திருப்பரங்குன்றம் to சென்னை
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, "ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை யின் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழிபாதை, நெல்லித் தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.
பேரணிக்காக கோரியுள்ள பாதை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலை என்கிற காரணம் மட்டுமின்றி வேறு எந்த இடத்தில் பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பத்தகாத பிரச்சனைகளை உருவாக்கும்.
ஏற்கனவே மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக பேரணி நடத்துவதை நீதிமன்றம் ஊக்குவிக்க கூடாது" என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரை திருப்பரங்குன்றம் சென்னைக்கு என்ன பிரச்சனை என்று கேட்டதோடு தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் என மனு தாரருக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் பேரணி நடத்திய இடம் கூட்ட நெரிசல் மிகுந்தது என்றும் வேறு இடத்தை தேர்வு செய்து தெரிவிக்குமாறு மனுதாரர் வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் "ஏற்கனவே மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட நீதிமன்ற நிபந்தனையை மீறி பொது அமைதிக்கும் மத நல்லிணத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளனர். அதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெருக்கடி இல்லாத பாதையில் பேரணி நடத்த மனுதாரர் முன் வந்தாலும் பேரணி நடத்த அனுமதிக்ககூடாது" என தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தார்.
மேலும் "இதுபோன்ற போராட்டங்களால் மத நல்லிணக்கம் பாதிக்கும். தமிழ்நாடு மத நல்லிணத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் என்றும் பெயர்பெற்றது. ஒரே சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர்.
மத நல்லிணக்கத்தை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது . எல்லோருடைய மத நம்பிக்கைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் எவரின் இடையூறுமின்றி பாதுகாக்கும்" என்றார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் வேலையில் அந்நாடு மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியவர்களை தேடிப் பிடித்து கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அவர்களை அவர்களது நாட்டுக்கே விமானம் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான இந்தியர்களும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்படும் நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் கடந்த வாரம் அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.கைது செய்யப்பட்ட இந்தியர்களின் கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டு மிக மோசமாக அமெரிக்க ராணுவத்தினர் நடத்தியுள்ளனர். இயற்கை உபாதைகளை போக்கவும் வழியில்லாமல் தவித்துள்ளனர். இந்தியாவுக்கு திரும்பியவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசினர். இது தொடர்பாக இந்திய அரசு, அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது.
இரண்டரை நிமிடங்கள்
கேரள நெடுஞ்சாலையில் பரபரப்பான ஒரு வங்கிக்குள் நேற்று நுழைந்த ஒருவர், அதன் ஊழியர்களை கத்தி முனையில் கழிவறையில் அடைத்து வைத்துவிட்டு, தனது ஸ்கூட்டரில் ரூ.15 லட்சம் ரொக்கத்துடன் இரண்டரை நிமிடங்களுக்குள் தப்பிச் சென்றார்.
நேற்று முழுக்க போலீசார் கொள்ளையனைத் தேடினர், ஆனால் இன்னும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நபர் அந்த இடத்தை நன்கு அறிந்தவராகத் தோன்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சூர் மாவட்டம் போட்டாவில் உள்ள ஃபெடரல் வங்கி கிளைக்கு வெளியே வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் முதுகுப்பை அணிந்த நபர் நின்று கொண்டிருப்பதை சிசிடிவி காட்சிகள் காட்டுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர் - அப்போது பெரும்பாலான ஊழியர்கள் மதிய உணவு இடைவேளையில் வெளியே சென்றிருந்தனர்.பணியில் இருந்த இரண்டு ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி, கழிவறைக்குள் அடைத்து வைத்த நபர், பின்னர் ஒரு நாற்காலியைப் பயன்படுத்தி பண கவுண்டரின் கண்ணாடி அறையை உடைத்து, பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்வதைக் காட்டுகிறது . இந்த முழு சம்பவமும் இரண்டரை நிமிடங்கள் மட்டுமே நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர் இந்தியில் பேசினார். பண கவுண்டரில் ரூ.47 லட்சம் மூட்டைகள் இருந்தன. கொள்ளையன் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மூன்று மூட்டைகளை மட்டுமே எடுத்துச் சென்றான். அலுவலகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர் போல் கிளை அலுவலகத்தில் நடந்து கொண்டான்.”என திருச்சூர்காவல் அலுவலர் கிராமப்புற எஸ்பி பி. கிருஷ்ண குமார் கூறியுள்ளார்.