறு துறைகளில் முன்னேறி காட்டியுள்ளது. இப்படியான கருத்துகள் திராவிட மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் இருந்து ஆதாரங்கள் உடன் எடுத்து காட்டப்படுகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான அறிஞர் அண்ணாவின் பேச்சை பகிர்ந்திருக்கிறார். அதில், வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க, எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்து விட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
suran
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம். உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக் கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல. " இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும்” என்று பேரறிஞர் அண்ணா கூறியதாக பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் அண்ணா பேசிய ஆடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், தமிழும், ஆங்கிலமும் தான் பழகு மொழியாக, இணைப்பு மொழியாக இருக்க முடியும். ஹிந்தி மொழியால் இணைப்பை ஏற்படுத்தலாம் என்ற எண்ணமே தவறானது. சீனாக்காரன் படையெடுத்தான். பாகிஸ்தான் படையெடுத்தது. ஹிந்தியில் பேசியா நாமெல்லாம் ஒன்றுபட்டோம். ஒரு வடநாட்டுக்காரர் என்னிடம் சொன்னார். நீங்கள் முயற்சி செய்தால் 3 மாதங்களில் ஹிந்தியை கற்று கொள்ளலாம் என்று.ஆமாம் 3 மாதங்களில் கற்று விடலாம். 
அதற்கு மேலே கற்பதற்கு அந்த மொழியிலேயே என்ன இருக்கிறது என்றேன்.
 ஆனால் தமிழ் மொழி அப்படியில்லை.
 30 ஆண்டுகள் கற்ற பின்னரும் இன்னும் இந்த இடத்தில் பொருள் விளங்கவில்லை என்று கூறுகிறார். இதை கூறுவது மொழி அறிஞர்கள், சாதாரண மனிதர்கள் அல்ல என்று அண்ணா பேசியுள்ளார்.
.மகா {கும்ப}சாவு மேளா


டெல்லி ரயில் நிலையத்தில் நேற்று (பிப்.15) சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 18 உயிரிழந்துள்ளதாக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் கோலாகலமாக நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருகை புரிகின்றனர். அந்த வகையில், கூட்ட நெரிசலுக்கு முன்னதாக, டெல்லியிலிருந்து மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்கு செல்லும் ரயில்களில் ஏற காத்திருந்த பயணிகள் கூட்டம், ரயில் நிலையத்தின் 14 மற்றும் 15வது நடைமேடைகளில் அலை மோதியுள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை சுமார் 10 மணியளவில் வந்த ரயிலில் ஏறக் காத்திருந்த பயணிகள், ரயில் வந்ததும் முண்டியடித்துக் கொண்டு ஏற முற்பட்டுள்ளனர். 

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து, காயமடைந்த நபர்கள் அருகே இருந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரயில்வே போலீசார், தீயணைப்புத்துறையினர், தேசியபாதுகாப்பு மீட்புப் படையினர் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கும்பமேளா வில் புண்ணியத்தை விட இறப்புகள்தான் அதிகம்.


.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?