கும்ப மேளா முடியட்டும்

சென்னிமலை அருகே சில தினங்களுக்கு முன்பு 20 ஆடுகளை, நாய்கள் கடித்துக்கொன்ற நிலையில், நேற்றிரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 15 ஆடுகளை கூட்டமாகவந்தநாய்கள்கடித்துக்கொன்றுள்ளன.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் கையில் ஆட்டோவில் அமர்ந்து பட்டாக் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இருவர், ரோந்து போலீசாரிடம் சிக்கினர்பிடிபட்ட சந்தோஷ் என்பவர் மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
முட்டம் கிராமத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைதான தங்க துரை, மூவேந்தன் ஆகியோரின் பெற்றோர்களும் முனுசாமி, மஞ்சுளா சிறையில் அடைப்பு.





மகா சாவு மேளா?

சனிக்கிழமை இரவு புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர், ஆனால் உண்மையில் அதிக உயிரிழப்ப இருக்கலாம்.


பலர் காயமடைந்தனர். மகா கும்பமேளாவுடன் தொடர்புடைய உயிரிழப்பிகள் வரிசையில் மற்றொரு சோகம் இது. 

ஜனவரி 29 அன்று, உலகின் மிகப்பெரிய மதக் கூட்டத்திற்கு "ஏழு அடுக்கு பாதுகாப்பு அமைப்பு" மிகவும் பிரபலமாக இருந்தபோதிலும், மேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர்.

புது தில்லி ரயில் நிலையத்தில் என்ன தவறு நடந்தது ? 

அன்று மாலை, நான்கு ரயில்கள் பிரயாக்ராஜுக்குச் சென்று கொண்டிருந்தன, அங்குதான் மேளா நடைபெறுகிறது. பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டது, இதனால் ஏராளமான மக்கள் வேறு ஒரு நடைமேடைக்கு விரைந்தனர். குழப்பம் மற்றும் அலறல்களுக்கு மத்தியில் , குடும்பங்கள் பிரிந்தன, பலர் தரையில் விழுந்து காலில் மிதிக்கப்பட்டனர். என்ன நடந்தது என்பது பற்றிய துயரமான விவரங்களை உயிர் பிழைத்தவர்கள் விவரிக்கின்றனர் . இன்னும் பலர் அன்புக்குரியவர்களைத் தேடி வருகின்றனர்.

நெரிசல் ஏற்படுவதற்கு சற்று முன்பு குறுகிய காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருந்ததாக தரவு காட்டுகிறது . அதிகாரிகள் புள்ளிவிவரங்களிலிருந்து ஒரு குறிப்பைப் பெற்று சிறப்பாகத் தயாராகியிருக்க முடியுமா? பேரழிவைத் தவிர்க்க போதுமான பணியாளர்கள் இருந்தார்களா? தற்போது பல கேள்விகள் மற்றும் சில பதில்கள் மட்டுமே உள்ளன. பொறுப்பை சரிசெய்ய ரயில்வே இந்த விஷயத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கும்ப மேளா முடியட்டும்

ரயில் ஒட்டுநர்கள், ஸ்டேஷசன் மாஸ்டர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட ரயில்வேயின் பிரதான பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் ரயில் தாமதங்கள் ஏற்பட்டு பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்திய ரயில்வேயானது 70,000 ரயில் பாதை கொண்ட உலகின் 4வது பெரிய ரயில்வே அமைப்பாக உள்ளது. ஆனால், இது தற்போது பெயரளவுக்கு மட்டும்தான் என்பது போல் உள்ளது.


கடந்த சில ஆண்டுகளாகவே , ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறை, பணியாளர்கள் பற்றாக்குறை, போதிய பராமரிப்பு பணிகள் இல்லாமை என அடுக்கடுக்கான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.


இதன் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை எப்படியாவது சரி செய்து கொள்ள ரயில்வே நிர்வாகம் முயற்சித்தாலும், பிரச்னை பொதுமக்களுக்கே என்பதை ரயில்வே நிர்வாகம் சிறிதும் உணரவில்லை. ரயில் இருந்தால் ஒட்டுநர் இல்லை, தண்டவாளம் இருந்தால் பராமரிப்பு இல்லை.

ஏற்கனவே தமிழ்நாட்டில் ரயில்வே துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. அதில் கொஞ்சம் கொஞ்சமாக செலவுக்கு தரப்படுவதால், அந்த நிதி ஒரு சில மாதங்களிலேயே செலவாகி விடுகிறது. இதனால் ரயில்வே தளவாடங்களில் போதிய பராமரிப்புப் பணிகள் செய்யப்படாமல் உள்ளது.


சென்னையில் மட்டும் எடுத்துக் கொண்டால் வாரத்திற்கு 4 நாட்கள் புறநகர் ரயில் சேவை பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குறிப்பாக தெற்கு ரயில்வேயில், ஏற்பட்டுள்ள ரயில்வே பணியாளர்கள் பற்றாக்குறையால், வடமாநிலத்தவர்களை ஒப்பந்த அடிப்படையில் வைத்து நாளொன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை ஊதியத்தில் ரயில்வே பணிகள் நடைபெறுகிறது. அவர்களுக்கும் முறையாக பணம் கொடுக்கப்படதாதால்


வடமாநிலத்தவர்களும் சரியாக வேலைக்கு வருவதில்லை என்ற புகாரும் உள்ளது.


ரயில்வே துறைகளில் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறையால், ரயில்வே தளவாடங்களின் பாதுகாப்பு கருவிகளை இயக்க கூட போதுமான பணியாளர்கள் இல்லை என்பதுதான் பெரும்குறை.

லோகோ பைலட் பணியிடங்களை பொறுத்தவரை, ரயில்வே அமைச்சரின் நேரடி ஆணைப்படி 70% பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு, பயணிகளை அலைக்கழிக்கும் நிலையை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.


இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் போதுமான ரயில் ஒட்டுநர்கள் இல்லாத காரணத்தால், கும்பமேளாவிற்காக ரயில்கள் இயக்க, அந்தந்த மண்டல ரயில் ஒட்டுநர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரயில்வே துறையில் 1.8 லட்சம் தொழில்நுட்ப பணியிடங்கள் உட்பட 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது.


ஆனால், காலிப் பணியிடங்கள் குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியதன் பேரில் வெறும் 9000 பணியிடங்கள் மட்டும் நிரப்புவதற்கு அறிக்கை வெளியிட்டது. மீதமுள்ள பணியிடங்கள் இன்றும் கூட நிரப்பப்படாமல் உள்ளது.


லோகோ பைலட்டுகளை பொறுத்தவரை, இந்திய ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட 1 லட்சத்து 27 ஆயிரத்து 644 ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் பணியிடங்களை காட்டிலும் இந்தாண்டு நிலவரப்படி 20 ஆயிரத்து 766 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப் பணியிடம் என்பது ஒட்டுமொத்த ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர்களுக்கான பணியிடங்களில் 18.7% ஆகும். அனைத்து மண்டலங்களிலும் உதவி ஓட்டுநர்களை விட ஓட்டுநர்களுக்கான காலிப் பணியிடம் அதிகமாக உள்ளது.


அனுமதிக்கப்பட்ட 70 ஆயிரத்து 93 லோகோ பைலட்டுகளில் 14 ஆயிரத்து 429 ஓட்டுநர் பணியிடங்கள், அதாவது 20.5% காலியாக உள்ளது. அதேபோல் அனுமதிக்கப்பட்ட 57 ஆயிரத்து 551 உதவி ஓட்டுநர்கள் பணியிடங்களில் 4 ஆயிரத்து 337 பணியிடங்கள், அதாவது 7.5% காலியாக உள்ளது. இவை இன்னும் அதிமாக இருக்கும் என கூறப்படுகிறது.


ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க மற்றும் ரயில் விபத்துகளை குறைக்க, நல்ல உடல் தகுதியுடன் உள்ள 65 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்களை ரயில் லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பு பொறியாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


* ரயில் தாமதம் இயல்புதான்…தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது: காலிப் பணியிடங்கள் இந்தாண்டுக்குள் நிரப்பப்படவுள்ளது. தெற்கு ரயில்வேக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தண்டவாளப் பணிகளில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் ஒப்பந்த முறையில் உள்ளனர்.


காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர், அவர்கள் அனுப்பப்படுவர்.

ரயில் தாமதம் ஆங்காங்கே இருப்பது இயல்புதான், இருந்தாலும் அவற்றை ஆராய்ந்து வருகிறோம். சென்னையில் அடிக்கடி நிறுத்தப்படும் மின்சார ரயில்கள், சிக்னலிங் பராமரிப்பு பணிக்காகத்தான். வரும் காலங்களில் புறநகர் ரயில் சேவையில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க பணிகள் நடைபெற்று வருகிறது.


கும்பமேளா முடிந்த பின்னர் அந்தந்த மண்டலங்களுக்கான ரயில்கள் வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?