இன்னும் உயரும்

 உரிமையைக் கேட்பதை அற்பத்தனமா ?

உரிமையைக் கேட்பதை அற்பத்தனம் என்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல். தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யச் சொன்னால் அதனை துரதிஷ்டவசமானது என்கிறார் அமைச்சர் பியூஸ் கோயல்.

இவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியைப் போல தலையாட்டிக் கொண்டிருந்தால்தான் சூப்பர் என்பார்கள்."ஒன்றிய அரசுக்கு வரி செலுத்துவதற்கு ஏற்ப மத்திய அரசு நிதியைப் பெற வேண்டும் என்ற சில மாநிலங்களின் கோரிக்கை 'அற்பத்தனமான சிந்தனை' மற்றும் 'துரதிர்ஷ்டவசமானது" என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.







"நாடு வளம் பெற வேண்டுமென்றால், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் போன்ற எட்டு வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார்" என்று பியூஸ் கோயல் பேசி இருக்கிறார். ஏன், இவைதான் இந்தியாவில் இருக் கிறதா? 

தமிழ்நாடும், கேரளாவும் கர்நாடகமும் மேற்கு வங்கமும் இந்தியாவில் இல்லையா? எங்கே இதைப் பேசி இருக்கிறார் தெரியுமா? அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மற்றும் 'மாநிலங்களுக்கு இடையேயான வாழ்வில் மாணவர் அனுபவம் (SEIL)' என்ற அமைப்புகளின் முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்யப்பட்ட'ராஷ்ட்ரிய ஏகாத்மத யாத்திரை 2025' நிகழ்வில் இவர் இப்படி பேசி இருக்கிறார்.

“கடந்த 11 ஆண்டுகளில், மகாபாரதத்தின் அர்ஜுனனைப் போலவே, மோடி அரசாங்கத்தின் 'லேசர் கவனம்' வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இருந்தது. சில மாநிலங்களும் சில தலைவர்களும் இதை அரசியலாக்குகிறார்கள். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில தலைவர்கள்... இரண்டரை ஆண்டுகளாக இருந்த முந்தைய அரசாங்கத்தின் தலைவர்கள், மும்பை மற்றும் மகாராஷ்டிரா செலுத்திய வரியைக் கணக்கிட்டு, அந்த அளவுக்கு (ஒன்றிய நிதியை) திரும்பப் பெற வேண்டும் என்று கோருவார்கள்.

suran

கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற சில மாநிலங்கள் தாங்கள் செலுத்திய வரித் தொகையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறுகின்றன. இதை விட அற்பமான சிந்தனை (சோட்டி சோச்) இருக்க முடியாது. இதை விட துரதிர்ஷ்டவசமான எதுவும் இருக்க முடியாது” என்றுபேசி இருக்கிறார் பியூஸ் கோயல்.

“ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள தற்போதைய பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம் வடகிழக்கு இந்தியாவை மிகவும் உணர்திறன் மிக்கதாக இருப்பதால் இப்போது கவலைப்படத் தேவையில்லை. 

கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு, வடகிழக்கு இந்தியாவிற்கு முன்னுரிமை அளித்து, 'கிழக்கு நோக்கிச் செயல்படு' மற்றும் 'கிழக்கு' நோக்கிப்பார்' என்ற கொள்கையைப் பின்பற்றி வருகிறது. 

பிரதமர் மோடி 65க்கும்மேற்பட்ட முறை வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். இப்பகுதியின் அழகையும் கலாச்சாரத்தையும் காண ஒரு முறையாவது அங்குச் சென்று பாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார் பியூஸ் கோயல்.

ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான அமைச்சர் என்பதை மறந்து பேசி இருக்கிறார் அமைச்சர் பியூஸ் கோயல். வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வது வேறு. யாரும் செல்லலாம். 

அதைக் குறை சொல்லப் போவது இல்லை. ஆனால் மொத்த இந்திய நிதி அனைத்தும் அந்த மாநிலங்களுக்குத் தான் என்று முடிவெடுக்க பியூஸ் கோயலுக்கு யார் அதிகாரம் தந்தது? அப்படி இந்த பத்தாண்டு காலத்தில் இவர்கள் சொல்லும் மாநிலங்களை எங்கே வளர்த்துள்ளனர்? ஏன் நடிக்கிறீர்கள்?

அவர் சொல்லும் மாநில மக்கள் மட்டும் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் போதும், மற்றவர்கள் வாக்களிக்கத் தேவையில்லை என்று பியூஸ் சொல்வாரா? 'எங்கள் மாநிலத்துக்கு ஏன் நிதி தர மறுக்கிறீர்கள்?' என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்கிறார்.

 கேரள முதலமைச்சர் கேட்கிறார். கர்நாடக முதலமைச்சர் கேட்கிறார். மேற்கு வங்க முதலமைச்சர் கேட்கிறார். 

அதற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு, அந்த மாநிலத்துக்கு அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று சொல்லி எதற்காக திசை திருப்ப வேண்டும்?

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு தரும் வரியின் அளவைச் சொல்லி அந்தளவுக்கு நிதிப் பகிர்வைக் கேட்கவில்லை. நமது மாநிலத்துக்கு தர வேண்டியதைத் தான் தாருங்கள் என்று கேட்கிறார்கள். அதைக் கூட தர மறுப்பது நியாயமா? மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்குவதாகச் சொல்லி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முறையாகக் கடைப்பிடித்த மாநிலங்களுக்கு நீதி இழைத்தார்கள்.

15வது கமிஷன் அமைக்கப்பட்டபோது, ​​அறிக்கை ஒன்றை வெளியிட்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். பத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினார்கள்.இன்றைக்கு பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அப்போது என்ன சொன்னார் தெரியுமா?

“மத்திய அரசுக்கு அதிகமான அளவு வருவாயை கொடுக்கும் மாநிலங்களாக தென் இந்திய மாநிலங்கள் உள்ளன. ஆனால் வட மாநிலங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன” எனக் குற்றம்சாட்டினார். இப்போது அவர் இதனை வெளிப்படையாகச் சொல்வாரா எனத் தெரியாது. இதனை 'அற்பத்- தனம்' என்பாரா பியூஸ் கோயல்?

“குஜராத் மக்கள் ரூ.60 ஆயிரம் கோடியை டெல்லிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் திரும்ப வருவது மிகக் குறைவு. குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா?” என்று 6.12.2012 அன்று குஜராத் முதலமைச்சராக இருக்கும் போது கேட்டவர் தான் நரேந்திரமோடி அவர்கள். மோடி அன்று கேட்டது அற்பத்தனமான கோரிக்கையா?


இன்னும் உயரும்

தங்கம் விலை இன்னும் உயரும். எந்த அளவுக்கு உயர வேண்டுமோ அதை இன்னும் தங்கம் விலை அடையவில்லை. 

எனவே இன்னும் தங்கம் விலை உயரும். கூடிய விரைவில் ஒரு பவுன் தங்கம் விலை 65 ஆயிரத்தை கடந்து செல்லும் அமெரிக்க அதிபரின் அறிவிப்புகள். அந்த அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படும் போது, தங்கம் விலை இன்னும் அதிகமாகும்.

suran

பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். டிரம்பின் அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் வரும். 

இந்த பொருளாதார மாற்றம் தங்கம் விலையில் தான் தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் ஏற்படும் இந்த சீரழிவினால், பொருளாதாரத்துறையை சார்ந்த முதலீட்டாளர்கள், பங்குச்சந்தையை சார்ந்தவர்கள் முதலீடு செய்ய தயங்குவார்கள். 

இதனால் அவர்களது முதலீடுகள் தங்கத்தின் மீது தான் இருக்கும். எனவே இன்னும் ஓரிரு மாதத்தில் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்தை தாண்டும். வர்த்தக போர் நடக்கும் சூழல் காரணமாக உலகத்தில் உள்ள பலரும் தங்கத்தின் மீது தான் முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. 

எனவே தங்கம் விலை மேலும் மேலும் உயரும். இது ஒரு தொடக்கம் தான், இனியும் தங்கம் விலை உயரத்தான் செய்யும். சுப முகூர்த்த தினங்களில் தங்கம் விலை அதிகரிக்கிறது என்பது எல்லாம் காரணம் அல்ல. இதற்கும் தங்கம் விலைக்கும் சம்பந்தம் இல்லை. தங்கம் விலையை நிர்ணயிக்கும் சக்தி இந்தியாவிடம் இல்லை.

 தங்கத்தின் மீது தான் முதலீடுகள் அதிகரிக்கும் என்பதால் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பு குறைவு" என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 640 அதிகரித்தது. இதனால் ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுன் ரூ. 64 ஆயிரத்து 480-க்கு விற்றது.

அதேபோல் ஒரு கிராம் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக ரூ. 8 ஆயிரத்தை தாண்டியது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.8 ஆயிரத்து 60-க்கு விற்றது. கடந்த 10 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ 2,160 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

 இது ஏழை-நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை உயர்வு என்பது வெறும் தொடக்கம் தான்.

 இன்னும் ஓரிரு மாதங்களில் ஒரு பவுன் தங்கம் விலை 70 ஆயிரத்தை தாண்டும் எனத்  தெரிகிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?