தவறான தகவல்
தவறான தகவல் - உண்மை சரிபார்ப்பகம்
பி.எம் ஸ்ரீ திட்ட நிதி முழுவதையும் மத்திய அரசு வழங்குவதாக அண்ணாமலை கூறியது தவறான தகவல் என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. பி.எம். ஸ்ரீ திட்ட நிதி முழுவதையும் ஒன்றிய அரசு தருவதில்லை என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் “60:40 என்ற அடிப்படையில் 60% ஒன்றிய அரசும், 40% மாநில அரசும் பங்கிட்டுக் கொள்கின்றன. திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 14,500 பள்ளிகளில் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளும் அடங்கும். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் 16,000 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என அண்ணாமலை கூறியது தவறான தகவல்” என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக சென்னை ஐகோர்ட் நீதிபதி நியாமானம்
லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பொறுப்புத் தலைவராக இருந்து வருகிறார். நீதித்துறை சாராத உறுப்பினர்களாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவரான முனைவர் வி.ராமராஜ் மற்றும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினரான வழக்கறிஞர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆலை தொடங்கும் ஜப்பான் நிறுவனம்
எலக்ட்ரானிக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜப்பானைச் சேர்ந்த முராட்டா மேனுஃபேக்சரிங் நிறுவனம் சென்னையில் ஆலை அமைக்கிறது. சென்னையில் அமைக்கப்படும் ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்க உள்ளது. முராட்டா நிறுவனம் 2026ம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளும் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.
12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்'' -
"தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. தி.மு.க ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலை. பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை.
அரசு பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால், இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. அரசு விழித்து கொண்டு, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்" என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- Feb 19, 2025 17:51 IST
'செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யுங்கள்' - சுப்ரீம் கோர்ட்டில் இ.டி மனு
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று: டொனால்ட் டிரம்ப்
இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் மிகுந்த மரியாதை உள்ளது. ஆனாலும் இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும். இந்தியாவிடம் அதிக பணம் உள்ளது. அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ரயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் 18 பேர் பலி: ரயில்வே பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு
டெல்லி ரயில்நிலைய கூட்டநெரிசலில் சிக்கி 18 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த மனுவுக்கு பதிலளிக்க ரயில்வேக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் வருகை பதிவு: தலையிட முடியாது - நீதிமன்றம் கருத்து
“வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது, முறையாக வருகை பதிவு இருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று கூறிய நீதிபதிகள், வகுப்பை தொடர அனுமதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து மாணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன் பிப். 25-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 25-ம் தேதி மதியம் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. மார்ச் 14-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யபடும் நிலையில், அதில் இடம்பெற உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஒரு வாரத்திற்குள் முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வைக்குழு கூட்டம் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஒரு வார காலத்திற்குள் முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வைக்குழு கூட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டத்தில் முன்வைக்கப்படும் பிரச்னைகளுக்கு அதற்கடுத்த 2 வாரங்களில் தீர்வு காண வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டுக்கு, கேரளா அனுமதி மறுக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையீடு காட்ட வேண்டுமா? என நீதிபதி கேள்வி எழுப்பினர். 25 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியில் கேரளா செயல்படுவதாக தமிழ்நாடு அரசு குற்றச்சாட்ட்டியது.
இந்தி எதிர்ப்பு - பாரதிதாசன் பாடலை மேற்கோள்காட்டி முதலமைச்சர் பதிவு
இந்தி எதிர்ப்பு குறித்த பாரதிதாசன் பாடலை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே' என தொடங்கும் பாரதிதாசன் பாடலை பதிவிட்டுள்ளார் முதலமைச்சர். மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த பதிவு உள்ளது. .
சென்னை- கோலமிட்டு மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு
சென்னை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியை திணிக்காதே! தமிழர்களை வஞ்சிக்காதே! என்ற வாசகத்தை கோலத்தில் போட்டு வருகின்றனர்.
"வேலை வாங்கித் தருவதாக பாஜக நிர்வாகி மோசடி"
மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார் பாஜக நிர்வாகி ஜெயராம். வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பாஜக நிர்வாகி ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி, அலுவலக உதவியாளர் பிரியா, மாமியார் சத்யா ஆகியோர் மீது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ் குமார் அளித்த புகாரில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குபதிவு செய்த தாம்பரம் மாநகர போலீசார் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு
2024-ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரிடர்களுக்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு ஆனால் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு கோரப்பட்ட நிதியை ஒதுக்கவில்லை. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2024-இல் 4 மாநிலங்களில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கியது உள்துறை அமைச்சகம்
"இந்தியை திணிக்காதே" - கோலமிட்டு மக்கள் எதிர்ப்பு
சென்னை மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக் வீடுகளின் வாசலில் கோலமிட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியை திணிக்காதே1 தமிழர்களை வஞ்சிக்காதே! மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே! உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை எழுதி மக்கள் கோலமிட்டனர்.
போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய POCSO குற்றவாளி பிடிபட்டார்
16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைப்பதற்காக நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்ட POCSO குற்றவாளி ஃபக்ருதீன் (20), தப்பியோடினார். இரவு முழுவதும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், மேலரிப்பாக்கம் ஏரிக்கரை அருகே பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
அதானி ஊழல் புகார்; இந்தியாவின் உதவியை கோருகிறது அமெரிக்கா!
தொழிலதிபர் அதானி மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு இந்தியாவின் உதவியை அமெரிக்கா கோருகிறது. அதானி விவகாரத்தில் விசாரனை நடத்த உதவுமாறு இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாலியல் அத்துமீறல் - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் அரசுப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் அளித்த புகாரில் பொறுப்பு தலைமை ஆசிரியர் பெருமாள் போக்சோ சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.
திருப்பூரில் பாலியல் கொடுமை- 3 பீகாரிகள் கைது
திருப்பூரில் கத்தி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசாவை சேர்ந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வேலை தேடி வந்த போது வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று நதீம், டானிஷ், முர்சித் ஆகிய 3 பேர் வன்கொடுமை செய்த நிலையில் மூவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அபராதமே ரூ.5,200 கோடியா
தென் மாவட்டங்களில் தாது மணல் கொள்ளை தொடர்பாக அபராதமே ரூ.5200 கோடி விதிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் எவ்வளவு கனிமம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும் என மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
- கொடுக்க முடியாது என்றால் கொடுக்க வைப்போம்
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கலாம் என்று கனவு காணாதீர்கள் உங்கள் கனவு ஒருபோதும் நனவாகாது. இந்தி படித்தவர்கள்தான் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்துள்ளார்கள்.இந்தி படிக்காதவர்கள் வேலை கொடுக்கிறார்கள். மத்திய அரசு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும். கொடுக்க முடியாது என்றால் கொடுக்க வைப்போம் என சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.