இந்தியா பயனடைய

 தமிழ்நாடு அரசு லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கத்தை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை மனிதவள மேலாண்மை துறை செயலர் ஜி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.


அந்த அறிவிப்பில், “தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டப்படி, லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கும்.
suran

ஒரு தலைவர், 2 நீதித்துறை உறுப்பினர்கள், நீதித்துறை சாரா 2 உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இருப்பார்கள். இதில், தலைவர் மற்றும் நீதித் துறை சாராத உறுப்பினர்கள் பணியிடம் காலியாக இருந்த நிலையில், தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, தற்போது நீதித்துறை சார்ந்த உறுப்பினராக உள்ள சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கம், லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜமாணிக்கம் 2027 ஏப்ரல் 17ஆம் தேதி வரை பதவியில் இருப்பார். புதிய உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது - இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள்” என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

காலியாக உள்ள நீதித் துறை சாரா உறுப்பினர்கள் இடங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட நுகர்வோர் விவகாரங்கள் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர் வி.ராமராஜ், வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளனர்.
-------------------------------------------------
suran


தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை எதிராக எதிர்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் தங்களது வீடுகளுக்கு முன்பு மும்மொழி கொள்கைக்கு எதிராக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கோலமிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
------------------------------------------------------
suran
--------------------------------------------------------------
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் 

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.

ஹிந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பல்வேறு பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

அதில், “திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

suran

இதற்காக அனுமதி கோரியிருந்த நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.

பொதுமக்கள் யாரும் அதில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், அதனை மீறி வருபவர்கள் மீதும், அவர்களுடைய வாகனங்கள் மீதும், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது ஏற்கத்தக்கது அல்ல.அதோடு மதுரை மாவட்ட ஆட்சியர் சட்ட, ஒழுங்கு பிரச்சனையை காரணம் காண்பித்து 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் வாகனங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பிறப்பித்த செய்தி அறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இதே போல திருப்பரங்குன்றம் மலைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என தனியே பல்வேறு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் தரப்பில், “இரு தரப்பினரும் திருப்பரங்குன்றம் மலையை உரிமை கோருவதாக சண்டையிட்டு வருவதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்”என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ளவர்கள் சண்டை போடவில்லை என்றாலும் இது போன்ற வழக்குகளை தாக்கல் செய்து நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல! ஏன் இது போன்று செய்கிறீர்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்தவர்கள் தரப்பில், “வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் வழிபாட்டுத் தலங்கள் குறித்த வழக்குகளை விசாரணை செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இவ்வாறு உள்ள நிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க முடியாது” என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், “வழிபாட்டுத்தலங்கள் குறித்து உச்ச நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. தொல்லியல் துறை குறித்த வழக்கில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி உரிய மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் ” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்தியா பயனடைய

சென்னையில் பிப்ரவரி 19 ஆம் தேதி அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா- தென் பிராந்தியத்தின் (அசோசெம்) எதிர்கால வேலை உச்சி மாநாடு 2025 இன் தொடக்க அமர்வு நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

''உலக பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் இந்திய மனித மூலதனம் முக்கிய பங்கு வகிக்கும்,'' என, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் கூறினார்.

"அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் உழைக்கும் வயது மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் இந்தியராக இருக்கப் போகிறார், இருப்பினும் மக்கள் தொகையின் அடிப்படையில் உலகில் 6 பேரில் ஒருவர் மட்டுமே இன்று இந்தியராக இருக்கிறார்" என்றும் தெரிவித்தார்.

"பார்ச்சூன் 500 நிறுவனங்களில் சுமார் 11% இந்தியர்கள், தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக வழிநடத்தப்படுகிறார்கள் என்றதை வைத்து கணக்கிடப்படுகிறது. அந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கப் போகிறது" 

suran
இந்தப் போக்கினால் இந்தியா பயனடையும், பல நூற்றாண்டுகளின் கல்வி என்ற ஆடம்பரத்தையும், அநேகமாக 30-40 ஆண்டுகள் பெரும் விரிவாக்கத்தையும் கொண்ட தமிழகம் மேலும் பயனடையும் என்று அவர் கூறினார்.

"சமூக-அரசியல் சச்சரவுகள் மற்றும் நிறைய இனவெறி பல இடங்களில் எழுவதால், நாம் ஒரு இரட்டை உலகத்தை உருவாக்குவோம் என்று நான் நினைக்கிறேன்" என்று சுட்டிக்காட்டினார். கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஸ்காண்டிநேவிய நாடுகள் போன்ற மக்கள் தொகை குறைந்து வருவதும், பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதும் திறன் வாய்ந்த திறமைசாலிகளின் இடம்பெயர்வை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.

அமெரிக்கா போன்ற நாடுகளில், குறைந்த பட்சம் குறுகிய காலத்திற்காவது, மற்றும் இங்கிலாந்து போன்ற இடங்களில், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பின்னடைவு இருக்கும் என்று தியாக ராஜன் கூறினார். இது வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கும். இதன் மூலம் இந்தியாவும், தமிழகமும் பயனடையும் என்றார்.

"சிறந்த இணைய இணைப்புடன் தொலைதூரத்தில் நிறைய வேலைகள் நடக்கும். ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் நகரங்கள் ஏற்கனவே நன்கு இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஃபைபர்நெட் (டான்ஃபினெட்) திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்தின் ஆதரவுடன் 12,650 கிராமங்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம். எங்கெல்லாம் திறமை இருக்கிறதோ அங்கெல்லாம் படைப்புகள் இடம்பெயரும்" என்று தியாக ராஜன் கூறினார்.

'பணியின் புதிய முன்னுதாரணமாக திறமை, தொழில்நுட்பம் மற்றும் மாற்றம்' என்ற அறிவுசார் அறிக்கையையும் அமைச்சர் வெளியிட்டார். அகஸ்டஸ் அசரியா, அசோசெம் தென் மண்டல மனிதவளக் குழு மற்றும் ஏபிஎம்இஏ மண்டல இயக்குநர் - இஎல்ஆர், கைண்ட்ரில் இந்தியா, எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.முத்தமிழ்ச்செல்வன், அசோசெமின் தெற்கு மண்டல இயக்குநர் உமா எஸ் நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்திய எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்த சோர்ஸ் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின் 2025 நிகழ்வின் 14 வது பதிப்பில் பேசிய தியாக ராஜன், மென்பொருள் மற்றும் சேவைகள், ஆட்டோ மொபைல்கள் போன்ற பிற துறைகளில் வெற்றி பெற்றதைப் போலவே மின்னணு கூறுகளின் நிகர ஏற்றுமதியாளராக மாறுவதற்கான அனைத்து அம்சங்களும் இந்தியாவிடம் உள்ளன என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?