அவசியம் என்ன?

 'ஒன்றிய' நிதிநிலை அறிக்கை? 

தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சிப்பதும், ஒன்றிய நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதும், ஒன்றிய பா.ஜ.க அரசின் வழக்கமான நடவடிக்கையாக உள்ளது.

இந்தியாவின் முன்னோடி மாநிலமாக இருந்து, பல துறைகளில் பல்லாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வரும் வேலையில், தமிழ்நாட்டை தகர்க்கும் வகையில் பெயர் குறிப்பிடப்படாத ஒன்றிய நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இதனை கண்டிக்கும் வகையில், 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே?

எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து தகவல் சேர்க்க மனம் வரவில்லை?

நெடுஞ்சாலைகள் - இரயில்வே திட்டங்கள் - கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது?

பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கை மட்டும் இந்த ஆண்டு தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்?

தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?

அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்துக்கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் ஒன்றிய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது. விளம்பர மோகம் கொண்ட ஒன்றிய அரசு, திட்ட விளம்பரங்களில் ஒன்றிய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரம் ஒன்றையே பாராட்டு ஒன்றிய அரசு, மக்கள் நலனில் எந்த அக்கறையையும் காட்ட மறுக்கிறது.

வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது.

எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் 'ஒன்றிய' நிதிநிலை அறிக்கை என இதை அழைக்க வேண்டியது அவசியம் என்ன?" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

காரில் விரட்டியது அதிமுக 

சென்னை கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த சந்துரு கைது ஆகியுள்ள நிலையில், அவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஈசிஆர்-இல் நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை துரத்தி, மறித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, சந்தோஷ், தமிழ் குமரன், அஷ்வின் மற்றும் விஷ்வேஸ்வரன் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த 3 பேரை தேடிவந்த நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துருவை நேற்று தனிப்படையினர் கைது செய்தனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சந்துருவை அதிரடியாக தட்டித்தூக்கிய காவல்துறையினர், ஈசிஆரில் உள்ள விடுதியில் வைத்து விசாரணை நடத்தினர்.

முக்கிய குற்றவாளி சந்துரு கைது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன், சந்துரு மீது ஏற்கனவே கடத்தல் மற்றும் பணமோசடி ஆகிய 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறினார்.

2019-ஆம் ஆண்டு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ முடித்த சந்துரு நிரந்தர வேலையின்றி இருந்ததாகவும், தற்போது ஒரு செல்போன் கடையும், வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாகவும் துணை ஆணையர் குறிப்பிட்டார்.

சந்துரு அதிமுககாரார் ,சென்ற காரில் கட்டப்பட்டிருந்த திமுக கொடிக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிய துணை ஆணையர் கார்த்திகேயன், சுங்கச்சாவடிகளை கடக்க மட்டுமே தங்கள் காரில் திமுக கொடியை கட்டியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் காரில் இருந்த இளைஞர்கள் யாரும் மது அருந்தியிருக்கவில்லை எனவும், பாலியல் ரீதியாக அவர்கள் பெண்களை துரத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுகவினர் என கூறிக் கொண்டு அதிமுகவினரே மாறுவேடத்தில் தீய செயல்களில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும், இரவு நேரத்தில் ஏன் அங்கு சென்றனர் என்பதை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் எனவும் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?